மதுரை மாவட்டத்தில் பல அரிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து தேசியவிருது பெற்றவர் எம்.அப்துல் ரசாக். மதுரை பீ.பீ.குளம் நபிகள் நாயகம் தெருவில் உள்ள சிறு வீட்டில் வசித்து வருகிறார். 45 வயதான இவர், ஒரு எலக்ட்ரீசியன். ஆனால் புதிய கண்டுபிடிப்புகளின் மீது ஆர்வமுடையவர். கஷ்டமான குடும்பத்தில் பிறந்த இவர், 7வது வரைதான் படித்துள்ளார்.
Showing posts with label அறிவியல். Show all posts
Showing posts with label அறிவியல். Show all posts
Thursday, April 2, 2015
பள்ளிப்படிப்பை தாண்டாத மதுரை விஞ்ஞானி...
மதுரை மாவட்டத்தில் பல அரிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து தேசியவிருது பெற்றவர் எம்.அப்துல் ரசாக். மதுரை பீ.பீ.குளம் நபிகள் நாயகம் தெருவில் உள்ள சிறு வீட்டில் வசித்து வருகிறார். 45 வயதான இவர், ஒரு எலக்ட்ரீசியன். ஆனால் புதிய கண்டுபிடிப்புகளின் மீது ஆர்வமுடையவர். கஷ்டமான குடும்பத்தில் பிறந்த இவர், 7வது வரைதான் படித்துள்ளார்.
Tuesday, March 17, 2015
அறிவியல் செய்திகள்
( CALCULATER ):கால்குலேட்டர்களை கணக்குப்போடுவதற்கு மட்டும் நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில் தொழில்நுட்ப முன்னேற்றம் அடைந்த நாடுகளில் பல்வேறு பயன்பாட்டுக்கும் கால்குலேட்டரைப் பயன்படுத்துகிறார்கள். சமையலில் எந்தப் பொருளை எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை அளந்து பார்க்க கிச்சன் கால்குலேட்டரை பயன்படுத்துகிறார்கள். ஒருவர் தனது உடல் எடைக்கு ஏற்ப எவ்வளவு சாக்லெட் சாப்பிடலாம் என்று பார்க்க சாக்லேட் கால்குலேட்டர் இருக்கிறது. நாம் சுவாசிக்கும் காற்றில் கார்பன் மிகுந்திருக்கிறதா? என்பதை கவனிக்க கார்பன் கால்குலேட்டர் இருக்கிறது. மருந்து சாப்பிடும் நோயாளிகளுக்கு சரியான அளவில் மருந்து சாப்பிட உதவும் `ஆர்கிமெடிஸ்` கால்குலேட்டர்கள் இருக்கின்றன.
Thursday, January 8, 2015
உலகின் முதல் கலங்கரை விளக்கம்
எகிப்தின் ஃபாரோஸ் தீவின் அலெக்சாண்ட்ரியா நகரில் கட்டப்பட்ட கலங்கரை விளக்கம்தான் உலகின் முதல் கலங்கரை விளக்கம். பிரமிடுகள் மற்றும் பெரிய மாடக்கல்லறைகளுக்கு அடுத்தபடியாக, எகிப்தின் மிக உயரமான கட்டடமாக இந்த கலங்கரை விளக்கம் விளங்கியது.
Tuesday, February 25, 2014
Thursday, November 21, 2013
பிரபஞ்சம்: அணுவிலிருந்து அணுஉலைவரை
பெருவெடிப்புக்கு (பிக் பேங்- Big Bang) பிறகுதான் பிரபஞ்சம் உருவானது
என்று தற்கால ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். அந்த வெடிப்புக்குப் பிறகு
என்ன நடந்தது? பிரபஞ்சம் தற்செயலாக இயங்குகிறதா அல்லது ஒரு விதியைப்
பின்பற்றி இயங்குகிறதா? அறிவியலாளர்களை வெகு காலமாகத் தூங்க விடாமல்
செய்தவை இந்தக் கேள்விகள்தான்.
பெருவெடிப்புக்குப் பிறகு நடந்ததை ஒரு கதைபோல் பார்ப்போம்.
Sunday, November 3, 2013
வலி நீக்கும் ஓஸோன் ஊசி
காற்றும் ஒரு வலி நிவாரணிதான்! – வலி நீக்கும் ஓஸோன் ஊசி
வலி என்பது நோயல்ல; நோய்க்கான அறிகுறிகளுள் ஒன்று. நோயின் வருகையை அறிவிக்கும் அலாரம்தான் வலி. நாம் வலியை உடனடியாக நிறுத்தித் தப்பித்துக் கொள்கிறோம் தற்காலிகமாய். ஆனால், வலிக்கான அடிப்படை அப்படியே மறைந்து பதுங்கித்தான் இருக்கும். அந்த ஆணிவேரை அகற்றுவதுதான் அவசியமான சிகிச்சை.
