இயற்கை பழச்சாறுகளின் மகத்துவம்..
தர்பூசணிப்பழச் சாறு:
கோடையின் கொடுமையிலிருந்து விடுபட நினைப்பவர்கள் இப்பழத்தை உண்பது இயல்பு. ஆனால் சாறு எடுத்து உண்ணும் போது கல்லடைப்பு என்னும் நோயுடன் சிறுநீர் வெளியேறும் போது தோன்றும் பல்வேறு குறைபாடுகளும் நீங்கும்.
நீரிழிவு வியாதியும் கட்டுப்படும். தர்பூசணிப்பழச் சாறுடன் தேன் கலந்து உண்டுவர காய்ச்சல் குணமாகும். சாறுடன் சமஅளவு மோர் கலந்து அருந்த காமாலை குணமாகும்.
அத்திப்பழச்சாறு:
அத்திப்பழத்தை பிட்டுப்பார்த்தால் அத்தனையும் சொத்தை என்று பழமொழி இருந்தாலும் கூட அத்திப்பழத்தை உபயோகிக்கலாம். அத்திப்பழத்தை சேகரித்து சாறு பிழிந்து சுவைக்காக தேங்காய் பாலும் தேனும் கலந்து அருந்தலாம்.
இச்சாறு எலும்பு முறிவு உள்ளவர்களுக்கு மிக்க பலனை தரும்.
அத்திப்பழமும் தேனும் கலந்து கல்உப்புடன் சேர்த்து உண்ண ஆரம்பகாலச் சிதைவுகளை சரி செய்யலாம். ஆஸ்துமா, நரம்பு தளர்ச்சி, மூளை வளர்ச்சி குறைவு ஆகியவை இச்சாறு அருந்துவதால் குணமாகும்..
ஆப்பிள் பழச்சாறு:
ஆப்பிள் பழச்சாறு உடற் சோம்பல், உடல்களைப்பு, வேளையில் ஆர்வமின்மை போன்றவற்றை குணமாக்கும் தன்மையுள்ளது. ஆப்பிள் பழச்சாறுடன் தேனும் பொடித்த ரோஜா இதழ், ஏலம் ஆகியவற்றை கலந்து அருந்த ரத்த சோகை குணமாகும்.
மேலும் கர்ப்பிணி பெண்கள் இச்சாற்றை அருந்த பிரசவத்தின் போது இழக்கும் சக்தியை பெறலாம். குழந்தைகளுக்கு ஆப்பிள் சாறு கொடுக்க உடல் வளர்ச்சி, உடற்பலம் பெருகும்.
திராட்சைச் சாறு:
திராட்சைச் சாறு தொடர்ந்து அருந்தி வர இரத்த அழுத்தகுறைவு, நரம்பு தளர்ச்சி, குடற்புண் (அல்சர்), காமாலை, வாயுகோளாறுகள், மூட்டுவலி ஆகியவை குணமாகும்.
திராட்சைச் சாறுடன் தேன் கலந்து உண்டுவர ரத்த விருக்தியுண்டாகி உடல்பலம் மிகும். நீரிழிவு வியாதிக்கு சர்க்கரை சேர்க்காத சாறு மிகவும் நல்லது.
ஆரஞ்சுச் சாறு:
தொண்டையில் புற்றுநோய் கொண்டு எந்த உணவும் உட்கொள்ள இயலாத நிலையிலுள்ளவர்களுக்கு ஆரஞ்சுச்சாறு அருமருந்தாகும். திட உணவு உட்கொள்ளாத வகையில் உள்ளவர்கள் இச்சாற்றை துளி துளியாக அருந்தி உடல் நலம் பெறலாம்.
இச்சாற்றை அருந்துபவர்களுக்கு உடலில் நோயினை எதிர்க்கும் சக்தி அதிகமாகிறது. எளிதில் ஜீரணம் செய்ய தகுந்தது. இருதய நோய்கள் எளிதில் குணமாகும். டைபாய்டு, ஜுரம் ஆகியவை குணமாகும். ஆரஞ்சுச் சாறுடன் இளநீர் கலந்து அருந்துவதால் சிறுநீர் தாராளமாக வெளியேறும்.
சிறுநீரக குறைபாடு குணமாகும். குழந்தைகளுக்கு கொடுக்க குடல் பலம் பெருகும். இச்சாறுடன் எலுமிச்சைச் சாறு கலந்தும் அருந்தலாம்.
எலுமிச்சைச் சாறு:
எலுமிச்சைச் சாறு:
பாத்திரங்களில் உள்ள அழுக்கை நீக்க மட்டும் எலுமிச்சை பயன்படுவதில்லை. நமது உடலில் உள்ள அழுக்குகளை அகற்றவும் பயன்படுகிறது. எலுமிச்சைச் சாறு அத்துடன் தேன் கலந்து அல்லது வெல்லம் கலந்து ஒரு பழத்திற்கு அரை லிட்டர் தண்ணீர் கலந்து அருந்த வேண்டும்.
தொடர்ந்து அருந்துவதால் மூல நோய்கள், வயிற்றுக்கடுப்பு, பித்தத்தால் வரும் நோய்கள் ஆகியவை குணமாகும். ஆனால் அளவுக்கதிகமாக இதை அருந்தும்போது குடல் தன் பலத்தை இழக்க நேரிடும்.
