காஃபி (Coffee) இதை நாம் அனைவரும் விரும்பி அருந்தும் பானம். இந்தக் காஃபி எங்கிருந்து தோன்றியது தெரியுமா? எதியோப்பியாவில்தான் முதன் முதலில் காஃபிச் செடிகள் தோன்றின. 
ஆனால் ஒரு செவி வழி கதை பரவலாக உண்டு கதையின் படி, ஆப்பிரிக்காவில் உள்ள எத்தியோப்பியா நாட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிலர் ஒரு நாள் சில ஆடுகள் அதிக ஆட்டத்துடன் உலாவி வந்ததையும், இரவிலும் தூங்காமல் இருந்ததையும் கண்டு வியந்தார்கள்.