Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Showing posts with label உடல்நலம். Show all posts
Showing posts with label உடல்நலம். Show all posts

Thursday, January 21, 2016

சாப்பிட வேண்டிய தங்கம்!


உணவு
பழங்கள், காய்கறிகள் உடலுக்குப் பலத்தைத் தருபவை.  அதிலும், வைட்டமின் ஏ மற்றும் சி கூட்டணியான ஆரஞ்சு போன்ற மஞ்சள் நிற உணவுகளைத் தங்க உணவுகள் என்றே சொல்லலாம். இவற்றைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், மருத்துவமனை செல்ல வேண்டிய அவசியமே இருக்காது. ஆரோக்கியத்தைத் தந்து, புத்துணர்வைக் கூட்டும் இந்தக் உணவுக் கூட்டணி, உடலின் வெளிப்புறத்தையும், உட்புறத்தையும் தகதகக்கும் தங்கமாக மாற்றக்கூடியது.

Sunday, November 29, 2015

முருங்கைக்கீரை சூப்


  தினமும் முருங்கைக்கீரை சூப் குடித்து வந்தால்…
இயக்குநரும் நடிகருமான பாக்கியராஜ் அவர்களால் மிகுந்த பிரபலமான காய் என்று சொன்னால் அது முருங்கைக் காய்தான். முந்தானை முடிச்சு திரைப்படத்தில் காட்சி ஒன்றில் முருங்கைக்காயில் உள்ள‍ பலான பலான சமாச்சாரங்களை சொல்லியிருப்பார். இதன்பின்புதான் முருங்கை க்காய்க்கு ஏக கிராக்கி ஆனது.

Friday, August 28, 2015

மூட்டு வலிக்கு உருளைக்கிழங்கு சாறு



மூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே. இந்தப் பிரச்சினை இல்லாத இடமே உலகத்தில் இல்லை. அப்படிப்பட்ட மூட்டு வலி வரக் காரணம் நாம் காலைக்கடன் கழிக்கும் முறையே என்கிறது மருத்துவம். அதனால்தான் நம் நாட்டில் கால் முட்டியிலும் வெளிநாட்டவருக்கு இடுப்பு மூட்டிலும் இந்த மூட்டு தேய்மானம் வருகிறது. மூட்டுத் தேய்மானம் மூட்டழற்சி, முடக்குவாதம் என இரண்டு வகைப்படும்.

Saturday, August 8, 2015

கொஞ்சம் அமுதம் கொஞ்சம் நஞ்சு : அதைக் குடிக்காதீங்க!


ஒரே ஒரு நாள் வெளியில் தண்ணீர் குடித்துவிட்டாலும்கூட, உடனே சிலருக்குச் சளி பிடித்து மூக்கு ஒழுக ஆரம்பித்துவிடும், தொண்டை கட்டிக்கொள்ளும், காய்ச்சலும்கூட எட்டிப்பார்க்கலாம். டாக்டரிடம் போனால், அவர் முதலில் கேட்கும் கேள்வி, “வெளியே தண்ணீர் குடித்தீர்களா?” என்பதுதான்.
பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை பாட்டில் குடிநீரை வாங்கிக் குடிப்பதைப் பரவலாகப் பார்க்க முடிந்ததில்லை. போகுமிடத்தில் கிடைத்த தண்ணீரைத்தான் எல்லோரும் குடித்துக்கொண்டிருந்தோம். எல்லா நேரமும் பெரிய நோய்கள் தொற்றிக்கொண்டிருக்கவில்லை. ஆனால், இன்றைய நிலைமை தலைகீழாக இருக்கிறது. என்ன நோய் தொற்றிவிடுமோ என்ற அச்சத்தில், பலரும் லிட்டருக்கு 15 ரூபாய் கொடுத்து பாட்டில் குடிநீரை நம்பிக் குடிக்கிறோம்.

