Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, October 26, 2013

உங்கள் Gas பணம் உங்களுக்கு வந்து சேர


இந்த மாதத்தில் இருந்து GAS சிலிண்டருக்கான மானியம் நமது வங்கி கணக்கில் நேரடியாக தரப்படுகிறது. அதனால் இனி அணைத்து சிலிண்டர்களுக்கும் ஒரே விலை தான்.

இது ஒரு வகையில் நல்ல திட்டம் தான். கள்ளசந்தையில் மானியங்கள் தவறாக பயன்படுத்துவது தவிர்க்கப்படும். இருந்தாலும் ஆதார் அட்டை அனைவரும் பெறாததால் இன்னும் திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு பல சவால்கள் உள்ளன.

ஆயுதம் செய்வோம் 25/3/2012


ஆயுதம் செய்வோம் 16/3/2013 பாகம்-2


ஆயுதம் செய்வோம் 16/3/2013 பாகம்-1


ஆயுதம் செய்வோம் 7/4/13 பாகம்-2


ஆயுதம் செய்வோம் 7/4/2013


ஆயுதம் செய்வோம்.11/12/2013


ஸ்லீப் மற்றும் ஹைபர்னேட்


கம்ப்யூட்டரில், விண்டோஸ் சிஸ்டத்தில் செயலாற்றிக் கொண்டிருக்கையில், சற்று நேரம் ஓய்வெடுக்க விரும்பினால், அதன் இயக்கத்தை முடிவிற்குக் கொண்டு வராமல், சற்று நேரம் செயலற்ற நிலையில் வைத்திருக்கலாம். இதனால், மின் சக்தி மிச்சமாகும். அனைத்து சாதனப் பிரிவுகளும் ஓய்வெடுக்கும். விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதற்கான வழி முறைகளை இரண்டு வகைகளில் தருகிறது. அவை ஸ்லீப் மற்றும் ஹைபர்னேட் (Sleep மற்றும் Hibernate) விண்டோஸ் 7 சிஸ்டத்தில், Hybrid Sleep என்ற வசதியும் தரப்பட்டுள்ளது.

ஹாட் அட்டாக்கை தடுக்கும் திராட்சை! ! ! !




இதயத்திற்கு இதமான பொருட்களின் வரிசையில் சமீபத்தில் சேர்ந்திருக்கிறது. திராட்சை பழச்சாறு அமெரிக்க இதயநோய் நிபுணரானஜான்ஃபோல்ட்ஸ் என்பவர் திராட்சை பழச்சாறுக்கு ரத்தம் உறைதலைத் தடுக்கும் ஆற்றல் உள்ளதாகக் கண்டறிந்துள்ளார்.

பச்சைப் பட்டாணியின் மருத்துவ குணங்கள்! ! ! !

சத்துக்கள்

காய்கறிகளில் ஊட்டச் சத்து மிக்கது பச்சைப்பட்டாணி தான். பச்சைப் பட்டாணியில் மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, தயாமின், நியாஸின், ரிபோப்ளோவின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் 'ஏ', வைட்டமின் 'பி', வைட்டமின் 'சி', நார்சத்துக்கள் மற்றும் பீட்டா கரோட்டின் உள்ளது.

சீனி

உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா?

கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்?

உடலுக்கு ஆற்றலை தரும் சப்போட்டா பழம்! ! ! !

கண்களுக்கு நல்லது: சப்போட்டா பழம் வைட்டமின் ஏ வை அதிகளவு கொண்டுள்ளது. ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சி படி வைட்டமின் ஏ வை கொண்டுள்ளதால் பார்வையை பலப்படுத்துவதோடு முதுமையை தள்ளிபோடும் ஆற்றலை வழங்குகிறது. ஆதலால் தினமும் ஒரு சப்போட்டா பழம் எடுத்துக்கொள்ளலாம்..

இதுல இவ்வளவு இருக்கா...?


நாம் கணினியை பயன்படுத்தும் போதெல்லாம் மேல் வரிசையில் உள்ள Function Key-க்களை பார்த்து இருப்போம். நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒன்று F5. மற்ற பதினோரும் கூட மிக அதிகமான பயன்களை தருகின்றனர். அவற்றைப் பற்றி பார்க்கலாம்.

WhatsApp for PC

Free download WhatsApp for PC or Computer [Tutorial]

Please follow each and very step which is given below as it will help you to use WhatsApp on PC or Computer easily without any further more problems.

மதுரைஅப்துல் ரஜாக்கின் அதிர வைக்கும் கண்டுபிடிப்புகள்!


மதுரையில் பீபீகுளம் பகுதியில் வசிக்கும் நாற்பத்தியோரு வயதாகும் அப்துல் ரஜாக், ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். தினசரி கூலி வேலைக்குச் செல்லும் வறியவர். அதே நேரத்தில் இராணுவத்தினருக்கான சூடான உடை, 2-இன் - ஒன் குக்கர், இரு பக்கம் காற்றினைத் தரும் டேபிள் ஃபேன், துளை விழாத டயர், வயரில்லாத ஃபோன் சார்ஜர் உட்பட 20 க்கும் மேற்பட்ட நூதன கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர்.

சீட்லெஸ் பழங்கள் ???

