Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Showing posts with label உடல் நலம். Show all posts
Showing posts with label உடல் நலம். Show all posts

Wednesday, September 2, 2015

சென்னையில் ஓர் சிறுதானிய உணவகம்!

லகமயமாக்கலுக்கு பின் தமிழக மக்களை மெல்ல கட்டிப்போட்டது மேற்கத்திய உணவுகளின் சுவை. இதுவே பொழுதுபோக்கு அரங்குகளிலும், தொழில்நுட்ப நிறுவனங்களிலும் அவர்கள் கொடி கட்டி பறக்க உதவுகிறது. நாவிற்கு சுவையளிக்கும் இந்த உணவுகள் உடலிற்கு நோயளிக்க தவறுவதில்லை. ஆக, நம் உடலை பாதுகாத்தே ஆக வேண்டிய கட்டாயத்துடன்தான் நாம் வாழ்கிறோம்.

Friday, August 28, 2015

நோய்களை குணமாக்கும் தண்ணீர்: சூப்பர் டிப்ஸ்


நோய்களால் அவதிப்படும்போது மருத்துவரின் பரிந்துரையின் பேரில் பணம் கொடுத்து மருந்துகளை வாங்கி சாப்பிடுகிறோம்.
ஆனால், பணம் செலவழிக்காமல் நமக்கு ஆரோக்கியமான வாழ்க்கை தருவது தான் தண்ணீர்.

மனிதனின் உடல் உழைப்புக்கு ஏற்றவாறு நீர்ப்போக்கு ஏற்படுகிறது, ஒரு நாளைக்கு ஆண்கள் 3 லிட்டர் தண்ணீரும், பெண்கள் 2.2 லிட்டர் தண்ணீரும் அருந்த வேண்டும்.

பூசணிக்காயை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.


பூசணிக்காயில் மறைந்திருக்கும் ஏராளமான சத்துக்கள் உடல் நலத்திற்கு பலவிதமான நன்மைகளைத் தருகிறது.
பூசணிக்காய் திருஷ்டி கழிப்பதற்கு மட்டுமல்ல, திடமான உடல் ஆரோக்கியத்திற்கும் பயன்படுத்தலாம். இதை உணவாக எடுத்து வரும் போது நமது உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் குணமடைகின்றன.

ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்கள்!!!


பெண்கள் தங்கள் உணவில் ஒருசில உணவுப் பொருட்களை தவறாமல் சேர்த்து வர வேண்டும். மேலும் ஆண்களை விட பெண்களுக்கு நிறைய ஊட்டச்சத்துக்கள் வேண்டும். எனவே பெண்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட வேண்டும். குறிப்பாக கீரைகள், தானியங்கள், நட்ஸ் போன்ற உணவுப் பொருட்களை கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவைகளில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவை வளமாக நிறைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

Saturday, August 8, 2015

தேங்காய் தண்ணீர் குடித்தால் நிகழும் மாற்றங்கள்

ஏழு நாட்கள் தொடர்ந்து தேங்காய் தண்ணீர் குடித்தால் நிகழும் மாற்றங்கள் என்னவென்று தெரியுமா!

இளநீரின் நன்மைகளைப் பற்றி

Monday, April 27, 2015

நுரையீரலை சுத்தப்படுத்தும் உணவுகள் :-

பல்வேறு காரணிகளால் காற்று மாசுபாட்டில் ஏற்பட்டுள்ள பன்மடங்கு உயர்வு, மிகக் கடுமையான சுவாசக் கோளாறுகளுக்கு வித்திட்டு நுரையீரலுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது.

Sunday, April 19, 2015

முந்திரி பருப்பின் முத்தான நன்மைகள்

தாவரவியல்படி முந்திரியின்  பேரினம் அனகார்டியம், ஆகும். இதன் அறிவியல் பெயர் அனகார்டியம் ஆக்ஸிடென்டேல்  மற்றும் அனகார்டியேசியே குடும்பத்தை சேர்ந்ததாகும். இது மர வகையை சார்ந்த  பணப்பயிராக உள்ளது. முந்திரியின் தோற்றம் பிரேசில் ஆகும். இதனை உலகம் முழுவதும் பரவச்செய்தது போர்த்துகீசியர்கள். தற்போது பிரேசில், வியட்னாம், இந்தியா மற்றும் பல ஆப்பிரிக்க நாடுகளில் வணிகரீதியாக முந்திரி பயிரிடப்படுகிறது.  முந்திரி பயிரிட்டால் மந்திரி ஆகலாம் என்பது கிராமத்தில் வழக்கத்தில் உள்ளது. அதாவது முந்திரி பயிரிட்டால் கண்டிப்பாக நஷ்டம் வராது

Friday, April 10, 2015

நீர்க்கடுப்புக்கு சித்த மருத்துவம்


உடலிருந்து சிறுநீரை வெளியேற்றும் சிறுநீர்க் குழாய் வீக்கமடைந்து எரிச்சலுக்கு ஆளாவதால் நீர்க்கடுப்பு ஏற்படுகிறது.

Thursday, April 9, 2015

எலும்பை இரும்பாக்கும் எனர்ஜி ஃபுட்ஸ்!

