ஜூன் மாதம் மேட்டூர் அணை திறந்த ஆறாவது நாளில் காவிரியின் எல்லாக்
கிளைகளிலும் காவி நிறத்தில் நுங்கும்நுரையுமாகத் தண்ணீர் கரை தொட்டு ஓடும்.
இதே ஆறாவது நாளில் காவிரிப் பகுதி நகரங்கள், கிராமங்களில் உள்ள எல்லாக்
குளங்களையும் குட்டைகளையும் புதுத் தண்ணீரால் நிரப்பிவிடுவார்கள்.