                                                ஹை பிரிட் சப்போட்டோ


                                                 

Friday, October 25, 2013

அரசு திட்டங்களில் இரட்டை சிலை சின்னம்:


அரசு திட்டங்களில் இரட்டை சிலை சின்னம்: மக்கள் நிதியா? அ.தி.மு.க. நிறைவேற்றியதா?: கலைஞர்
 சென்னை: அரசு பேருந்துகளில் இரட்டை இலை சின்னம் போடப்பட்டுள்ளது. குடிநீர் பாட்டிலிலும் இரட்டை இலை சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் மக்கள் நிதியிலிருந்து செய்யப்பட்டதா? அல்லது அ.தி.மு.க. நிறைவேற்றியதா? என தி.மு.க. தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

குழந்தைகளை பாதிக்கும் ஆறு முக்கிய நோய்கள்


பொதுவாகவே குழந்தைகள் நோய்க் கிருமிகளுக்கு சுலபமாக் பாதிப்படைவர்கள் ஆதலால் அபாயகரமான நோய்களில் இருந்து அவர்களை பாதுகாக்க முறையான தடுப்பு ஊசிகளை போடுவது அவசியம், குழந்தைகளி பாதிக்கும் பல்வேறு நோய்களில் இளம்பிள்ளை வாதம், அம்மை, தொண்டை அடைப்பான், காச நோய், குத்து இருமல், டெட்டன°, ஆகியவை முக்கியமானவை.

உளுந்து


உடலில் உளுத்துப்போன உடல் உறுப்புகளை வளர்க்கும் ஆற்றல் உடையதால் தா‌ன் உளுந்து எனப் பெயர் பெற்றது. இது நரம்புகளை பலப்படுத்தும். நீரிழிவை கட்டுப்படுத்தும்.

உளுந்தை அடிக்கடி உணவில் சேர்த்துவர இடுப்பு வலி நீங்கும். காச நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது.

கழுத்துவலியா..? கவலைப்படாதீங்க..!


மனிதனை பாடாய்ப்படுத்தும் வலிகள் பல. அதிலும் இந்த கழுத்து வலி இருக்கிறதே..! அது வந்து அதை அனுபவித்து பார்த்தவர்களுக்கே தெரியும்.

தலையணை வைத்து தூங்கும் பழக்கம் உள்ளவங்களுக்கு பெரும்பாலும் இந்த கழுத்து வலி இருக்குறதா கேள்விப்பட்டிருக்கேன். ஆகவே கழுத்து வலி வந்தா முதல்ல தலையணை வச்சி தூங்குறத நிறுத்துங்க. சமதளமா தரையில பாய் விரிச்சி தூங்குங்க.

அடுத்ததா நொச்சி இலையை நல்லெண்ணையில போட்டு காய்ச்சி அதை தலைக்கு தேய்ச்சி அரை மணி நேரம் கழிச்சி சுடுதண்ணியில குளியுங்க. ஒருநாள் நொச்சி இலை குளியல்னா மறுநாள் யூகலிப்டஸ் இலையை கொதிக்க வச்சி குளியுங்க, அடுத்த நாள் வாதமடக்கி (வாத நாராயணன்) இலையை கொதிக்க வச்சி உடம்புக்கு ஊத்துங்க.

காலை டிபனுக்கு முடக்கத்தான் இலையை இட்லி, தோசை மாவுல கலந்து சாப்பிடுங்க. மத்தியான வேளையில மிளகு ரசம் இல்லன்னா கண்ட திப்பிலி ரசம் வச்சி சாப்பிடுங்க. முடக்கத்தான் ரசமும் சாப்பிடலாம். பூண்டு, மிளகு குழம்பு சாப்பிடலாம். கடல் நண்டு கிடைச்சா இஞ்சி பூண்டு காரமா சேர்த்து சாப்பிடுங்க.

ராத்திரி வேளையில நறுக்குமூலத்தை (கண்டதிப்பிலி) இடிச்சி பால், தண்ணி சேர்த்து வேக வச்சி பனங்கல்கண்டு இல்லைன்னா சர்க்கரை சேர்த்து சாப்பிடுங்க. கழுத்து வலி வந்த வழியை பார்த்து ஓடிப்போயிரும். இதே வைத்தியத்த உடம்பு வலி, கை-கால் அசதி இருந்தாலும் செய்யலாம்.

தலைமுடி பராமரிக்கும் முறை:



1. வேப்பிலையை அரைத்து தலையில் தடவி, 15-20 நிமிடம் கழித்து தலைமுடியை அலசலாம்.

2. இரண்டு முட்டைகளை உடைத்து அதில் இருக்கும் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து அதனுடன் ஆலிவ் எண்ணெயை சேர்த்து தலையில் நன்றாக தேய்த்தபின். 15-20 நிமிடங்கள் கழித்து அலசலாம்.

3. வெந்தயத்தை கூழாக்கி அதில் பன்னீரைச் சேர்த்து தலையில் தேய்த்து 20-30 நிமிடங்கள் கழித்து அலசலாம்.

4. செம்பருத்தி (செவ்வரத்தை) இலையை அரைத்து அதனை தலையில் தேய்த்து ஊறவிட்டு பின்னர் நன்கு அலசி விடலாம்.

5. இரவில் லேசான சூட்டில் தேங்காய் எண்ணெய் தேய்த்து ஊறவிட்டு பின்னர் காலையில் தலைக்கு குளிக்கலாம்.

6. ஒரு கைப்பிடி அளவு வேப்பிலை எடுத்து நாலு கப் தண்ணீரில் நன்கு கொதிக்கவிடவும். அந்த தண்ணீரால் தலையை அலசி வந்தால் பொடுகு வராமல் தடுக்கலாம் .

7. வினிகரை தலையில் தடவி குளித்து வந்தால் பொடுகு தொல்லை குறையும் .

8. சுடு தண்ணீரில் அடிக்கடி தலை குளிப்பதை தவிர்க்கவும் .

9. வெந்தயம் ,வேப்பிலை, கறிவேபிள்ளை, பாசிபருப்பு, ஆவாரம்பூ இவை எல்லாவற்றையும் வெயில் காயவைத்து மிஷினில் கொடுத்து மாவாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை ஷாம்பூவுக்கு பதிலாக வாரம் இருமுறை இந்த பவுடரை கூந்தலில் தேய்த்து அலசி வந்தால் கூந்தல் பளபளக்கும்.

