அந்தக் காலங்களில் வீட்டுக்கு வீடு தாத்தா, பாட்டிகள் இருப்பார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு எந்த நோய் என்றாலும் அதற்கான மூலிகைகளைக் கொண்டு கை வைத்தியம் செய்தே குணப்படுத்திவிடுவார்கள். ஆனால், இன்று அநேக வீடுகளில் தாத்தா பாட்டிகளே இல்லை. பணம், வேலை என்று பிள்ளைகள் நகர வாழ்க்கையைத் தேடிச் சென்று விட்டதால் தாத்தா, பாட்டிகளின் முக்கியத்துவம் இன்றைய குழந்தைகளுக்கு தெரியாமல் போய்விட்டது.
|
Thursday, February 5, 2015
உங்கள் வீட்டில் இருக்கா 15 மூலிகைகள்?
Wednesday, February 4, 2015
நீர்க்கட்டிகளை விரட்டினால்... வாரிசு ஓடி வரும்!
'குழந்தையின்மை பிரச்னைக்குத் தீர்வு தருகிறோம்' என்றபடி ஆரம்பிக்கப்பட்டிருக்கும் 'கருத்தரிப்பு மையங்கள்' பலவும், காசு பார்க்கும் வெறியில், பெண்களின் வாழ்க்கையோடு விளையாடுவது வாடிக்கையாகிப் போய்விட்டது. இதுதான் காரணம் என்பதை அறியாமல், 'கடவுளே சொல்லிட்டார்' என்பதுபோல, 'டாக்டர் சொல்லிட்டார்' என்றபடி நம்பிக்கையோடு நடைபோடுகிறார்கள் பெண்கள் பலரும். ஆனால், நிஜத்தில், பெரும்பாலும் மோசடி வேலைகளே நடக்கின்றன. இதைப் பற்றி கடந்த இரண்டு இதழ்களாக எழுதியிருந்தோம்.
உங்கள் பிரியாணியில் சிக்கனா...பூனைக்கறியா?
உங்கள் பிரியாணியில் சிக்கனா...பூனைக்கறியா?
|
அசைவ உணவுகளை விரும்பிச் சாப்பிடுவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை செய்தி. சென்னையில் புற்றீசல் போல சாலையோர கடைகள் செயல்படுகின்றன. இங்கு சுகாதாரம் என்பதை எழுதி வைத்து பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம். பெயரளவுக்கு கூட சுகாதாரத்தை இத்தகைய கடைகள் கடைப்பிடிப்பதில்லை.
அதோடு இங்கு சமைக்கப்படும் உணவுப் பொருட்களின் தரமும் படுமோசம். உணவு பொருட்களின் விலை குறைவு என்பதால் இந்தக் கடைகளில் கூட்டம் அலைமோதுகின்றன. ருசிக்கு சாப்பிடாமல் ஏதாவது பசிக்கு சாப்பிட வேண்டும் என்று நினைப்பர்களின் கூட்டம் இங்கு அதிகம். சாப்பிட்டு விட்டு பிறகு அவர்களுக்கு ஏற்படும் உபாதைகள் பல.
|
Tuesday, February 3, 2015
முட்டையின் பல்வேறு நன்மைகள்
சமையலறையில் பயன்படும் பொருட்களில் முட்டையும் ஒன்று. அந்த முட்டை சமைப்பதற்கு மட்டும் தான் பயன்படுகிறது என்று தெரியும்.
ஆனால் அந்த முட்டை சமைப்பதற்கு மட்டுமின்றி, பல வழிகளில் பயன்படுகிறது. அதிலும் இந்த முட்டையை வைத்து வீட்டில் உள்ள பல பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வையும் காண முடியும்.
|
Subscribe to:
Posts (Atom)