இளநீருடன் கலந்து அருந்துவதால் டைபாய்டு நோய் குணமாகும். வெள்ளை வெங்காய சாறுடன் கலந்து அருந்துவதால் மலேரியா நோய் குணமாகும். வெள்ளை வெங்காயத்துடன் கற்பூரம் கலந்து அருந்த எலுமிச்சைச் சாறுடன் அருந்துவதால் காலரா குணமாகும்.
உடல் களைப்புகள், கை, கால் கனுக்களில் வீக்கம் வலி ஆகியவை இருந்தால் எலுமிச்சைச்சாறுடன் விளக்கெண்ணெய் கலந்து தேய்த்து வர வலியிலிருந்து மீளலாம்.
பழுத்த வாழைப்பழத்துடன் எலுமிச்சைச் சாறும் தேனும் கலுந்து குழைத்து உண்ண மலக்குடலில் உள்ள குறைகள் நீங்கி பல நோய்கள் வராது தடுக்கலாம்.
தக்காளிச் சாறு:
தக்காளிச் சாற்றை நாள்தோறும் காலைவேளையில் உண்டுவர உடல் வலிமை அதிகமாவதுடன் வேண்டாத சதைகளும் குறையும். நீரிழிவு வியாதியும் கட்டுப்படும். சாறுடன் தேன் கலந்து உண்டுவர ரத்தம் சுத்தமாகும். தோல் நோய்கள் குணமாகும்.
மேலும் தக்காளி ஏழைகளின் ஆப்பிள் என்ற அழைப்படுவதற்கு ஏற்ப பல விதமான நோய்களை குணமாக்கும் ஆப்பிளில் இருக்கும் சத்தைவிட சற்று அதிகான சத்துடன் விலை மலிவாக கிடைக்கும்.
நன்றி:உங்களுக்காக Mohammad Sultan
ஜுஜுபி இலந்தை பழம்
ஜுஜுபி, சிவப்பு ஈச்சை, சீனா ஈச்சை என்றெல்லாம் அழைக்கப்படும் இந்தப்பழம் சீனாவைத் தாயகமாகக் கொண்டது. 4000 அண்டுகளாக பயிரிடப்படும் இந்த மரம் சீனாவிலிருந்து ஆசிய நாடுகளுக்கும் பரவி, இந்தியாவிலும் விளைகிறது. உருண்டையாகவும், நீளவடிவிலும், நெல்லிக்காயளவிலிருந்து எலுமிச்சம் பழ அளவிற்கு இருக்கும் இந்தப்பழம், நூற்றுக்கணக்கான வகைகளை உடையது.
அட இது என்னப் பழம் என்று பார்க்கிறீர்களா? அதாங்க நம்ம இலந்தை பழம்.
வட இந்திய மாநிலங்களில் விளையும் பழம் சற்று நீளமாகவும் பெரிதாகவும் இருக்கும். சதைப்பற்றும் அதிகமாக இருக்கும்.
தமிழ்நாட்டில் சிறு நெல்லிக்காயளவிற்கு இருக்கும். தள்ளு வண்டியில் வைத்து பள்ளிக்கூடங்களுக்கருகில் விற்கப்படும். உப்பு, மிளகாய்பொடி தூவி பொட்டலம் போட்டு சாப்பிடுவதில் பிள்ளைகளுக்கு ஒரே உற்சாகம் தான்.
அப்படியே சாப்பிடப்படும் இந்தப் பழத்திற்கு சமையலறையில் அவ்வளவாக வரவேற்பு இல்லாவிடினும், மேலை நாட்டினர் இதை மிட்டாய், ஊறுகாய் மற்றும் இனிப்பு வகைகள் செய்வதில் உபயோகிக்கிறார்கள்.
தமிழ் நாட்டை பொறுத்தவரை, நான் அறிந்த ஒரே தின்பண்டம் "இலந்தை வடை" தான். (வேறு பண்டங்கள் யாருக்காவது தெரிந்தால் பகிர்ந்துக் கொள்ளவும்). வெயிலில் காய வைத்தப் பழத்திலிருந்து கொட்டைகளை நீக்கி விட்டு, அத்துடன் கொஞ்சம் புளி, மிளகாய், வெல்லம், உப்பு சேர்த்து இடித்து, வடை போல் மெல்லியதாகத் தட்டி, மீண்டும் வெயிலில் காய வைத்து எடுத்து வைப்பார்கள். கிராமத்துக் கடைகளில் கிடைத்து வந்த இது, இப்பொழுது நகர அங்காடிகளிலும் கிடைக்கிறது.
மருத்துவ குணங்கள் நிறைந்த இது, நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தக் கூடியது. வயிற்று வலி, தொண்டைப்புண், மலச்சிக்கல், குடற்புண் ஆகியவற்றை ஆற்றுப்படுத்த வல்லது.
காய்ந்தப் பழத்தைப் பொடி செய்து ஒரு டீஸ்பூன் உட்கொண்டால், பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் ஏற்படும் அதிக இரத்தப்போக்கு கட்டுபடும்.
என்னதான் மருத்துவ குணங்கள் இருந்தாலும், இது அனைவராலும் விரும்பி சாப்பிடப்படுவதில்லை. ஆனாலும், இதைப் பார்க்கும் பொழுது நிச்சயமாக அவர்கள் பள்ளிக்கூட நாட்கள் நினைவிற்கு வராமல் போகாது.
Mohammad Sultan