9. ஹேர் ரையர் (hair dryer) அடிக்கடி உபயோகித்தால் தலை வறண்டு, முடியின் வேர்கள் பழுதடைந்து விடும். அதிகம் கேமிகல் நிறைந்த ஷாம்பூ மற்றும் ஹேர் கலர் உபயோகிப்பதை தவிர்த்து கொள்ளுவது நல்லது .

10. ஆலிவ் எண்ணையை இரவு படுக்கும் முன் தலையில் தடவி ஊறவிட்டு மறுநாள் காலையில் அலசினால் பேன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

11. முட்டை வெள்ளை கருவை நன்கு அடித்து தலையில் தேய்த்து ,ஊறவைத்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் கூந்தல் பளபளக்கும்.

12. முடி உதிர்வதை தடுக்க அதிகம் ஐயன் ,வைட்டமின் நிறைந்த உணவு வகைகளை சாப்பிட்டு வரவேண்டும் .

13. இன்று முக்கால் வாசி பெண்கள் தலைக்கு எண்ணையே தடவுவது கிடையாது. .அது முற்றிலும் தவறு .தலைக்கு தவறாமல் தேங்காய் எண்ணெய் தடவ வேண்டும் . அதிகம் எண்ணெய் பசை உள்ளவர்கள் வாரம் ஒரு முறை தடவினால் போதும்.

14. எண்ணெய் குளியல் மிகவும் அவசியம் .சிறிது நல்ல எண்ணையில் இரண்டு மிளகு ,பூண்டு இவை இரண்டையும் போட்டு சிறுது நேரம் குறைந்த தீயில் காயவைத்து தலையில் தடவி சீயக்காய் தேய்த்து குளித்து வந்தால் உடல் சூடு தணியும் . முடி உதிர்வதையும் தடுக்கலாம்.

15. கறிவேபிலை மற்றும் மருதாணி இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் இள நரையை தடுக்கலாம்.

நீரழிவு நோயாளிகளுக்கான உணவு அட்டவணை.



சாப்பிடக் கூடாது:

1. சர்க்கரை.
2. கரும்பு.
3. சாக்லெட்.
4. குளுக்கோஸ்.
5. காம்பளான்.
6. குளிர் பானங்கள்.
7. சாம் வகைகள்.
8. பால் கட்டி.

30 வகை எண்ணெய் இல்லாத சமையல்


30 வகை எண்ணெய் இல்லாத சமையல்
”எதுக்குத்தான் இப்படி எண்ணெயைக் கொட்டி கத்திரிக்காயைச் சமைப்பியோ..?!” என்று தெறித்து ஓடும் அளவுக்கு பலரையும் பாதித்துக் கொண்டிருக்கிறது, உணவில் மிதமிஞ்சி பயன்படுத்தப்படும் எண்ணெய்!

உடல் எடையைக் குறைக்க

உடல் எடையைக் குறைக்க விரும்புகிறவர்கள் இதை சாப்பிடுங்கோ !!!

தினமும் காலையோ அல்லது மதியமோ ஒரு கிண்ணம் தட்டைப் பயிறால் செய்த சுண்டலை சாப்பாட்டிற்கு முன்பாகச் சாப்பிடவும். இதில் உள்ள துத்தநாக உப்பு லெப்டின் என்ற இயக்குநீரை தாராளமாகச் சுரக்க வைக்கும். இந்த இயக்குநீர் இரத்தத்தில் நிறைய இருக்கும்போது மூளைக்கு `சாப்பிட்டது போதும்' என்ற சமிக்ஞையைத் தந்துவிடும். எனவே அதிகம் பசிக்காது. குறைவாகச் சாப்பிட்டாலும் நன்கு சாப்பிட்ட திருப்தி கிடைக்கும். அதிகம் சாப்பிட மனமும் அறிவும் விரும்பாது.

சுக்கு, மிளகு, திப்பிலி, இஞ்சி, புளி, துளசி,


சுக்கு, மிளகு, திப்பிலி, இஞ்சி, புளி, துளசி, பேரிக்காய், கேரட், நன்னாரி, சோற்றுக்கற்றாழை, சோம்பு, சுரைக்காய், பூசணிக்காய், விளாம்பழம், அமுக்கிராகிழங்கு, கரிசலாங்கண்ணி கீரை மற்றும் கீழாநல்லி இவையனைத்தும் எளிமையாக கிடைக்கும் அல்லது ஏற்கனவே வீட்டில் பயன்படுத்தும் பொருட்களாகும். இவையனைத்தும் மனிதனுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும் இயற்கையான மருத்துவ குணங்கள் கொண்டவை.

தாமரைத் தண்டின் சத்துக்கள்:


நிறைய தாமரைத் தண்டு தின்றால் நீண்டகாலம் வாழலாம்.

பச்சையாகவோ சமைத்தோ சாப்பிடலாம்.

66 வகை பழங்கள் மற்றும் காய்களை ஆராய்ந்த மருத்துவ நிபுணர்கள் முதுமை அடைவதைத் தடுக்கும் ஆற்றல் தாமரை தண்டில் அதிகம் என்று மதிப்பிட்டுள்ளனர்.

ஜீரண சக்தியை அதிகரிக்க..!



ஜீரண சக்தி குறைபாடுள்ளவர்கள் தினமும் 2ஸ்பூன் இஞ்சி சாறு அருந்தலாம். ஜுஸ்எடுத்து ஒரு சிறு கிண்ணத்திச் வைத்து சிறிது நேரம் (15 நிமிடம்) கழித்து அதை வேறு ஒரு பாத்திரத்திற்குமாற்றவும். (அடியில் வெள்ளை நிறத்தில்இருக்கும் பொருளை உண்ணக்கூடாது) ஒருஸ்பூன் தேனுடன் அருந்த வேண்டும்.