Tuesday, June 2, 2015


புற்றுநோய்க்கு புதிய மருந்து; 60 சதவீதம் பேருக்கு குணம் தெரிந்தது

PRINT   ·   T+  
புற்றுநோய்க்கு புதிய மருந்து நம்பிக்கையளிப்பதாக கூறப்படுகிறது
bbcபுற்றுநோய்க்கு புதிய மருந்து நம்பிக்கையளிப்பதாக கூறப்படுகிறது

புற்றுநோயை குணப்படுத்த கொடுக்கப்படும் இரண்டு வெவ்வேறு மருந்துகளை ஒன்றாக சேர்த்துக் கொடுத்தபோது, மெலனோமா எனப்படும் தோல்புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதமானோரின் புற்றுநோய்க் கட்டிகள் சுருங்கிவிட்டதாக ஆய்வில் தெரியவந்திருக்கிறது

Sunday, May 31, 2015

இனி டாக்டர் வேண்டாம்! வாட்டர் தெரபி போதும்!




இனி டாக்டர் வேண்டாம்! வாட்டர் தெரபி போதும்!


தினமும் காலையில் எழுந்தவுடன், வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதைதான் வாட்டர் தெரபி என்கிறார்கள் டாக்டர்கள். மனித உடலை சீராக வைக்கவும், ஆரோக்கியத்துக்கு வித்திடவும், தண்ணீர் மிகவும் முக்கியமான ஒன்று. தண்ணீர் குடிப்பதை பழக்கமாக்கி கொள்வதன் வாயிலாக, முழு ஆரோக்கியம் பெற முடியும்.
காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும், வெறும் வயிற்றில், 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். அதாவது, 5 முதல் 6 டம்ளர்கள் வரை தண்ணீர் குடிக்கவும். அதற்குப் பின் முகத்தைக் கழுவ வேண்டும்.
இந்த வாட்டர் தெரபியில் முக்கியமான விஷயம் என்னவென்றால், வெறும் வயிற்றில், 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கு, 1 மணி நேரத்திற்கு முன்பும், குடித்த, 1 மணி நேரத்திற்கு பின்பும் எதுவும் சாப்பிடக் கூடாது. வாட்டர் தெரபியை கடைபிடிப்பவர்கள், 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கு முந்தைய இரவில் மது அருந்தக்கூடாது.
தேவைப்பட்டால் வாட்டர் தெரபிக்கு, சூடேற்றிய தண்ணீரையோ அல்லது வடிகட்டிய தண்ணீரையோ பயன்படுத்தலாம். வாட்டர் தெரபியை புதிதாக ஆரம்பிக்கும் போது முதலில், 1.5 லிட்டர் தண்ணீரை குடிப்பதற்கு மிகவும் சிரமமாக இருக்கும். போகப்
போக பழகி விடும். 


வாட்டர் தெரபியின் நன்மைகள்:


1. மன அழுத்தத்திலிருந்து விடுதலை கிடைக்கும்.
2. நாள் முழுவதும் உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
3. உடலில் உள்ள நச்சுத் தன்மையை சிறுநீர் மற்றும் இனிப்பு ஆகியவற்றின் மூலம் வெளியேற்ற உதவுகிறது.
4. உடல் ஆரோக்கியத்தையும், தோலில் மினுமினுப்பையும் வழங்குகிறது.
5. உடல் சூட்டைத் தணிக்கிறது.
6. உடலில் இருக்கும் தேவையில்லாத பொருள்களை எளிதாக வெளியேற்ற உதவுகிறது.
7. வாட்டர் தெரபியை முறையாக கடைபிடித்து வந்தால், ஒரே நாளில் மலச்சிக்கல், 2 நாட்களில் அசிடிட்டி, 7 நாட்களில் நீரிழிவு, 4 வாரங்களில் புற்றுநோய், உயர் ரத்த அழுத்தம், 3 மாதங்களில் டி.பி, 10 நாட்களில் வயிற்றுக் கோளாறு உள்ளிட்ட பிரச்னைகள் கட்டுப்படும்.
தலைவலி, உடல்வலி, சிறுநீரகப் பிரச்னைகள், சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்கள், மூட்டுவலி, வயிற்றுப்போக்கு, மூலம், கண் சம்பந்தப்பட்ட நோய்கள், பெண்கள் சந்திக்கும் மாதவிடாய் சுழற்சி உள்ளிட்ட பல நோய்கள் வாட்டர் தெரபியால் காணாமல் போகும்.
இதென்ன புதிய சிகிச்சையாக இருக்கிறதே… வெறும் தண்ணீரை குடித்தால் இவ்வளவு நோய்கள் கட்டுப்படுமா…அப்படியானால் இனி மருந்து, மாத்திரை, டாக்டர்களே வேண்டாம் என்கிறீர்களா…? இன்றே துவக்குங்கள் வாட்டர் தெரபியை… ஆரோக்கியமான வாழ்வு உங்களுக்கு உத்தரவாதம்!
ஒரே ஒரு விஷயம். கிட்னி பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மட்டும், டாக்டரின் ஆலோசனை பெற்றபின் சிகிச்சையை மேற்கொள்ளவும்.


