மழைத்துளி சிப்பிக்குள் விழுந்து முத்தாகிறது என்கிறார்களே… அது உண்மை இல்லை. அது கவிஞர்களின் கற்பனை. உண்மை என்ன தெரியுமா-?
முத்துச் சிப்பிகள் கடலின் அடி ஆழத்தில்
வாழ்பவை. முத்துக் குளிக்கின்றவர்கள் கூட கடலின் அடிக்குச் சென்று தான்
முத்து எடுப்பர். இதனை முத்துக் குளித்தல் என்று கூறுவார்கள். எனவே
முத்துச் சிப்பிக்குள் மழை நீர் விழ வாய்ப்பே இல்லை. மழைநீர்த் துளிகள்
கடலின் மேற்பரப்பில் விழக்கூடியது. வீழ்ந்தவுடனே கடல் நீரில் கலந்துவிடும்.
அடியாழத்தில் உள்ள சிப்பிக்குள் மழைநீர் செல்லாது.