அல்சர்நோயளிகளுக்கு இது தேவையில்லை. அவர்கள்ஜீரகத்தை மெல்லலாம். மேலும் ஜீரகம், மிளகு, கொத்தமல்லிவிதைகள் போட்டு கொதிக்க வைத்த தண்ணீரும் அருந்தலாம். (வெதுவெதுப்பாக)

இளநரை போக


 
இன்றைய இளைஞர்களுக்கு உள்ள ஒருசில பிரச்னைகளில் இளநரையும் ஒன்று. இதற்கு மருதாணியைக் கொண்டு இயற்கை முறையில் எளிதாகத் தீர்வு காணலாம். மருதாணி இலை அரைத்து அதன் விழுதை ஒரு கப்பில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

நோய்களைப் போக்கும் உணவுகள்!!.


''நாம் உண்ணும் உணவின் மூலம் நோய் வராமல் காக்கவும், வந்த நோயை விரைவில் போக்கவும் இயலும்

வாதம்/பித்தம்/கபம்

வாதம்: ஒருவருக்கு மூட்டு வலி, கழுத்துவலி இருந்தால், வாதம் சீர் கெட்டுள்ளது என்று பொருள். இவர்கள் வாதத்தைக் குறைக்கும் உணவுகளைச் சாப்பிட வேண்டும். செரிமானத்திற்கு சிரமம் தரும் மாவுப் பண்டங்கள் வாயுவைத் தரும்.

Thursday, October 24, 2013

கோஹினூர் வைரம்


இந்தியாவின் வரலாற்று பொக்கிஷம், உலகின் விலை மதிக்கமுடியாத பொருள், இங்கிலாந்து ராணியின் கிரீடத்தை அலங்கரிக்கும்
ஆபரணம் மற்றும் இன்னும் பல வரலாற்று பெருமைகளை பெற்ற ஒரு சிறிய வெள்ளைக் கல் இந்த கோஹினூர் வைரம்.

அக்டோபர் மாத வரலாற்று நிகழ்வுகள்

 
 1, 1837 – இந்தியாவில் அஞ்சல் துறை
ஏற்படுத்தப்பட்டது.
1, 1953 – ஆந்திர மாநிலம் உதயமானது.
2, 1963 – காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்து
வதற்காக முதல்வர் பதவியிலிருந்து
காமராஜர் விலகினார்.
3, 1990 – கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனி
ஒன்றாக இணைந்தன.

அமெரிக்காவைப்பற்றி தெரியாத தகவல்கள் .


வாஷிங்டனை தலைநகராக கொண்டு செயல்படும் அமெரிக்கா, பொதுவாக அமெரிக்க ஐக்கிய நாடுகள் (United States of America or USA or USA) என்றே எல்லோராலும் அழைக்கப்படுகிறது. வட அமெரிக்க கண்டத்தின் மத்தியில் அமைந்திருக்கும் இந்நாடு, கிட்டத்தட்ட 9.83 மில்லியன் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. பரபப்பளவை பொருத்தமட்டில் உலகின் நான்காவது மிகப்பெரிய நிலப்பரப்பை கொண்ட இத்தேசம், ஐம்பது மாநிலங்களையும் ஒரு ஐக்கிய மாவட்டத்தையும் (Federal District) தன்னகத்தே கொண்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா


ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா உலகப் பிரசித்தம். இது பாலும் சர்க்கரையும் சேர்த்து தயாரிக்கப்படும் ஓர் இனிப்புப் பலகாரம். தமிழகம், பிற மாநிலங்கள் மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் இது விரும்பி உண்ணப்படுகிறது. இதன் வரலாறு பல நூற்றாண்டுப் பின்புலம் உடையது. ஆனால் 1970களில் இருந்துதான் இங்கே பால்கோவா தயாரிக்கப்பட்டு உலகப் புகழை அடைந்தது. பால் மற்றும் அது சார்ந்த உணவுப் பொருட்களைத் தொடக்க காலத்திலே நாம் பயன்படுத்தி இருக்கிறோம்.

Wednesday, October 23, 2013

அத்தி பழமும் அதன் பயன்களும்


அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரை யீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது
1.தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்,

மார்பு வலியை எவ்வாறு தவிர்க்கலாம்?

ஒவ்வொரு மாதவிடாயின் போதும் அல்லது சில நாள்களுக்கு முன்போ மார்பில் வலி வருவது பெண்களுக்கு காலங்காலமாய் நிகழ்ந்து வந்த ஒன்று. சில பெண்களுக்கு தலைவலி, கால்வலி, முதுகுவலி போல் மார்பில் வலியும் மாதவிடாயின் வரவைக் குறிக்கும் ஒரு சிக்னல்தான் எனலாம். மாதா மாதம் தவறாது அழையாது வந்து போகும் இவ்வலியை பெண்கள் சகித்துக் கொள்வது நடைமுறை விஷயம். இதை பிரெஸ்ட் டென்டர்னஸ் (Breast Tenderness) என்பார்கள். இவ்வலியை ஒன்றும் செய்ய இயலாது என்று கருதியே பெண்கள் சகித்துக் கொள்கிறார்கள். ஆனால் சில எளிய டிப்ஸ் மூலம் பெண்கள் இதை எவ்வாறு தவிர்க்கலாம் எனப் பார்ப்போம்...

