நம் தலைக்கு மேலே இருக்கும் அரைவட்டப் பரப்பைத்தான் வானம்
என்று குறிப்பிடுகிறோம். தலைக்கு மேல் உள்ள கூரை என்றும் வானம்
அழைக்கப்படுவது உண்டு. பூமியின் மேற்பரப்பில் குறிப்பிட்ட தொலைவுக்கு மேலே
உள்ள வளிமண்டலம், விண்வெளி ஆகிய அனைத்துமே உள்ளடங்கியதுதான் வானம்.
வானியலில் இது வான்கோளம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கற்பனைக் கூரையில்
சூரியன், நட்சத்திரம், கோள்கள், நிலா போன்றவை சுற்றிக் கொண்டிருப்பதை
இரவில் பார்க்கலாம். வான்கோளம் பல்வேறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது,
இதற்கு விண்மீன் தொகுதிகள் (constellations) என்று பெயர்.