Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, August 8, 2012

நோன்பு கால சமையல்-1 நோன்பு கறி கஞ்சி

ரமலானில் நோன்பு திறக்க வென்று வீட்டில் பல வகையான சிற்றுண்டி வகைகளை இல்லத்தரசிகள் செய்வதுண்டு. அவற்றில் சுவை மிக்க சில அயிட்டங்களின் சமையல் குறிப்புகளை எனது இல்லாள் சொல்லக் கேட்டு இங்கு உங்களுக்காகப் பதிவு செய்கிறேன்.
நோன்பு கறி கஞ்சி
தேவையான பொருட்கள்:
அரிசி 1 - கப்
சிறு பருப்பு - அரை கப்
மட்டன் or கோழி - 250 கிராம்
கேரட்,உருளைக்கிழங்கு- 100 கிராம் each
பட்டாணி- கொஞ்சமாக
தக்காளி -2
மஞ்சள் தூள்அரை ஸ்பூண்
மசாலா தூள்- 2 ஸ்பூண்
பட்டை,கருவா,ஏலம்
இஞ்சி,பூண்டு விழுது
பொடியாக நறுக்கிய வெங்காயம்
மிளகாய்-2
நெய்
தே.பால்- அரை கப்
உப்பு தேவையான அளவு
 
செய்முறை:
உடைத்த அரிசி, வறுத்த சிறு பருப்பு இரண்டையும் நன்கு கழுவி வைக்கவும்.
ஒரு குக்கரில், கழுவிய கறி, இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய் தூள். தேவையான உப்பு சேர்த்து தண்ணீர் வற்றும் அளவுக்கு நன்கு வேக வைக்கவும். அதனுடன், பொடியாக நறுக்கிய கேரட், உருளைக் கிழங்கு பட்டாணி ,தக்காளி, இவைகளைச் சேர்த்து வேக விடவும்.
இந்த கலவையுடன் 1:3 அளவுக்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
கொதி வந்ததும் அதனுடன், களைந்து வைத்திருக்கும் அரிசி,பருப்பு சேர்த்து நன்கு மசிய வேக விடவும்.
நன்கு அனைத்தும் வெந்ததும் இறக்கி ஆற வைத்து மிக்ஸியில் 2x3 சுற்று அரைத்துக் கொள்ளவும்.
பின் அடுப்பில் வாணலியை வைத்து, நெய் ஊற்றி காய்ந்ததும், அதில்,பட்டை கருவா,ஏலம் நறுக்கிய வெங்காயம்சேர்த்து நன்கு வதக்கி அதனுடன் அரைத்து வைத்த கலவையை கலந்து அதனுடன் தேங்காய் பாலும் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும்.
சூப்பர் நோன்பு கறிக் கஞ்சி ரெடி.
இதற்கு சரியான காம்பினேஷன் மஞ்சள் அல்லது காயல் வாடா தான். நாளைக்கு வாடா செய்வதை பற்றி இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்.
குறிப்புகள்: மெஹர் சுல்தான்