ஆஸ்துமாவும் பெண்களும்

பரிமளாவுக்கு வயது முப்பது. தனியார் கம்பெனியில் வேலை செய்யும் கணவன், பள்ளி செல்லும் இரு பையன்கள் என்று சின்னக் குடும்பம்! 
நடுத்தரக் குடும்பம் என்பதால், வீட்டு வேலைகளை அவளேதான் செய்வாள். அன்றும் வழக்கம்போல அனைத்து வேலைகளையும் அவளேதான் செய்தாள். அன்று... துணி துவைப்பது, வீட்டை ஒட்டடை அடிப்பது என்று நிறைய வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்தாள். வேலையை முடித்துவிட்டு மாலை ரெஸ்ட் எடுக்கலாம் என்று அவள் அமர்ந்த போதுதான் பிரச்னை ஆரம்பித்தது.

தாய்ப்பாலை சேமித்து வைப்பது எப்படி?

Dr . ஜெயசிறீ கனகராஜ்
சந்திப்பு - S.கிருஸ்ணகுமாரி 


குழந்தை பிறந்ததுமே தாய்க்கு முதன் முதலில் வரக்கூடிய பாலை சீம்பால் (Colostrum) என்கிறோம். இதன் அருமை பலருக்குப் புரிவதில்லை. இந்த சீம்பாலைக் குழந்தைக்குக் கட்டாயம் கொடுக்க வேண்டும். காரணம் பாப்பாவுக்கான நோயெதிர்ப்பு சக்தி இதிலிருந்துதான் அதிகப்படியாகக் கிடைக்கிறது. அதனால் தவறாமல் சீம்பால் கொடுங்கள்!

கூந்தல் பள பளக்க... முட்டை, மீன் சாப்பிடுங்க


ஒவ்வொரு பெண்களும் மென்மையான அடர்த்தியான பளபளப்பான கூந்தலை வளர்க்க விரும்புவார்கள். ஷாம்புகள், கண்டிசனர்கள் மற்றும் கூந்தல்  அழகு சாதனை பொருட்களை பயன்படுத்துவதால் மட்டுமே கூந்தலை பெறமுடியாது. கூந்தல் என்பது வேகமாக வளரும் திசு. கூந்தல் வளர்ச்சியை  ஊக்கப்படுத்த புரதச்சத்து, கார்போஹைட்ரேட்டுகள்,  வைட்டமின்கள் மற்றும் தாதுசத்து ஆகியவை அவசியம்.

வீட்டில் கற்றாழை ஜெல் தயாரிப்பது எப்படி


நன்கு வளர்ந்த கற்றாழையை தேர்வு செய்து கவனமாக மென்மையாக மற்றும் மிக அகலமான கற்றாலைகளை பார்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். 15 நிமிடங்களுக்கு கற்றாலையை நேராக வைத்து அதிலிருந்து வெளியாகும் மஞ்சள் நிற திரவத்தை முழுவதுமாக நீக்கிவிடவேண்டும். பின்னர் கற்றாலையை நன்கு கழுகி முடிந்தவுடன் கற்றாலையில் உள்ள ஜெல்லை எடுத்து ஒரு க்யூப்ல போட்டு அடைத்து வைக்க வேண்டும்.

Tuesday, October 22, 2013

திக்! திக்! திக்! கிணறு.. (ஒரு அதிசயம்)

அஹமதாபாத் நகரத்திற்கு வெகு அருகில் அசர்வா எனும் இடத்தில் ‘தாதா ஹரீர் வாவ்’ எனும் படிக்கிணறு அமைந்திருக்கிறது. வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒரு அற்புத கட்டிடக்கலை படைப்பாக இந்த படிக்கிணறு அமைப்பு அக்கால கலைஞர்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது

" பாத்து சாப்பிடுங்க.. "


பசி வந்தபின்பு சாப்பிடுங்கள். அப்போதுதான் சரியாக உண்ண முடியும். பசிக்கு சாப்பிடுங்கள். ருசிக்கு சாப்பிடாதீர்கள்.

உணவில் ருசி அவசியம்தான். ஆனால் ருசிக்கு மட்டுமே உண்ணாதீர்கள், அது வயிற்றுக்கு சரிவராது. சிலருக்கு சரியாக பசி எடுக்காது. அப்படி இருப்பவர்கள் மூன்று வேளை உணவையும் சரியான நேரத்துக்கு சாப்பிட்டுவிடுங்கள். பசி இல்லையென உண்ணாமல் இருக்காதீர்கள், அது வயிற்றில் அமிலசுரப்புக்கு காரணமாகிவிடும்.

க்ரில் செய்த உணவை சாப்பிடலாமா?


எண்ணெயில் பொரித்த உணவுகளுக்கு பதிலாக க்ரில் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடலாமா? வீட்டில் செய்வது எளிதா? எந்தக் காய்கறிகளை க்ரில் செய்யலாம்?

ஆலோசனை சொல்கிறார் செஃப் தாமோதரன்...

சென்னையில் முக்கிய சாலைகள் பலவற்றின், பெயர் காரணம்



சார்லஸ் பின்னி என்பவர், 1769ல், இந்தியாவில், வாணிகம் செய்ய வந்தார். இவர் பெயரில், பின்னி தெரு உள்ளது. இது அண்ணா சாலையையும், கமாண்டர்-இன்-சீப் பாலத்தையும், இணைக்கும் சிறிய தெரு. இங்கு, பின்னி வாழ்ந்த மாளிகைதான், இப்போது கன்னிமாரா ஓட்டலாக உள்ளது.

வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி!


தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது. இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணனியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது.

சீத்தாப்பழத்தில் இத்தனை மருத்துவ குணமா..?!

சீதாப் பழம் பற்றி பலர் அறிந்திருப்பீர்கள் Custard apple என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த சீதாப்பழம் பழவகைகளிலேயே தனிப்பட்ட மணமும் சுவையும் கொண்டது.

