அருமை நண்பர்களே !!!
கால்ஷியம் கார்பைடு
கற்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?,!!!அது ஏற்படுத்தும் சுகாதார
சீர்கேட்டை,நோய்களைப் பற்றி அறிவீர்களா?!!! இன்றைய சமூகத்தில் பேராசை
பிடித்த வியாபாரிகளின் பணம் சம்பாதிக்கும் வெறிக்கு அப்பாவி பொதுமக்கள்
பலியாகி வருவது கண்கூடாயிருக்கிறது, நம் நாட்டில் தான் படிக்காதவர்கள் கூட
கேடுவிளைவிக்கும் ரசாயனங்களையும்,
கனிமங்களையும் கையாள்வது வாடிக்கையாகியுள்ளது. நம் நாட்டில் தான் மனித
உயிர்களுக்கு மதிப்பே இல்லாத நிலை நிலவிவருகிறது. இது அவசர யுகம்,
எல்லாவற்றிற்குமே அவசரம் தான்,விதைப்பதற்கும் அவசரம், விளைச்சலுக்கும்
அவசரம், அறுவடைக்கும் அவசரம், அதை பழுக்க வைப்பதற்கும் அவசரம், இதன்
பின்னால் இருப்பது அருவருக்கத்தக்க பணம் சம்பாதிக்கும் வெறியன்றி
வேறில்லை.இன்றைய ஏனைய பழ
வியாபாரிகள் ஈசி மனி செய்ய நாடுவது கால்சியம் கார்பைட் கற்களைத்தான்.
பழவியாபாரிகளது மண்டிகள் அல்லது கிடங்குகளில் வாழை, பலா,பப்பாளி, கொய்யா,சீதாப்பழம்,மாங்காய்களை குவியல் குவியலாக கொட்டி வைத்து , அந்த குவியலுக்குள்ளே சின்னத் துளையிட்ட பாலித்தீன் பைகளில் இந்த கால்சியம் கார்பைடு கற்களைப் போட்டு வைத்து விடுவார்கள் . கால்சியம் கார்பைடில் ஆர்சனிக் , பாஸ்பரஸ் இரண்டும் கலந்திருக்கும் . இது மிகவும் நச்சுத் தன்மை உடையது . இதிலிருந்து வெளிவருகிற அசெட்டிலின் வாயு காய்களின் மீது பரவி , பழுத்தது போன்ற தோற்றத்தை உண்டாக்கும் . ஆனால் , உண்மையில் உள்ளூக்குள் பழுத்திருக்காது . நூறு கிலோ காய்களைப் பழுக்க வைக்க நாற்பது கிராம் கால்சியம் கார்பைடு கல்லே போதுமானது என்றால் எவ்வளவு பெரிய கொடிய நச்சுவை நாம் இது வரை உட்கொண்டிருக்கிறோம் என விளங்கும். . In the ripening of fruit, calcium carbide is used as source of acetylene gas, which is a ripening agent. (similar to ethylene which has the IUPAC name of ethene and the chemical formula of C2H4)[ஆதாரம்-விக்கிபீடியா]
செயற்கையாக பழுக்க வைத்த பழங்களை ஒருவர் பார்த்தவுடன் கண்டறிய முடியாது என்பதால், அதை வாங்கும் பொதுமக்களாகிய நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உதாரணத்துக்கு ருசித்து பார்த்து பழுத்ததற்கேற்ற இனிப்பு இருந்தால் மட்டுமே வீட்டு உபயோகத்துக்கு வாங்கலாம், அல்லது வீட்டில் நேரடியாக விளைவதை வாங்கி சாப்பிடலாம். தமிழகம் முழுக்கவே சில வருடங்களாக கால்சியம் கார்பைட் கற்களை பயன்படுத்தி செயற்கையாக பழுக்க வைத்த வாழைப்பழம், மாம்பழங்களையும் கொய்யா,பப்பாளி திராட்சைகளையும் கூட பரவலாக விறபனை செய்து வருவது கண்கூடு, திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது!!!,அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது!!!.ஆனால் நடவடிக்கைகள் தான் கடுமையாக இல்லை என்பேன், வாழைப்பழம் ஒரு சாதாரணப் பழவகையைச் சேர்ந்ததாக இருந்தாலும், அதன் மருத்துவ குணங்கள் அதிசயிக்கத்தக்கது,இதில் குளூக்கோஸ், ஃபிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற சர்க்கரைகளுடன் நார்ச்சத்தும் அடங்கி உள்ளதால் அற்புதமான உணவாகும்.ஏழைகளின் பழம் என்றும் சொல்லுவர்,ஆனால் இதைக்கூட சதிகாரர்கள் கார்பைட் கற்கள் கொண்டே பழுக்க வைக்கின்றனர்.