நோன்பு கால சமையல்-2 இரால் வாடா

இரால் வாடா or காயல் வாடா
தேவையான பொருட்கள்
  • இரால் - 20
  • அரிசி மாவு - 2 கப்
  • மாசித்தூள் – 3 மேசைக்கரண்டி
  • தேங்காய் பூ - 6 மேசைக்கரண்டி
  • வெங்காயம் - 3 பெரியது
  • மிளகாத்தூள் - 3 தேக்கரண்டி
  • பச்சைமிளகாய் – 2
  • மஞ்சள்தூள் - தேவையான அளவு
  • உப்பு - தேவையான அளவு
  • கருவேப்பிலை - சிறிது
  • அரைக்க: 2 காய்ந்த மிளகாய், சிறிது சோம்பு, சிறிது சீரகம்
  • எண்ணெய் - பொறிக்க
செய்முறை
  • இராலை கழுவி சிறிது மஞ்சள் தூள் 1-தேக்கரண்டி மிளகாத்தூள்-3தேக்கரண்டி,, உப்பு சிறிதுசேர்த்து மெல்லிய தீயில் வதக்கிக் கொள்ளவும்..
  • பின் ஒரு சட்டியில் நறுக்கிய பச்சைமிளகாய்,வெங்காயம்,உப்பு,கருவேப்பிலை,மிளகாத்தூள்,மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கி அதனுடன் ஏற்கனவே வதக்கியஇராலை சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும், அதில் அரைக்க வேண்டிய 2-காய்ந்த மிளகாய், சிறிது சோம்பு, சிறிது சீரகம் இவற்றை அரைத்து இதனுடன் சேர்த்து, மாசித்தூளையும் சேர்த்து நன்கு கிளறி சிறிது நேரம் அடுப்பில் வைத்து இறக்கி வைக்கவும்.
  • பின் ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் வெண்ணீரில் உப்பு, மஞ்சள்தூள், தேங்காய் பூ சேர்த்து வேகவிடவும்.பின் அரிசி மாவை போட்டு நன்கு கிளறி இறக்கி மிதமான சூட்டில் நன்கு பிசைந்துக் கொள்ளவும் இதனுடன் ஒரு கைப் பிடியளவு பழைய சோற்றினை அரைத்து சேர்த்தால் வாடா மெதுவாக இருக்கும்.
  • பின்பு ஒரு துணியை தண்ணீரில் நனைத்து பிழிந்து,.பின் அதன் மேல் சிறு உருண்டை அளவு மாவை வைத்து நன்கு வட்டமாக தட்ட வேண்டும். பின் அதன் மேல் வதக்கி வைத்த வெங்காய கலவையை சிறிது வைத்து இன்னொறு சிறு உருண்டை அளவு மாவை வைத்து முதலில் தட்டின மாதிரியே இந்த மாவையும் தட்டி வெங்காய கலவைக்கு மேலே வைத்து சிறிது தண்ணீர் தொட்டு நன்கு மூடிவிடவும் வாடா வெடித்து சிதறாமல் இருக்க நன்கு ஒட்டி மூட வேண்டும்.இப்போது இதன் தோற்றம் சிறிய மலைக் குன்று போல் இருக்கும்.
  • இதே போல் வாடாவை செய்து வைத்துக் கொண்டு, எண்ணையை சூடாக்கி மிதமான தீயில் வைத்து பொறித்து எடுக்கவும்.
  • சுவையான வாடா ரெடி…
  • தூத்துக்குடி மாவட்ட காயல் பட்டிணத்தில் இந்த வாடா ரெம்பவும் பிரபலம். நோன்பு காலங்களில் மக்கள் வாடா கடைகளில் (குறிப்பாக வாடா சுடும் இடத்திலேயே கூட்டம் கூட்டமாக வந்து வாங்கிச் செல்வர்.
    • சென்னையில் தற்போது மண்ணடியில் மட்டும் வாடா கிடைக்கிறது. கறி கஞ்சியுடன் இதை சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
குறிப்புகள்:மெஹர் சுல்தான்

நோன்பு கால சமையல்-3 இறால் பக்கோடா


இறால் பக்கோடா,prawn pakora
  • இறால் பக்கோடா
· தேவையான பொருட்கள்
  • இறால் - கால் கிலோ
  • கடலை மாவு – 2 கப்
  • அரிசிமாவு – 1 கப்
  • வெங்காயம் - 3
  • பச்சை மிளகாய் - 2
  • பூண்டு - 4 பல்
  • மிளகாத் தூள்- அரை டே.ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டே.ஸ்பூன்
சோம்பு - கால் டே.ஸ்பூன்
  • கறிவேப்பிலை - சிறிதளவு
  • உப்பு - தேவைக்கு
  • எண்ணெய் - பொறிப்பதற்கு
செய்முறை:
  • இறாலை நன்கு சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாய் வெட்டிக் கொள்ளவும்..
  • பச்சை மிளகாய், பூண்டு, வெங்காயம், கறிவேப்பிலை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • நறுக்கிய இறால், பொடியாக நறுக்கிய ப.மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, பூண்டு இவைகளை ஒன்றாக கலந்து, கடலை மாவு, அரிசிமாவு, மிளகாத் தூள், மஞ்சள் தூள், உப்பு, சிறிது சூடாக்கப்பட்ட எண்ணெய் இவற்றை சேர்த்து, தேவையான அளவு கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து, மாவு உதிரியாக வரும் அளவுக்கு பிசறி வைக்கவும்.
  • சட்டியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பக்கோடாவை உதிர்த்து போட்டு, பிரட்டி பொன்நிறமாக வந்ததும் எடுக்கவும்.
  • ருசியான இறால் பக்கோடா ரெடி.
  • நோன்பு திறக்கும் போது வடைக்கு மாற்றாக இதை சாப்பிடலாம்.
குறிப்புகள்:மெஹர் சுல்தான்