AMWAY-சில உண்மைகள்

ஒரு நல்ல மனிதரின் பொதுநல அக்கறை காரணமாய் இது உருவாகி உள்ளது. உங்கள் வெளிச்சப் பார்வையை இதை பகிர்ந்து வெளிபடுத்தவும்!! தயவு கூர்ந்து!!

கொசு தொல்லையா.?

உங்கள் வீட்டில் கொசு தொல்லையா.?

அப்ப இதை படிங்க..!

கொசு ஒரு பிரச்சனையா?

இது 100% வேலை செய்யும்...!

உங்கள் வீட்டிலில் இருந்து கொசுக்களை விரட்ட ஒரு சக்திவாய்ந்த நுட்பம்..!

C.F.L .பல்புகள் உடைந்தால்...?

C.F.L .பல்புகள் உடைந்தால்...?

என்ன செய்யலாம்...! என்ன செய்யக் கூடாது...!

சி. எஃப். எல். பல்புகள் கைத்தவறி விழுந்து உடைந்துவிட்டால் , உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது . ஏனென்றால் இந்த பல்புகளுக்குள் உள்ள மெர்க்குரி திரவம் , ஆர்சனிக் , துத்தநாகத்தைவிட அதிக விஷத்தன்மையுள்ளது . இந்த விஷத்தை நுகர்ந்தாலோ அல்லது சருமத்தில் பட்டாலோ , மைக்ரேன் தலைவலி , மூளை பாதிப்பு , உடல் அசைவுகள் , பாதிக்கப்பட்டு நிலை தடுமாறுதல் போன்றவை ஏற்படுமாம் . அலர்ஜி பிரச்னை உள்ளவர்களுக்கு சரும பாதிப்புகளும் ஏற்படுமாம்

watched this illusion



பத்து மிளகு பகைவன் வீட்டிலும் உணவு

பத்து மிளகு கையிலிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்.” என்பது பழமோழி. மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தைத்  தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும், உடலில் உண்டாகும் சுரத்தையும் போக்கும் தன்மை உடையது. இது காரமும் மணமும் உடையது. உணவைச்  செரிக்க வைப்பது. விட்டு விட்டு வருகின்ற காய்ச்சலை  நீக்க நொச்சிக் கொழுந்து, மிளகு இலை, மிளகாய் இலை, துளசியிலை, இலவங்கம், இவை  யனைத்தையும் சம எடையாக எடுத்து அரைத்து ஒரு கிராம் வீதம் தினம் இரண்டு வேளை உண்ணவேண்டும்.

ரயில் வானத்தில் பறக்குமாம்!



காந்தங்களை மட்டும் வைத்து



மனித இதயத்தை வெளியே எடுத்து பார்த்ததுண்டா....



வியர்வை நாற்றம் போக...

வாசனைத்திரவியங்கள் பயன்படுத்தாமல் வியர்வை நாற்றத்தை ஒரே நாளில் நம் உடலில் இருந்து நீக்கலாம்.
பொதுவாக வியர்வை நாற்றம் என்பது எல்லோருக்கும் இருக்கக்கூடிய பொதுவான ஒன்றாகும். ஆனால் சிலருக்கு வியர்வை நாற்றம் என்பது பக்கத்தில் இருப்பவரை கூட அருகில் செல்ல முடியாமல் செய்துவிடும். சிலர் சோப்பு, வாசனை திரவியம் போன்ற பொருட்களை உடலெங்கும் பூசி இருப்பதும் நமக்கு தெரிந்த ஒன்று தான், வியர்வை துர்நாற்றம் அடிக்கிறது என்கிறது மருந்து கேட்டால் வியர்வை வராமல் செய்துவிடும் ஆபத்தான மருந்துகளும் கிடைக்கிறது, சரி சித்த மருத்துவரிடம் சென்று மருந்து கேட்டால் அவர் 5 வகையான கூட்டு சரக்கு மருந்து இதை அரைத்து தினமும் பூச வேண்டும் என்று சொல்கின்றனர், இவற்றை எல்லாம் தாண்டி ஒரு அதிசயம் கடந்த மாதம் நண்பர் ஒருவர் மூலம் இயற்கை உணர்த்தியது.

வாரிக் கொடுக்குது தேக்கு!

வருங்கால வளர்ப்பு நிதி ...வாரிக் கொடுக்குது தேக்கு!

அடிமைப்பட்டுக் கிடக்கும் இந்தியாவில் குதிரை களின் காலடி சப்தம் கேட்கிறது. எங்கு சென்றாலும் தேக்கு விதை மூட்டைகளோடு பயணம் செய்வதையே வழக்கமாக வைத்தி ருக்கும் வெள்ளையர்கள், குதிரை மீதமர்ந்தபடி விதைகளை வீசிக்கொண்டே செல்கின் றார்கள். 'இனி, இந்தியா நம் கையில்தான். இந்த தேக்கு விதைகள்தான் நம்முடைய எதிர்கால பொக்கிஷம்' என்றபடியே முடிந்த இடங்களிலெல்லாம் விதைக் கிறார்கள்.

-இது 1947-ம் ஆண்டுக்கு முந்தைய காட்சி!

பீட்சா... பர்கர்... சாண்ட்விச்... ருசியாக ஒரு பிசினஸ்!