வலியையும் நிறுத்தி, காரணத்தையும் கண்டறிந்து அகற்று இப்போது வந்திருக்கும் புதிய வழிமுறைதான் ஓஸோன் ஊசி. ஓஸோன் என்றால் பரிசுத்தமான ஆக்ஸிஜன்தான். காற்று மருந்தாகும் அந்த மகத்துவம் பற்றி, டாக்டர் பிரபு திலக்கிடம் கேட்டபோது…

நல்ல காற்று… நலமான வாழ்க்கை..!
உலகில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 400 மில்லியன் மெட்ரிக் டன் அளவில் காற்றை அசுத்தப்படுத்தக் கூடிய, உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய கழிவுகள் உற்பத்தியாகின்றன. இதில் அமெரிக்கா தான் முதலிடத்தில் இருக்கிறது. இந்தியாவில் ஆண்டுக்கு 51/2 லட்சம் பேர் காற்று அசுத்தமாவதால் ஏற்படும் நோய்களால் இறந்துபோகின்றனர் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் சுமார் 3.35 லட்சம் பேர் நுரையீரல் புற்றுநோயினால் இறக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் காற்று மாசுபடுவதுதான்.
Monday, October 7, 2013
உயரமான இடங்களில் உடல் எடை குறையும் : ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள்
லண்டன்: மனிதனின் உடல் எடை, பூமியின் அனைத்து பகுதிகளிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை என, ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தாழ்வான பகுதியில் இருக்கும் நபர், உயரமான இடத்திற்கு செல்லும் போது, அவரது உடல் எடை குறைவதாக புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனிதனின் உடல் எடைக்கும், புவி ஈர்ப்பு விசைக்கும் உண்டான தொடர்பு குறித்து, ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். பூமியின் வெவ்வேறு இடங்களில், புவி ஈர்ப்பு விசை மாறுபடுவதால், மனித உடல் எடையும் புவி ஈர்ப்பு விசைக்கு ஏற்ப மாறுபடுவதாக, ஆஸ்திரேலியாவின், கர்டின் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

Sunday, October 6, 2013
நேரத்தை மிச்சப்படுத்த பயனுள்ள 10 குறிப்புகள்:
1. ஒரு வலைப்பக்கத்தை படித்துக்கொண்டிருக்கிறீர்கள் அல்லது பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த பக்கத்தில் மேலும் கீழும் செல்ல தயவு செய்து Mouse -ஐ பயன்படுத்தாதீர்கள்.. Space Bar-ஐப் பயன்படுத்துங்கள்.
2. ஸ்பேஸ்பாரைத் தட்டும்பொழுது அந்த பக்கத்தின் கீழுள்ள பகுதியைக் காட்டும்.
3. அதே பக்கத்தில் மேலுள்ள பகுதியைப் பார்வையிட வேண்டுமெனில் Shift+SpaceBar தட்டிப்பாருங்கள்.
Wednesday, May 30, 2012
மின்மினிகள்... உயிர் காக்கும் கண்மணிகள்
இரத்தக்குழாய்களில் இரத்தம் உறைந்து கட்டியாக மாறுவது ஆபத்தானது. இரத்தம் கட்டியாக மாறும் திறனை குறைப்பதற்காக Heparin என்னும் வேதிப்பொருள் மருந்தாக பயன்படுகிறது. Heparin இரத்தக்கட்டிகளை கரைப்பதில்லை. ஆனால் இரத்தம் கட்டியாக உறையும் திறனை குறைக்கிறது. இரத்தக்கட்டிகளின் இருப்பிடம் மற்றும் தன்மைகளை ஆராய மருத்துவர்களின் பரிந்துரையின்பேரில் தற்காலத்தில் ஊடுகதிர்படம் (medical imaging) எடுக்கப்படுகிறது. இரத்தக்கட்டிகளை துல்லியமாக கண்டறிய மின்மினிப்பூச்சிகளை ஒளிரச்செய்யும் என்சைம் பயன்படுகிறது என்பதுதான் இன்றைய அறிவியல் தகவல்.