நோன்பு கால சமையல்-4 இளநீர் கடற்பாசி

இளநீர் கடற்பாசி
தேவையான பொருட்கள்
ற் பாசி - ஒரு பிடி
தண்ணீர் அரை கப்
இளநீர் - ஒன்று ர்க்கரை - ஒன்றரை டே.ஸ்பூண்
முந்திரிபருப்பு கொஞ்சம்

அரை கப் ண்ணீரில் கடற்பாசியை கொஞ்ச நேரம் ஊற வைக்கவும்.
அதை நன்கு கரையும் வரை சர்க்கரையையும் சேர்த்து காய்ச்சவும்.
நன்கு கரைந்ததும் இளநீரை ஊற்றி இறக்கி ஆற விடவும். இதில் பொடியாக நறுக்கிய முந்திரி பருப்பினை தூவி ஒரு தட்டில் ஊற்றி ஆற வைத்து ஃப்ரிட்ஜில் வைத்து பிறகு எடுத்து தேவையான சைஸில் துண்டுகளாகவெட்டி பரிமாறவும்.
இளநீருடன், அதன் வழுக்கை எனும் இளந்தேங்காயையும் சிறு சிறு துண்டுகளாக்கி அதனுடன் சேர்த்தால் சாப்பிடும் போது இன்னும் சுவையாக இருக்கும்
குறிப்புகள்:மெஹர் சுல்தான்

நோன்பு கால சமையல்-5 ஜிகிர்தண்டா

ஜிகிர்தண்டா (இதயத்தை குளிர வைக்கும் பானம்)
தேவையான பொருட்கள்
பால்ஒரு லிட்டர்
சர்க்கரை – 8 டேபிள் ஸ்பூன்
கடற்பாசி – 4 டேபிள் ஸ்பூன்
ரோஸ் சிரப் – 1 டேபிள் ஸ்பூன்
நன்னாரி ஸிரப் – 1 டேபிள் ஸ்பூன்
ஐஸ்கிரீம் ஸ்கூப் (வெனிலா) – 1
பால் கோவா – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
* ஒரு லிட்டர் பாலை, சர்க்கரை சேர்த்து அடிகனமான வாணலியில் மெல்லிய தீயில் கொதிக்க விட்டு, ரோஸ் கலர் சேர்க்கவும்.
* பாலை அரைலிட்டராக சுண்ட வைத்து ஆறியவுடன் பிரிஜ்ஜில் 6 மணி நேரங்கள் வைக்கவும்.
* கடற்பாசியை சூடான நீரில் ஒரு கொதிவிட்டு இறக்கி, 2 மணி நேரம் வைக்கவும். 2 மணி நேரம் கழித்து ஜெல்லி போல உள்ள `சைனா கிராஸைசிறு துண்டுகளாக வெட்டி, பிரிஜ்ஜில் 6 மணி நேரம் குளிர வைக்கவும்.
* குளிர்ந்த பாலை முதலில் நீளமான ஒரு கண்ணாடித் தம்ளரில் பாதியளவு ஊற்றவும்.
* இப்போது பாலின் மேல் ஜெல்லிகள் போல உள்ள சைனாகிராஸ் துண்டுகளைப் போடவும்.
* பிறகு ரோஸ் ஸிரப், நன்னாரி ஸிரப் ஊற்றவும்.
* தொடர்ந்து வெனிலா ஐஸ்கிரீம் ஸ்கூப்பை வைத்து அதன் மேல் பரவலாக பால்கோவாவைத் தூவி ஜில்லென்று கொடுக்கவும்.
* வெயிலில் தளர்ந்த உடலைக் குளிரவைத்து ஆனந்தத்தில் ஆழ்த்தி மனதிற்கு இதமளிக்கும் ஜில் ஜில் ஜிகிர்தண்டா தயார்.