பருப்பும் நெய்யும் சேர்த்து குழந்தைகளுக்கு சோறூட்டிய அம்மாக்கள், இன்று பீட்சாவுக்கும் பர்கருக்கும் மாறிக் கொண்டிருக்கிறார்கள். பள்ளி முடித்து, வீடு திரும்பும் குழந்தைகளுக்கு சுண்டலோ, சாலட்டோ கொடுத்து திருப்திப்படுத்த முடிவதில்லை இன்றைய அம்மாக்களால். அடம் பிடிக்கிற பிள்ளைகளை சமாதானப்படுத்தவும், சாப்பிட வைக்கவும் பீட்சா, பர்கர், சாண்ட்விச், ஃப்ரென்ச் ஃப்ரைஸ், நக்கெட்ஸ், ஹாட் டாக் என நவீன உணவுகளை வாங்கிக் கொடுக்க வேண்டிய கட்டாயம் பலருக்கும். கடைகளில் வாங்கும் உணவுகளில் ஆரோக்கியத்துக்கு உத்தரவாதமில்லை எனத் தெரிந்தாலும், வேறு வழியில்லையே... ‘இதையெல்லாம் வீட்லயா செய்து தர முடியும்?’ எனக் கேட்கும் அம்மாக்களுக்கு, முடியும் என்கிற நம்பிக்கையைத் தருகிறார் சென்னை, வடபழனியைச் சேர்ந்த செல்வமணி.

குளியல் பொடியில் குளுகுளு லாபம்


இளம்வயதிலேயே நரை, டீன் ஏஜில் அடியெடுத்து வைக்கும்போது பரு, பொடுகு, கம்ப்யூட்டரையும் டி.வியையும் பார்த்துக் களைத்ததால் கண்களுக்கடியில் நிரந்தரமாகிப் போன கரு வளையங்கள்... இன்றைய தலைமுறை இந்தப் பிரச்னைகள் இல்லாமல் இல்லை. ரசாயனப் பூச்சுகள் நிறைந்த அழகுசாதனப் பொருட்களே இதற்கெல்லாம் முதல் காரணம். ‘‘வீட்டிலேயே இதற்கெல்லாம் நிவாரணம் இருக்கிறது’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த மாதவி.

Monday, October 21, 2013

சிவகாசி என்றால், கந்தக பூமி


இதுவும் கடந்து போகுமோ?


ள்ளிக்குச் செல்லும் குழந்தை, பள்ளிப் பேருந்தின் ஓட்டை வழியே கீழே விழுந்து மரணிப்பதாகட்டும்; அரசு மருத்துவமனையில் இறந்த குழந்தையின் முகம் எலி கடித்துச் சிதைந்துபோவதாகட்டும்... கற்பனையே செய்து பார்க்க முடியாத சம்பவங்கள் தமிழகத்தில்தான் சாத்தியம். நமக்கு எதுவும் சர்வசாதாரணம். ஊடகங்கள் ஒரு நாள் பரபரப்பாக்கும், உடனே அரசு இயந்திரங்களும் பரபரப்பாகும். அடுத்து ஒரு பரபரப்புச் சம்பவம் நடந்து முடிந்ததும் எல்லாவற்றையும் நாம் மறந்து கடந்துவிடுகிறோம். ஆனால், அரசு நடத்தும் திடீர் சோதனைகள் - கைதுகள், ஆலோசனைக் கூட்டங்கள் - பரிந்துரைகள், புதிய விதிகள் - சட்டதிட்டங்கள்... இவை எல்லாம் எந்த அளவுக்கு அமல்படுத்தப்படுகின்றன? சூழல் எந்த அளவுக்கு மாறி இருக்கிறது? வாரம் ஒரு கள நிலவரத்தைப் பட்டியலிடுவோம்... முதல் வாரம் பட்டாசு ஆலைகள்!

வெகுமதி கொடுக்கும் வேம்பு

வெகுமதி கொடுக்கும் வேம்பு !

ஜி. பழனிச்சாமி,படங்கள்: க. ரமேஷ்
 மழைவளம், நிலவளம், மனிதவளம் இவை அனைத்தும் செழிக்கத் தேவையானது மரவளம். இதை உணர்ந்ததால்தான் நம் முன்னோர்கள் மரங்களை தெய்வமாக வழிபட்டார்கள். ஆனால், நாகரிகம் வளர வளர... தன் தேவைக்காக மரங்களை, மரணிக்கச் செய்து வருகிறோம், நாம். அதனால்தான் மாதாமாதம் கிடைத்து வந்த மும்மாரி... இப்போது ஓர் ஆண்டுக்கு மூன்று முறை கிடைத்தாலே பெரிது என்கிற நிலை ஏற்பட்டு வருகிறது! அதன் விளைவு... பூமிப் பந்து சூடாகி, வறட்சி வாட்டி எடுக்கிறது.

கலக்கல் கிராமம்

வாரே வாவ்... ஹிவரே பஸார்!
சோதனைகளைச் சாதனைகளாக மாற்றிய கலக்கல் கிராமம்

'உன்னால் முடியும் தம்பி'..., 1988-ம் ஆண்டில் வெளியான இந்தப் படத்தை பலரும் மறந்திருக்க முடியாது. கே. பாலச்சந்தர் தீட்டியிருந்த இந்த திரையோவியத்தைப் பார்த்தவர்கள், 'ம்... இதெல்லாம் சினிமாவுக்குத்தான் சரிப்பட்டு வரும். நிஜத்துல... அதுவும் நம்ம ஊருல... இதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை' என்றுதான் முணுமுணுத்திருப் பார்கள்.
ஆனால், சினிமாவில் கற்பனையாக சாதித்துக் காட்டிய விஷயங்களையும் தாண்டி, பல்வேறு சாதனைகளை நிஜத்தில் ஒரு கிராமம் சாதித்துக் கொண்டிருக்கிறது என்றால்... அது ஆச்சர்யமான விஷயம் தானே!
திரைப்படத்தில் 'உதயமூர்த்தி' என்ற பாத்திரத்தில் வரும் கமல்ஹாசன், ஏகத்துக்கும் போராடி ஒரு கிராமத்தை உன்னத கிராமமாக மாற்றி வைப்பார். இங்கே நிஜத்திலும் ஒரு உதயமூர்த்தி தோன்ற... விவசாயம், கால்நடை வளர்ப்பு, கல்வி என்று அனைத்து விஷயங்களிலும் அசத் தலாக எழுந்து நிற்கிறது அந்தக் கிராமம். முக்கியமாக, அதன் சாதனை யே... நீர்ப்பாசன மேலாண்மைதான்.