.

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!
தண்ணீர் மிகவும் சிறப்பான ஒரு பானமாகும். இத்தகைய தண்ணீரானது தாகத்தை தணிப்பதோடு, உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைத் தரக்கூடியதும் கூட. மேலும் தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால் பல்வேறு நோய்களில் இருந்து விடுபடலாம் என்பது தெரியுமா? பொதுவாக உடலில் ஏற்படும் நோய்களானது வயிற்றில் தான் உற்பத்தியாகிறது. எனவே வயிற்றை சுத்தமாக வைத்துக் கொண்டால், நோய்கள் வராமல் தடுக்கலாம். அதற்கு தண்ணீர் தான் பெரிதும் உதவியாக இருக்கும்.

இப்படி வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும் முறையானது ஜப்பானில் இருந்து வந்ததாகும். ஜப்பானிய மக்கள் தான் தினமும் காலையில் முகத்தை கழுவியதும் பற்களை துலக்காமல் கூட, 4 டம்ளர் தண்ணீரை குடிப்பார்கள். மேலுடம் அப்படி குடித்த பின்னர் 1 மணிநேரத்திற்கு எதுவும் சாப்பிடமாட்டார்கள். இதற்கு பெயர் தான் தண்ணீர் தெரபி. இதனால் தான் ஜப்பானிய மக்கள் எப்போதும் சுறுசுறுப்புடன் ஆரோக்கியமாக இருக்கின்றனர். இங்கு அதிகாலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் படித்து இனிமேல் காலையில் வெறும் வயிற்றில் தவறாமல் தண்ணீரை குடித்து வாருங்கள். அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளில் முதன்மையானது குடலானது சுத்தமாகும். அதற்கு தண்ணீர் குடித்தவுடன், சிறிது நேரத்திலேயே மலம் கழிக்கக்கூடும். இப்படி தினமும் தவறாமல் மலம் கழித்தாலேயே, உடலில் உள்ள கழிவுகளானது முற்றிலும் வெளியேறிவிடும். தண்ணீரானது உடலின் மூலைமுடுக்குகளில் தங்கியுள்ள நச்சுக்களை சிறுநீர் மூலமாக வெளியேற்றிவிடும். இதனால் உடலானது நச்சுக்களின் சுத்தமாக இருக்கும். தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்கள் வெளியேறி, விரைவில் பசி எடுக்க ஆரம்பித்துவிடும். பெரும்பாலானோருக்கு உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதால் தலைவலி அடிக்கடி ஏற்படும். அத்தகையவர்கள் தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தாண்ணீர் குடித்து வந்தால், உடலின் நீர்ச்சத்தானது அதிகரித்து, தலைவலியானது குறையும். காலையில் சாப்பிடாமல் அலுவலகத்திற்கு செல்பவர்கள், தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், அல்சர் ஏற்படாமல் தடுக்கலாம். காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிக் விகிதமானது 24 சதவீதம் அதிகரிக்கும். இதனால் உண்ணும் உணவானது விரைவில் செரிமானமடைந்துவிடும். வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், இரத்த சிவப்பணுக்களின் வளர்ச்சியானது அதிகரித்து, இரத்தமானது அதிகப்படியான ஆக்ஸிஜனை கொண்டிருப்பதால், உடலானது எனர்ஜியுடன் இருக்கும். எடையை குறைக்க நினைப்பவர்கள், அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், உடலில் தங்கியுள்ள நச்சுக்களுடன், உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதால் தேவையற்ற கொழுப்புக்களும் கரைந்து வெளியேறி, உடல் எடை குறைய உதவியாக இருக்கும். குடலானது சுத்தமாக இல்லாவிட்டால், முகத்தில் பருக்கள் வர ஆரம்பிக்கும். இப்படி பருக்கள் வந்தால் சருமமானது அழகை இழந்துவிடும். எனவே தினமும் தண்ணீரைக் குடித்து வந்தால், குடலியக்கம் சீராக நடைபெற்று, முகம் பருக்களின்றி பொலிவோடு இருக்கும். உடலுக்கு மிகவும் இன்றியமையாதது தண்ணீர். இத்தகைய தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பதால், உடலின் நோயெதிர்ப்பு மண்டலமானது வலுவடைந்து உடலை பாதுகாக்கும்.