நோன்பு கால சமையல்-6 அரபியன் முர்தபா

அரபியன் முர்தபா:
தேவையான பொருட்கள்
  • மைதா - 1/2 கிலோ
  • நெய் - 2 ஸ்பூன்
  • சோடா உப்பு – சிறிதளவு
  • வெங்காயம் - 2
  • கேரட் - 2
  • உருளை கிழங்கு - 1
  • இறைச்சி – கால் கிலோ
  • முட்டை - 3
  • பச்சை மிளகாய் - 1
  • பச்சை பட்டாணி - 1 கப்
  • கரம் மசாலா - 1ஸ்பூன்
  • மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்\
  • கொத்தமல்லி-கொஞ்சம்
  • எண்ணெய் - தே.அளவு
  • உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
  • மைதா மாவில் உப்பு, சோடா உப்பு போட்டு நெய்யை சூடாக்கி ஊற்றி தேவையான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து தனியாக வைக்கவும்.
  • ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி முதலில் பொடியாக நறுக்கிய கேரட் மற்றும் உருளை கிழங்கை போட்டு கொஞ்ச நேரம் வதக்கவும்.
  • பின் அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • இறுதியாக கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், வேக வைத்த பட்டாணி,இறைச்சி(கீமா) மற்றும் உப்பு சேர்த்து வதக்கி அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.
  • மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அதில் எண்ணெய் தடவி வைக்கவும்.முட்டைகளை நன்கு அடித்து கலக்கி ஒரு பாத்திரத்தில் வைக்கவும்..
  • ஒரு உருண்டை மாவை எடுத்து அதை சதுர வடிவில் ரொட்டி போல பரப்பி, அதன் நடுவில் செய்து வைத்திருக்கும் அடக்கத்தை கொஞ்சம் ரொட்டி முழுவதும் பரவலாக பரப்பி வைக்கவும்.
  • அதன் மேலே கலக்கி வைத்திருக்கும் முட்டையை கொஞ்சம் ஊற்றவும்.
  • பின் கலவை வைத்த ரொட்டியை நான்காக சதுர வடிவில் மடித்து. பின் அவற்றை எடுத்து சூடாக்கிய தவாவில் கொஞ்சம் எண்ணெய் தடவி இரண்டு பக்கமும் திருப்பி போட்டு பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும். இதை சாப்பிடுவதற்கு தோதாக கத்தியால் குறுக்கும் நெடுக்குமாக கீறி விடவும்.
  • அதன் மேல் கொஞ்சம் நறுக்கிய கொத்தமல்லித் தூவி பரிமாறவும். இதோ சுவையான அரபியன் முர்தபா ரெடி.
  • இந்த முர்தபாவை நோன்பு திறந்த பிறகு இரவினில் இரவு சாப்பாடாக சாப்பிடலாம்.

    குறிப்புகள்: மெஹர் சுல்தான்

நோன்பு கால சமையல்-7 சுவையான மீன்வடை

சுவையான மீன் வடை
மீன் வடையின் சுவை அலாதியானது. அதிகம் முள் இல்லாத மீன்தான் வடை செய்ய ஏற்றது
தேவையான பொருட்கள்
மீன் துண்டுகள் - 500 கிராம்
முட்டை - 1உருளைக்கிழங்கு - 100 கிராம்
மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
பச்சைமிளகாய் - 3உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க
வடை செய்முறை
மீனை கழுவி சுத்தம் செய்து வானலியில் சிறிதளவு நீர்விட்டு வேக வைக்கவும். பின்னர் அதை எடுத்து முள், தோல் நீக்கி நன்கு பிசையவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து நன்கு மசிக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக வெட்டவும்.
மீன், உருளைக்கிழங்கு, மிளகாய்த் தூள், வெட்டிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, முட்டை எல்லாம் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். எண்ணெயைக் காய வைத்து சிறுசிறு வடைகளாகத் தட்டிப் போட்டு பொன்னிறமாக சிவந்ததும் எடுக்கவும். ருசியான மீன் வடை தயார். இதை தோசைக்கல்லில் தட்டி வைத்து கட்லெட் போல செய்யலாம். சுவை சூப்பராக இருக்கும்.
குறிப்புகள்: மெஹர் சுல்தான்

