பெருவெடிப்புக்கு (பிக் பேங்- Big Bang) பிறகுதான் பிரபஞ்சம் உருவானது
என்று தற்கால ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். அந்த வெடிப்புக்குப் பிறகு
என்ன நடந்தது? பிரபஞ்சம் தற்செயலாக இயங்குகிறதா அல்லது ஒரு விதியைப்
பின்பற்றி இயங்குகிறதா? அறிவியலாளர்களை வெகு காலமாகத் தூங்க விடாமல்
செய்தவை இந்தக் கேள்விகள்தான்.
பெருவெடிப்புக்குப் பிறகு நடந்ததை ஒரு கதைபோல் பார்ப்போம்.