Wednesday, May 20, 2015

நீரை கொதிக்க வைத்து தான் குடிக்க வேண்டுமா??


புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 3 நீரிழிவு மாத்திரைகள் விஷத்தன்மை வாய்ந்தவை: அமெரிக்கா எச்சரிக்கை!


புதிதாக அறிமுகப்படுத் தப்பட்ட 3 நீரிழிவு மாத்திரைகள் விஷத்தன்மை வாய்ந்தவை என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மாத்திரைகளை சாப்பிட்டு வருகின்றனர். அவர்களில் டைப்–2 நீரிழிவு நோயாளிகள் கனாக்ளிபுளோசின், டயாக்ளிபுளோசின் மற்றும் எம்யாக் புளோசின் ஆகிய 3 மாத்திரைகளை எடுத்துக் கொள்கின்றனர்.

Sunday, May 17, 2015

தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கேடானதா?

தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கேடானதா? சூரியகாந்தி எண்ணை சாப்பிடலாமா?

முன்பு எல்லாம் என்ன சொன்னார்கள்? தேங்காய் முழுக்க கொழுப்பு. அதனால் தேங்காய் எண்ணெய் சாப்பிடக்கூடாது. சூரியகாந்தி எண்ணெய்யில் சமையல் செய், கர்டி ஆயிலில் சமை, சோயா ஆயிலில் சமை என்றார்கள்.

Friday, May 15, 2015

ஆஸ்துமா அச்சம் வேண்டாம்! வந்தாச்சு புது சிகிச்சை


நீங்கள் மாசு நிறைந்த இடத்துக்குச் செல்கிறீர்கள். உங்களுக்கு வறட்டு இருமல் ஆரம்பிக்கிறது. இளைப்பு ஏற்படுகிறது. மூச்சு விட சிரமப்படுகிறீர்கள். நுரையீரலிலிருந்து ‘விசில்’ சத்தம் கேட்கிறது. நெஞ்சில் பாரம் ஏற்றி வைத்தது போல் உணர்கிறீர்கள். இந்த அறிகுறிகளில் ஒன்றிரண்டு தெரிகிறது என்றால் உங்களுக்கு ஆஸ்துமா இருக்கிறது என்று அர்த்தம்.

Sunday, May 10, 2015

மனிதக் கறி தின்னும் கார்ப்பரேட் மருத்துவர்கள்



“சாலை விபத்தில் சிக்கிய வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்.” “மூளைச் சாவு ஏற்பட்ட இளைஞரின் உறுப்புகள் தானம்’’  -இது போன்ற செய்திகளை மாதம் ஒருமுறையேனும் நீங்கள் படித்திருப்பீர்கள்.

டாக்டர் தம்பதியான அசோகன்-புஷ்பாஞ்சலியின் ஒரே மகன் ஹிதேந்திரன் மரணம்தான் இத்தகைய தானத்துக்கெல்லாம் மூலகாரணம். ஹிதேந்திரன் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட விஷயம், மீடியாக்கள் மூலம் பரவி, மிகப்பெரிய விழிப்பு உணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்தியது.

அலோபதி, சித்த மருந்துகளைச் சேர்த்துச் சாப்பிடலாமா?

எமது 1500 வது பதிவு இது:


மனிதர்களுடைய நோயைத் தீர்க்கவே அனைத்து வகையான மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த மருந்தைச் சாப்பிட்டால் குணம் கிடைக்கும், மற்றொரு மருத்துவ முறையில் தரப்படும் மருந்து வேண்டாம் என்ற மூடநம்பிக்கை தேவையில்லை. இது நம்மை நாமே துன்பப்படுத்திக் கொள்வது போன்றது. அலோபதி, சித்தா மருந்துகளைச் சேர்த்து உட்கொள்ளலாம். அதனால் கெடுதல் இல்லை.