இப்பழத்தை
உண்போருக்கு வயிற்றுப்போக்கு, பேதி, கேன்சர் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.
இயற்கையானவற்றை விட "மினுமினுப்பு' கூடி, நன்கு பழுத்த பழம் போல, மக்களை
கவரும் இந்த பழங்கள் மிக விஷமானவை. பழங்களின் தோலில் சுருக்கம் இருந்தால்
அது இயற்கையான பழம் என வாடிக்கையாளர்கள் நினைக்கின்றனர். அது முழுவதும்
சரியானதல்ல. இயற்கையான மாம்பழம் தோல் சுருக்கம்
இல்லாமலும் உள்ளன. அதேபோல செயற்கையான மாம்பழங்களின் தோலில் கறுப்பு
புள்ளிகள் இருக்கும் என கூறப்படுகிறது. அதுவும் தவறானதே. ஏனெனில் நோய்
தாக்குதலாலோ, மாங்காய்களின் பால் படுவதாலோ கூட கறுப்பு புள்ளிகள் தோன்ற
வாய்ப்புள்ளன. எனவே செயற்கையாக பழுத்த பழங்களை கண்டு பிடிப்பது கடினமான
காரியம்.
கால்சியம்
கார்பைடு வெளியிடும் அசெட்டிலின் வாயுவை சுவாசித்தாலே உடல் நலம்
பாதிக்கும் . இதனால் முதுமைத் தோற்றம் , இதய நோய் , புற்று நோய் கூட வரலாம்
என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள் . வெல்டிங் செய்ய உபயோகிக்கும்
கால்சியம் கார்பைடு , தடை செய்யப்பட்ட ரசாயனம் .ஆனாலும் மனசாட்சியே இல்லாத
சில ரசாயன வியாபாரிகள் கள்ளச்சந்தையில்
இது போன்ற பழவியாபாரிகளுக்கு கால்சியம் கார்பைடை சப்ளை
செய்கின்றனர்.இவர்களை ஜாமீனில் வெளிவரமுடியாத கடுமையான சட்டங்களில்
சிறையினால் தள்ளினாலே ஒழிய ,இது தொடந்து கொண்டுதான் இருக்கும்,இது போல சில
பணத்தாசை பிடித்த வியாபாரிகளால் சமூகத்தில் இருக்கும் சில நல்ல
வியாபாரிகளுக்கும் கெட்ட பெயர்.நீங்கள் எந்த பழ வியாபாரியிடமாவது இதுபோல
கார்பைட் கற்களால்
பழுக்கச்செய்யப்பட்ட பழங்கள் வாங்கி ஏமாந்திருந்தால் உடனே சுகாதாரத்துறை ஆய்வாளருக்கு 1913 என்னும் எண்ணில் புகார் தெரிவிக்கவும். சுட்டியை அழுத்தி மேல்விபரங்கள் பெறலாம்
கால்சியம் கார்பைட் கற்களின் படம்[விக்கீபீடியா] |
கால்சியம் கார்பைடின் ரசாயன குணங்கள்:-
Hazards | |
---|---|
NFPA 704 |
Health (Blue)
Flammability (Red)
3 Liquids and solids that can be ignited under almost all ambient temperature conditions (e.g., gasoline).
Liquids having a Flash point below 23°C (73°F) and having a Boiling
point at or above 38°C (100°F) or having a Flash point between 23°C
(73°F) and 38°C (100°F)
Instability/Reactivity (Yellow)
Undergoes violent
chemical change at elevated temperatures and pressures, reacts violently
with water, or may form explosive mixtures with water (e.g., phosphorus, potassium, sodium)
Special (White)
நன்றி விக்கீபீடியா.