(நாசவேலைகளில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு 1964, ஏப்ரல் 20-ம்
தேதி தென்னாப்பிரிக்க உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது நெல்சன்
மண்டேலா ஆற்றிய உரையின் சுருக்கமான மொழிபெயர்ப்பு)
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முதல் நபர் நான்தான். அனுமதி இல்லாமல்
நாட்டை விட்டுச் சென்றது, 1961-ம் ஆண்டு மே மாதம் வேலைநிறுத்தத்தில்
ஈடுபடும்படி மக்களைத் தூண்டியது ஆகிய காரணங்களுக்காகக் குற்றவாளியென்று
அறிவிக்கப்பட்டு, கடந்த ஐந்து ஆண்டுகளாகச் சிறைத்தண்டனையை
அனுபவித்துவருகிறேன்.
ஆரம்பத்திலேயே ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்: தென்னாப்பிரிக்காவில்
நடைபெறும் போராட்டங்களின் பின்னணி யில் அயல்நாட்டவர்களும் கம்யூனிஸ்ட்டு
களும் இருக்கிறார்கள் என்று அரசு சொல்வதை முற்றிலும் நான் மறுக்க வில்லை.
அதே நேரத்தில், ஒரு தனிநபராக வும் எனது மக்களின் தலைவனாகவும் நான் எது
செய்திருந்தாலும் தென்னாப்பிரிக்கா வில் எனக்கு நேர்ந்த அனுபவங்களாலும்
ஆப்பிரிக்கன் என்ற எனது உணர்வின் அடிப்படையிலுமேயன்றி, ஏதோ அந்நியர்களின்
தூண்டுதலால் அல்ல.