Thursday, May 7, 2015

வாதக்காய்ச்சல் நோய் பற்றிய தகவல்கள்... தெரிந்துகொள்வோம் !

வாதக்காய்ச்சல் நோய் பற்றிய தகவல்கள்... தெரிந்துகொள்வோம் !!!
குழந்தைகளைப் பாதித்து இதயத்தின் வால்வுகளைச் சிதைக்கும் கொடிய தொற்றுநோய்களில் முதன்மையானது வாதக் காய்ச்சல் நோய் (Rheumatic Disease) நம் நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகையில் ஒரு சதவீதத்துக்கு மேற்பட்டோர் இந்த நோய்க்கு ஆளாகின்றனர். சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். வாதக் காய்ச்சல் நோய், குழந்தைகளை சுமார் 5 வயது முதல் 15 வயதுக்குள் தாக்கும்.

Wednesday, April 22, 2015

மாரடைப்பு வந்தவர்களுக்குப் பொன்னான நேரம்


டாக்டர் கு. கணேசன் எழுதிய ‘மாரடைப்புச் சந்தேகங்களும் டாக்டரின் ஆலோசனைகளும்’ நூலில் இருந்து பயனுள்ள சில பகுதிகள்:
ஒருவருக்கு மாரடைப்பு வந்த பின்னர், முதல் 60 நிமிடங்கள் அவருக்குப் `பொன்னான நேரம்’. இந்த நேரத்துக்குள் நவீன சிகிச்சைகள் தரக்கூடிய, அதாவது, கேத்லேப் வசதியுள்ள மருத்துவமனைக்குச் சென்று பிரைமரி ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையைச் செய்துகொண்டால், 100 சதவீதம் ரத்தக்குழாய் அடைப்பை நீக்கி, இதயத் தசைகள் பாதிப்படையாமல் பார்த்துக்கொள்ளலாம்.

Friday, April 17, 2015

இஞ்சிப் பால்..! நுரையீரல் சுத்தமாகும் !


இஞ்சிப் பால்..! இதை சாப்பிட்டால்…..
கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க. சுலபமா செஞ்சு முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்க பயமேன்? கவலையை விடுங்க.

ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி?

Tuesday, March 10, 2015

முள் முந்திரி


குமரி மாவட்டத்தில் பாஞ்சிக்காய்,முள்ளுசக்கை,சீமாத்திக்காய் என்றெல்லாம் அழைக்கப்படும் முள்முந்திரி ஒருகாலத்தில் ஒவ்வொரு வீட்டு வேலி ஓரத்திலும் காய்த்து தொங்கும்..!

புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க



வெறும் நூறு ரூபாயில் புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து !

புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் , சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை , வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டுபிடித்து , குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த வேதனை , ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும்.

போலி முட்டை...உஷார் !உஷார்!!



போலி முட்டை தயாரிக்க 7 வித ரசாயணங்களை பயன்படுத்துகிறார்கள் சீனர்கள். அதில் கால்சியம் கார்பனேட், ஸ்டார்ச், ரெசின், ஜெலட்டின், அலும் மற்றும் சில ரசாயணங்கள் அடக்கம்.

Tuesday, March 3, 2015

காப்பி அருந்துவதால் இரத்தக் குழாய் அடைப்பை தவிர்க்க முடியும்'

இதய நோய்களுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றான இரத்த குழாய்கள் கொழுப்பால் அடைபடுதலை, தினமும் 3 முதல் 5 காப்பிகள் வரை அருந்துவதன் மூலம் தவிர்க்க முடியும் என்று தென்கொரிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.


'

Friday, February 13, 2015

நித்தமும் பயன்படுத்தலாம் நீலகிரி தைலம்!


லைகளின் ராணி என்று அழைக்கப்படும் ஊட்டிக்கு சென்றால், யூக்லிப்டஸ் ஆயில் என்ற நீலகிரி தைலத்தை மறக்காமல் வாங்கி வரச் சொல்லுவோம்.  அந்த அளவுக்கு மகத்துவம் வாய்ந்த மருத்துவ மூலிகை எண்ணெய் இது.  ஒரு சொட்டு உள்ளங்கையில் விட்டு முகர்ந்து பார்த்தால், மூக்கடைப்பு சட்டென விலகும்.  சளியையும், தும்மலையும் தூரவிரட்டும்.