Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Showing posts with label சேமிப்பு. Show all posts
Showing posts with label சேமிப்பு. Show all posts

Monday, November 17, 2014

சின்னப் பசங்களுக்கு சேமிப்பு டெக்னிக்!

கட்டுரைக்குள் நுழையும் முன்பு, தயவு செய்து பேனாவை எடுங்கள். கீழே உள்ள நான்கு கேள்விகளுக்கு உங்கள் மனதில் தோன்றிய பதிலை 'டிக்’ செய்யுங்கள்.

கேள்வி 1. உங்கள் 10 வயது மகள், பிறந்தநாளுக்கு அத்தை கொடுத்த 100 ரூபாயைத் தொலைத்துவிட்டாள்.  நீங்கள் என்ன செய்வீர்கள்?

Thursday, November 14, 2013

சேமிப்பு உங்கள் முதல் செலவு


காசு சேமிப்பது பலருக்கும் கடினமான காரியம். செலவைக் குறைப்பதுதான் சேமிப்பின் முதல் படி. வருவாயைப் பெருக்குவது இரண்டாம் படி.
செலவு செய்வது எளிது. நுகர்வு உடனடி மகிழ்ச்சி அளிப்பதால் செலவு நம்மை ஈர்க்கிறது. ஆக, செலவைக் கட்டுப்படுத்துவதுதான் சேமிப்பின் முதல் படி. ஒரு எளிய வழியைப் பயன்படுத்திப் பார்க்கலாம். அன்றாடம் வரவு -செலவு கணக்கு எழுதுவது. இதில் இரண்டு நன்மைகள் உண்டு. ஒன்று, நம் வீட்டில் உள்ள அனைவரும் இதில் ஈடுபடுவதால், குடும்பப் பொருளாதாரம் எல்லாருக்கும் தெரிய வரும். அதனால், அவரவரின் செலவுகள் ஒழுங்குபடுத்தப்படும். பொதுவாக குழந்தைகளுக்கு குடும்பப் பொருளாதார நிலை தெரிந்தால் அவர்களது பொருளாதார அறிவு வளரும். மாறும் சூழ்நிலைக்கேற்ப சரியான முடிவுகளை எடுக்க அவர்கள் தயாராவார்கள். இரண்டாவது, பல நேரங்களில் பயனற்ற செலவுகளை கண்டறிந்து நீக்க இது உதவும்.