நோன்பு கால சமையல்-8 இறால் பஜ்ஜி

இறால் பஜ்ஜி
· தேவையான பொருட்கள்
  • இறால் - 10
  • கடலை மாவு - ஒரு கப்
  • மிளகாய் பொடி அரை தேக்கரண்டி
  • எலுமிச்சைச்சாறு -அரை தேக்கரண்டி
  • இஞ்சி பூண்டு கொஞ்சம்
  • முட்டை - ஒன்று
  • சூடான எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
  • ரெட் கலர்=கொஞ்சம்
  • உப்பு - தேவைக்கேற்ப
  • எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
  • இறாலை சுத்தம் செய்து கழுவி நீளவாக்கில் இரண்டாக வெட்டி கொள்ளவும்.
அடித்தமுட்டையில் மிளகாய் தூள்,, உப்பு, இஞ்சி,பூண்டு விழுது,எலுமிச்சை சாறு, கொஞ்சம் சூடான எண்ணெய், இவற்றை ஒன்றாக கலக்கி, இறாலை அதில் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்..
  • கடலை மாவில் உப்பு,கொஞ்சம் மிளகாத்தூள், ரெட் கலர் சேர்த்து பஜ்ஜிக்கு கரைப்பது போல் கலக்கி கொஞ்ச நேரம் வைக்கவும்.
  • பிறகு எண்ணெயை சூடாக்கி தீயை மிதமாக வைத்து ஒவ்வொரு இறாலாக முக்கி எடுக்கவும்.
  • முட்டை சேர்ந்திருப்பதால் இறால் நன்கு உப்பி வரும்..
  • இதோ சூடான இறால் பஜ்ஜி நோன்பு திறக்கும் போது சாப்பிட ரெடி.
குறிப்புகள்:மெஹர் சுல்தான்

நோன்பு கால சமையல்-9 சூப்பர் பாயா

  • சூப்பர் பாயா
(படம்: நன்றி என் இனிய இல்லம்)
தேவையான பொருட்கள்
ஆட்டுக்கால் – 4
வெங்காயம் - 2 (பெரியது)
தக்காளி - 2 (பெரியது)
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
கரம் மசாலா - கால் தேக்கரண்டி
மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
மல்லித்தூள் - 3 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி
மிளகாத் தூள் - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி,கறிவேப்பிலை - கொஞ்சம்
துறுவிய தேங்காய் - 3 மேசைக்கரண்டி
முந்திரி பருப்பு - கொஞ்சம்
மைதா மாவு - 2 மேசைக்கரண்டி
எண்ணெய்,உப்பு – தேவைக்கு
செய்முறை:
  • வெங்காயம், தக்காளி, கொத்த மல்லியை நறுக்கி கொள்ளவும். தேங்காய் மற்றும் முந்திரிப்பருப்பை நன்றாக விழுதாக அரைத்து வைக்கவும்.
  • துண்டுகளாக நறுக்கிய (ஒரு காலை மூன்றாக வெட்டலாம்.கடைக் காரரே வெட்டிக் கொடுப்பார்) ஆட்டுக்காலை கழுவி குக்கரில் போட்டு நறுக்கின வெங்காயம், தக்காளி, மல்லிக்கீரை, மசாலாத்தூள் வகைகள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கால் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
  • கொதி வந்த பின்பு குக்கரை மூடி வெயிட் போட்டு 4-5 விசில் வந்த பின்பு அடுப்பை குறைத்து வைக்கவும். குறைந்தது அரை மணி நேரமாவது வேக விட வேண்டும்.கால் நன்கு வெந்ததும் அதனுடன் அரைத்த தேங்காய், முந்திரிபருப்பு விழுதை சேர்க்கவும்.
  • சிம்மில் வைத்து கால் மணி நேரம் கொதிக்க விடவும்.தேங்காயின் பச்சை வாடை போனதும் குழம்பு கொஞ்சம் கெட்டியாக கொழ கொழ பருவத்தில் இருக்கும்.
  • பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், கருவேப்பிலையை வதக்கி கொட்டவும்
  • சுவையான ஆட்டுக்கால் பாயா ரெடி.
  • இதை இடியாப்பம், ஆப்பம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் ஆஹா அமிர்தமாக சுவைக்கும். நோன்பு காலங்களில் இடியாப்பம்,ஆப்பம் போன்றவைகளை வீட்டில் செய்வது சற்று சிரமமாகத் தோன்றும். தரமான ரெடிமேட் இடியாப்பம் இப்போது எல்லா இடங்களிலும் கிடைக்கிரது. அதனை வாங்கி உபயோகித்துக் கொள்ளலாம்.
குறிப்புகள்: மெஹர் சுல்தான்