யா அல்லாஹ்!
சிறந்த வேண்டுகோளையும்
சிறந்த பிரார்த்தனையையும்
சிறந்த வெற்றியையும்
சிறந்த அமலையும்
சிறந்த நன்மையையும்
சிறந்த உயிர்வாழ்வையும்
சிறந்த மரணத்தையும் நான் உன்னிடம் கேட்கின்றேன்.
(யா அல்லாஹ்!)
என்னை நீ உறுதிப்படுத்துவாயாக!
என்னுடைய தராசை (நன்மையால்) அதிக எடையுள்ளதாகஆக்கியருள்வாயாக!
என்னுடைய ஈமானை (நம்பிக்கையை) உறுதிப்படுத்துவாயாக!
என் அந்தஸ்தை உயர்த்துவாயாக! என்னுடைய தொழுகையைஏற்றுக் கொள்வாயாக!
என் பாவத்தை மன்னித்தருள்வாயாக!
(யா அல்லாஹ்!)
சுவர்க்கத்தில் உயர்ந்த அந்தஸ்துக்களையும் நான் உன்னிடம்கேட்கின்றேன்.
(தப்ரானி)
உயர்ந்தோன் அல்லாஹ் கூறினான்: என் அடியான் என்னைப் பற்றிஎன்ன நினைக்கிறானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்துகொள்வேன். அவன் என்னை நினைவு கூரும்போது நான்அவனுடன் இருப்பேன். அவன் என்னைத் தன் உள்ளத்தில் நினைவுகூர்ந்தால் நானும் அவனை என் உள்ளத்தில் நினைவு கூறுவேன்.அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவு கூர்ந்தால்அவர்களைவிடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான்நினைவு கூறுவேன். அவன் ஒரு சாண் அளவுக்கு என்னைநெருங்கினால் நான் ஒரு முழமளவுக்கு அவனை நெருங்குவேன்.அவன் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் நான்(வலதும் இடதுமாக விரித்த) இரண்டு கைகளின் நீள அளவுக்குஅவனை நெருங்குவேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால்நான் அவனை நோக்கி ஓடிச் செல்வேன் என நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்.
· புஹாரி : 7405 அபூஹுரைரா (ரலி).
யா அல்லாஹ்! எனது மார்க்கத்திலும் எனது உலக வாழ்விலும்எனது குடும்பத்திலும் எனது செல்வத்திலும் மன்னிப்பையும்நலனையும் நான் உன்னிடம் கேட்கின்றேன். யாஅல்லாஹ்!என்னுடைய குறைகளை மறைப்பாயாக! யாஅல்லாஹ்! என்அச்சங்களை அகற்றி எனக்கு அமைதியைத் தந்தருள்வாயாக!யாஅல்லாஹ்! எனக்கு முன்னாலிருந்தும் பின்னாலிருந்தும் எனதுவலது புறமிருந்தும் இடது புறமிருந்தும் எனக்கு மேலிருந்தும்எனக்குப் பாதுகாப்பு அளிப்பாயாக! எனக்கு கீழ்புறத்திலிருந்து நான்எதிர்பாராத விதமாகக் கொல்லப்படுவதை உன் வல்லமையைக்கொண்டு நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்.(அபூதாவூத்)
யா அல்லாஹ்! நீயே என் இரட்சகன்! வணக்கத்திற்குரிய இறைவன்
உன்னைத்தவிர வேறு யாருமில்லை. நீயே என்னைப் படைத்தாய்.
நான் உன்னுடைய அடிமை. நான் என்னால் முடிந்த அளவிற்கு
உனது உடன்படிக்கை மற்றும் வாக்குறுதியின் மீது
நிலைத்திருக்கின்றேன். நான் செய்த சகல... தீமையைவிட்டும்
உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். நீ எனக்களித்த
அருட்கொடைகளைக் கொண்டு உன்பக்கமே நான் மீளுகின்றேன்.
இன்னும் என்னுடைய பாவங்களை (மனமாற) ஒப்புக்
கொள்கின்றேன். எனவே, என்னை நீ மன்னித்தருள்வாயாக!
உன்னைத் தவிர வேறு யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது. (புகாரி)
யா அல்லாஹ்! நீயே என் இரட்சகன்! வணக்கத்திற்குரியஇறைவன் உன்னைத்தவிர வேறு யாருமில்லை. நீயே என்னைப்படைத்தாய்.
யாஅல்லாஹ்! என்னுடைய குறைகளை மறைப்பாயாக!யாஅல்லாஹ்! என் அச்சங்களை அகற்றி எனக்கு அமைதியைத்தந்தருள்வாயாக!...
2:286. அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ளமுடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை; அது சம்பாதித்ததின்நன்மை அதற்கே; அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்:) “எங்கள் இறைவா!நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறுசெய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள்இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையைபோன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா!எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையைஎங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப்பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக!எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்;காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய)எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!”...
· யா அல்லாஹ் என்னுடலில் எனக்கு ஆரோக்கியத்தைஅருள்வாயாக. யா அல்லாஹ் எனது செவிப்புலனில் எனக்குஆரோக்கியத்தை அருள்வாயாக. யா அல்லாஹ் எனதுபார்வையில் எனக்கு ஆரோக்கியத்தை அருள்வாயாக.வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும்இல்லை.
யா அல்லாஹ், எனது சிறிய, பெரிய, ஆரம்பமான, இறுதியான,மறைவான, பகிரங்கமான, அனைத்து பாவங்களையும்மன்னிப்பாயாக.
அல்லாஹ்வின் பரிபூரணமான வார்த்தைகளை கொண்டுபாதுகாப்பு
தேடுகிறேன், அவன் படைத்த பொருள்களின் தீங்கினை விட்டும்
பாதுகாப்பு தேடுகிறேன்.
யாஅல்லாஹ்! எனக்கு கிருபைசெய்வாயாக!
எனக்கு பாதகமாக கிருபை செய்யாதிருப்பாயாக!
எனக்கு உதவி செய்வாயாக!
எனக்கு பாதகமாக உதவி செய்யாதிருப்பாயாக!
எனக்காக சூழ்ச்சி செய்வாயாக!
எனக்கு பாதகமாக சூழ்ச்சி செய்யாதிருப்பாயாக!
எனக்கு நேர்வழியை காட்டுவாயாக!
நேர்வழியை எனக்கு எளிதாக்குவாயாக!
எனக்கு அநீதி செய்பவருக்கு பாதகமாக எனக்குஉதவிசெய்வாயாக!
உனக்கு நன்றி செலுத்துபவனாக, உன்னை நினைவு கூர்பவனாக,உன் மீது அதிக அச்சம் கொள்பவனாக, உனக்கு வழிப்படுபவனாக,கட்டுப்படுபவனாக, அடிபணிபவனாக, சரணடைபவனாக என்னைஆக்குவாயாக!
இறைவா!
எனது பாவமன்னிப்பை ஏற்றுக் கொள்வாயாக!
எனது பாவங்களை போக்கிடுவாயாக!
எனது பிரார்த்தனைக்கு பதிலளிப்பாயாக!
எனது ஆதாரங்களை நிலைபெறச் செய்வாயாக!
எனது உள்ளத்திற்கு நேர்வழி காட்டுவாயாக!
எனது நாவை பலப்படுத்துவாயாக!
எனது உள்ளத்தின் கசடுகளை அகற்றிடுவாயாக!
(ஆதாரம்: திர்மிதி, அபூதாவூத்)
Engr.Sulthan