' 'ஓடிப்பிடிச்சு விளையாடிட்டு இருந்த என் பையன் தடுக்கி விழுந்திட்டான்... லேசான காயம்தான். காலை மடக்க முடியலைனு அழுதான். பதறிப்போய், அவனை டாக்டர்கிட்ட அழைச்சிட்டுப் போனேன். எலும்பு முறிவுனு சொல்லிட்டாங்க... சின்ன அடிதான்... ஃப்ராக்சர் ஆகுற அளவுக்கு ஏன் வந்ததுனு தெரியலை!'' என்று ரொம்பவே வருத்தப்பட்டார் ஒரு பெண்மணி.  

பைல்ஸ் என்னும் மூல நோய்க்கான எளிய இயற்கை வைத்தியங்கள்!


கோடைக்காலத்தில் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் மூல நோய் என்று அழைக்கப்படும் பைல்ஸ். பொதுவாக இந்த பிரச்சனையால் 45-65 வயதிற்குட்பட்டோர் அதிகம் பாதிக்கப்படுவார்கள். ஆனால் தற்போது சில இளம் வயதினர் கூட இப்பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படுகிறார்கள்.

Wednesday, April 8, 2015

வெயிலு.. வெயிலு.. வெயிலம்மா!


ஜில்லுனு சில டிப்ஸ்
வ ந்தாச்சு கோடை! ‘மழையா பெய்தது!’ என்று வியக்கும் வண்ணம் எங்கும் தெப்பலாக நனைந்தபடி நடமாடுகிறார்கள் மக்கள். ‘வெயிலடிச்சா வேர்க்கத்தான் செய்யும்’ என்று சாதாரணமாக விட்டுவிட முடியாது. உடலின் நீர்ச்சத்து அளவுக்கதிகமாக வெளியேறிவிட்டால், ‘சன் ஸ்ட்ரோக்’ பாதிப்பு ஏற்பட்டு, உயிருக்கே ஆபத்து நேரலாம்.
இந்தக் கோடை வெப்பத்தில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்வது எப்படி? இந்த நேரத்தில் எந்த அளவுக்கு தண்ணீரோடு நாம் ஐக்கியமாகியிருக்கவேண்டும்? இதோ, விளக்குகிறார்... சென்னை - ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் எஸ்.கே.ராஜன்.

Monday, April 6, 2015

மண் பானைகளுக்கு மவுசு வருமா?

இயற்கையான முறையில் குடிநீரை சுவையாக்கும் மண்பாண்டங்களின் உபயோகம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. வீடுகளில் மட்டுமன்றி, இப்போது குடிநீர்ப் பந்தல்களிலும் மண் பானைகளுக்குப் பதிலாக பிளாஸ்டிக் குடிநீர் கேன்களே ஆக்கிரமித்துள்ளன.

Saturday, April 4, 2015

இரண்டே நாட்களில் முகத்தில் உள்ள கருமை நீங்க சில அற்புத வழிகள்


News
கோடை வெயில் நம்மை சுட்டெரிக்க, சருமத்தின் நிறமோ நாளுக்கு நாள் கருமையாகிக் கொண்டே போகிறது. இத்தனை நாட்கள் பொத்தி பொத்தி காப்பாற்றி வந்த சருமம், கோடையில் நொடியில் கருமையாகிவிடும்.

Saturday, March 21, 2015

ரீபைண்ட் ஆயில் பயன்படுத்தி நோயை விலை கொடுத்து வாங்காதிங்க!


ரீபைண்ட் ஆயில் தானே இப்போ பெரும்பாலும் பயன்படுத்துறோம். யோசிச்சு பாருங்க உங்க ஊர்ல மாரடைப்பு இருக்குறவங்களோட எண்ணிக்கை குறைஞ்சு இருக்கா இல்ல கூடி இருக்கா. இதுல என்ன கொடுமைனா முன்னயாவது 60, 70 வயசு ஆனவங்களுக்கு பெரும்பாலும் ஹார்ட் அட்டாக் வந்தது. இப்போ தெல்லாம் 25,30,35 வயசு உள்ளவங்களுக்கே ஹார்ட் அட்டக் வருது. அப்போ ரீபைண்ட் ஆயில் உபயோகிச்ச பிறகு நோயின் அளவு ஜாஸ்தி தானே ஆகியிருக்கு?..

Saturday, February 21, 2015

மருத்துவ குணம் நிறைந்த மத்தி மீன் !


மருத்துவ குணம் நிறைந்த மத்தி மீன்களை அதிகம் உணவில் பயன்படுத்திக் கொள்ளுமாறு நாகை மீன்வள பல்கலைக்கழக தொழிலில் நுட்பநிலைய இயக்குனர்கள் தெரிவித்துள்ளனர்.

Wednesday, February 4, 2015

நீர்க்கட்டிகளை விரட்டினால்... வாரிசு ஓடி வரும்!