முத்துப்பேட்டை அலையாத்திக் காடு

முத்துப்பேட்டைக் காத்துக்கு,காசு கொடுக்கும் சுவிட்சர்லாந்து!"
காட்டு வாழ்க்கை பேசும் ஜனநாதன்
'சினிமா' என்கிற பலமான ஊடகத்தை 'சமூகப் பார்வை' என்கிற கண்ணாடி கொண்டு பார்ப்பவர்கள் மிகமிகக் குறைவு. அருகிக் கிடக்கும் அத்தகையக் கூட்டத்தில், எளிதில் அடையாளம் கண்டுகொள்ளப்படக் கூடியவர் ஜனநாதன். 'இயற்கை' மற்றும் 'ஈ' என்று இரண்டு படங்களை இதுவரை இயக்கியிருக்கும் ஜனநாதனின் சமூக அக்கறையை 'ஈ' படத்தின் வாயிலாக நன்றாகவே உணர முடியும். கதைகளுக்காக வித்தியாசமான களங்களைத் தேடித் திரிவதில் ஆர்வம் கொண்ட ஜனநாதன், 'பேராண்மை' என்கிற படத்தை தற்போது இயக்கிக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் களம் (பேக்டிராப்).... காடு! இதற்காக தென்னகத்தின் பல்வேறு காடுகளை வலம் வந்ததினால், கிட்டத்தட்ட காடுகளின் காதலனாகவே மாறிப் போயிருக்கிறார் மனிதர்.
பொதுவாக சினிமாக்காரர்களிடம் பேச்சுக் கொடுத்தால், தான் எடுத்துக் கொண்டி ருக்கும் படங்களைப் பற்றித்தான் அதிகம் பிரஸ்தாபிப்பார்கள்... ஜனநாதனோ தன்னு டைய கதைக் களமான காடுகளைப் பற்றியே மணிக்கணக்கில் நம்மிடம் கதைத்தார்.

நீங்களே தயாரிக்கலாம் மினரல் வாட்டர்!


சல்லிக்காசு செலவில்லாமல்.....
நீங்களே தயாரிக்கலாம் மினரல் வாட்டர்!
குடிநீருக்காக பாட்டில் நீர், சுத்திகரிப்பு இயந்திரம் என எதையும் தேடி அலைய வேண்டாம்.

சோடிஸ்ங்கிற இந்த முறையில 60 டிகிரி அளவுக்குதான் தண்ணி சூடாகும்.
"கிராமப்புற மக்களுக்கு 100% சுத்தமான குடிநீரை உறுதிப்படுத்துவதே எங்கள் லட்சியம்" என்று முழக்கமிட்டபடி நாடு முழுக்கவே பல்வேறு கிராமங்களில் உள்ளாட்சி அமைப்பு மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.
'இதோ... எங்கள் தண்ணீர்தான் 100% யு.வி. முறையில் சுத்திகரிக்கப்பட்டது' என்றபடி பல்வேறு நிறுவனங்களும் பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் கேன்களில் தண்ணீரை அடைத்து விற்பனை செய்து லாபம் பார்த்துக் கொண்டிருக்கின்றன.
ஆனால், இப்படி வழங்கப்படும் தண்ணீர் எல்லாம் 100% சுத்தமானதுதானா... என்றால் பெரும்பாலும் 'இல்லை' என்பதே பதிலாக இருக்கமுடியும்.

Sunday, October 20, 2013

Garlic Sauce Recipe! Lebanese


சந்தனம் Chanthanam

வேறு பெயர்கள் -: முருகுசத்தம் 
ரகங்கள் -: இதில் வெள்ளை, மஞ்சளை சிவப்பு என மூன்று வகைகைள் உள்ளன. அதில் செஞ்சந்தனம் மருந்தாகப் பயன்படுகிறது.
மரம் வாசனை நிரம்பியது. மரத்தின் வைரம் பாய்ந்த கட்டைப் பகுதி எண்ணெய்ச் சத்து நிரம்பியது. இதிலிருந்து எடுக்கப்படும் ‘அகர்’ என்னும் எண்ணெய் மருத்துவப் பண்புகள் கொண்டவை. சருமத்திற்கு குளிர்ச்சியளிக்கக் கூடியவை.

கீழா நெல்லி(Phyllanthus niruri)











வேறுபெயர்கள் -: கீழ்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி.காட்டு நெல்லிக்காய், பூமியாமலக், பூளியாபாலி.
கீழா நெல்லி தான் என்பதறுகு, காய்கள் கீழ்நோக்கி அடிப்புரத்தில் இருக்கினவா என ஊர்ஜிதப்படுத்திய பின்னர் தான் இதனைப் பயன் படுத்த வேண்டும்


கீழா நெல்லிச் செடியின் வேரை எடுத்து வாயில் போட்டு மென்று வந்தால் விக்கல் உடனே நிற்கும்.!
மஞ்சள் காமாலை, மூத்திர நோய்கள், குடல்புண், தொண்டை நோய்கள், வயிற்றுவலி, வயிற் றோட்டம், முறைசுரம், அதிக உஷ்ணம், கண்நோய்கள், மாதவிடாய்க் கோளாறுகள், பசியின்மை, தோல் நோய்கள், தீராத அழுகல் புண்கள், புரைகள், வீக்கம், குருதிவடிதல் போன்ற பல நோய்களுக்கும் கீழாநெல்லியானது சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.