'குழந்தையின்மை பிரச்னைக்குத் தீர்வு தருகிறோம்' என்றபடி ஆரம்பிக்கப்பட்டிருக்கும் 'கருத்தரிப்பு மையங்கள்' பலவும், காசு பார்க்கும் வெறியில், பெண்களின் வாழ்க்கையோடு விளையாடுவது வாடிக்கையாகிப் போய்விட்டது. இதுதான் காரணம் என்பதை அறியாமல், 'கடவுளே சொல்லிட்டார்' என்பதுபோல, 'டாக்டர் சொல்லிட்டார்' என்றபடி நம்பிக்கையோடு நடைபோடுகிறார்கள் பெண்கள் பலரும். ஆனால், நிஜத்தில், பெரும்பாலும் மோசடி வேலைகளே நடக்கின்றன. இதைப் பற்றி கடந்த இரண்டு இதழ்களாக எழுதியிருந்தோம்.

உங்கள் பிரியாணியில் சிக்கனா...பூனைக்கறியா?


உங்கள் பிரியாணியில் சிக்கனா...பூனைக்கறியா?
சைவ உணவுகளை விரும்பிச் சாப்பிடுவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை செய்தி. சென்னையில் புற்றீசல் போல சாலையோர கடைகள் செயல்படுகின்றன. இங்கு சுகாதாரம் என்பதை எழுதி வைத்து பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம். பெயரளவுக்கு கூட சுகாதாரத்தை இத்தகைய கடைகள் கடைப்பிடிப்பதில்லை.
அதோடு இங்கு சமைக்கப்படும் உணவுப் பொருட்களின் தரமும் படுமோசம். உணவு பொருட்களின் விலை குறைவு என்பதால் இந்தக் கடைகளில் கூட்டம் அலைமோதுகின்றன. ருசிக்கு சாப்பிடாமல் ஏதாவது பசிக்கு சாப்பிட வேண்டும் என்று நினைப்பர்களின் கூட்டம் இங்கு அதிகம். சாப்பிட்டு விட்டு பிறகு அவர்களுக்கு ஏற்படும் உபாதைகள் பல.

Monday, January 19, 2015

உங்களுக்கு என்ன நோய்? உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்:-

1. கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி....?

சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.

Saturday, January 17, 2015

அல்சரால் அவதியா? கவலைய விடுங்க


இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்களை வரை அனைவரையும் வாட்டி வதைக்கிறது “அல்சர்”.
ஆரோக்கியமற்ற உணவு பழக்க வழக்கம், துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளால் மக்கள் ஈர்க்கப்படுகின்றனர்.
அல்சர் என்பது என்ன?
தொண்டையில் தொடங்கி இரைப்பை வரை உணவு செல்ல உதவும் உணவுக்குழாய், இரைப்பை, முன்சிறுகுடல் ஆகியவற்றில் ஏற்படும் புண்களைப் பொதுவாக ‘பெப்டிக் அல்சர்’ (Peptic ulcer) என்கிறோம்.

Wednesday, January 14, 2015

இம்சை தரும் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்!


குழந்தைகளுக்கான நூடுல்ஸ் விளம்பரங்கள் நிறைய நிறைய. இன்னொரு பக்கம், விதவிதமான வடிவங்கள், ஃப்ளேவர்கள் என நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு களமிறங்குகின்றன. விளைவு... கிராமத்துக் குழந்தைகள் வரை விரும்பிச் சாப்பிடுகிறார்கள் நூடுல்ஸ்!
‘இரண்டே நிமிடத்தில் ரெடி!’ என்பதையே பிரதான பிளஸ் பாயின்டாகக் கொண்டுள்ள இந்த இன்ஸ்டன்ட் நூடுல்ஸ், நம் வயிற்றில் செரிக்க எத்தனை மணி நேரம் ஆகிறது என்பது, அதிர்ச்சித் தகவல்!

மஸாச்சுசெட்ஸ் ஜெனரல் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர். பிரேடன் குவோ, இதுகுறித்து ஓர் ஆராய்ச்சி மேற்கொள்ள விரும்பினார். ஒருவரை பிரபலமான இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் சாப்பிட வைத்து, உடனேயே மாத்திரை வடிவிலான கேமரா ஒன்றை அவரை விழுங்கச் செய்தார். கேமரா குடலுக்குச் சென்றதும் அங்கு நூடுல்ஸ் செரிக்கும் புராசஸ், இங்கே வெளியே மானிட்டரில் தெரிகிறது.

சாதாரணமாக, வீட்டில் தயாரிக்கும் நூடுல்ஸ் நம் வயிற்றில் 20 நிமிடங்களில் ஜீரணிக்கப்பட்டு விடும். ஆனால் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ், இரண்டு மணி நேரம் கழித்தும் பாதியளவே ஜீரணிக்கப்படுகிறது. செரிமானத்திலேயே இவ்வளவு சிக்கல் என்றால், அது ஏற்படுத்தும் விளைவுகள் அச்சம் கொள்ள வைக்கின்றன! http://bit.ly/1xjW5uE இந்த லிங்க்கை பாருங்கள்.

அதன்பின் உங்கள் குழந்தைகளுக்கு இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் வேண்டுமா, வேண்டாமா என்று முடிவெடுங்கள்!