சில உயிரிகள் தானாக ஒளியை உமிழும் பண்புடையவை. இந்நிகழ்வை உயிரியல் ஒளிர்வு (luciferase) என்றழைக்கிறோம். இது ஒளிர்தல், நின்றொளிர்தல் ஆகியவற்றில் இருந்து வேறுபட்டது. மின்மினிப்பூச்சியின் ஒளிர்தல் பண்பு உயிரியல் ஒளிர்வைச் சார்ந்தது. பூச்சிகளில் சுரக்கும் என்சைம்களுடன் சில வினையூக்கிகள் சேர்ந்து உருவாகும் வேதிப்பொருட்கள் உயிரியல் ஒளிர்வை நிகழ்த்துகின்றன.
உயிரி ஒளிர்தலை நிகழ்த்தும் வேதிப்பொருளின் புரதத்துடன், இதற்கென வடிவமைக்கப்பட்ட சாயப்பொருள் சேர்க்கப்பட்டு ஊடுகதிர்படம் எடுக்கப்படுகிறது. இந்த புதிய பொருளைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட ஊடுகதிர் படங்கள் மிகத் துல்லியமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. Heparin மருத்துவத்திற்குப் பிந்தைய ஊடுகதிர்படம் இரத்தப்புரதத்தில் உள்ள Xa (factor Xa) காரணிகளை தெளிவாகக் காட்டுகிறது. Heparin சிகிச்சையை தொடருவதா வேண்டாமா என்பதை தீர்மானிக்க இந்த ஊடுகதிர் படங்கள் துணை செய்கின்றன.
இன்னும் படிக்க: http://www.sciencedaily.com/releases/2010/12/101208130040.htm

புதிய முறையில் மின்சார தயாரிப்பு
கே.ஆர்.ஸ்ரீதர் – இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது.இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு, அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர்.
அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர். அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார். அட, என்ன ஆச்சரியம்! மின்சாரம் தயாராகி வெளியே வந்தது. இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார் செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர் உருவாக்கி இருக்கிறார்.
தான் கண்டுபிடித்த இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் செய்து காட்டிய போது அத்தனை விஞ்ஞானிகளும் அதிசயித்துப் போனார்கள். ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில் மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெரிய அளவில் பணம் வேண்டும். இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் பிஸினஸ் பிளான்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு செய்யும். ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார்.
அவர் பெயர், ஜான் டூயர். சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸை சேர்ந்தவர் இந்த ஜான் டூயர். அமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கக் காரணம், ஜான் டூயர் ஆரம்பத்தில் போட்ட முதலீடுதான். கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர்தான். ஆனால், ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஜான் டூயர் போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர். இது மிகப் பெரும் தொகை என்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான். காரணம், ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி. எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராத மின் உற்பத்தித் தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார் அவர்.
தவிர, ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும். இந்த பாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது மாதிரி பல நல்ல விஷயங்கள் ஸ்ரீதரின் கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்ததால் அவர் அவ்வளவுபெரிய தொகையை முதலீடு செய்தார்.
நல்லவேளையாக, ஜான் டூயரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு பலரும் உழைத்ததன் விளைவு இன்று 'ப்ளூம் பாக்ஸ்' என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸ் தயார் செய்துள்ளார். சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர் உருவாக்கியுள்ள இயந்திரம். இதற்கு உள்ளே ஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார். இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம். அல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம். இந்த பாக்ஸ்களை கட்டடத்துக்குள்ளும் வைத்துக் கொள்ளலாம். வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம் என்பது சிறப்பான விஷயம்.
உலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின் இணைப்புப் பெறாமல் இருக்கிறார்கள். ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின் இணைப்பு கொடுப்பதில்லை. கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்'' என்கிறார் ஸ்ரீதர். ஒரு 'ப்ளூம் பாக்ஸ்' உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். இதே பாக்ஸ் இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதே அங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக் காரணம்.
இன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டது. 'ப்ளூ பாக்ஸ்' மூலம் கூகுள் உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் மின்சாரமும் அதன் ஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது. வால் மார்ட் நிறுவனமும் 400 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை வாங்கி இருக்கிறது. இப்போது Fedex, E Bay, கோக்கா கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்ற பல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன.
100 கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு பாக்ஸின் விலை 7 முதல் 8 லட்சம் டாலர்! அட, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் E Bay நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்ரீதரிடமிருந்து ஐந்து பாக்ஸ்களை வாங்கியது. தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த பாக்ஸின் மூலமே தயார் செய்துவிடுகிறது. இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தை சேமித்திருக்கிறதாம் E Bay. இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' இருக்கும் என்கிறார்கள்.
சாதாரண மனிதர்களும் இந்த பாக்ஸை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000 டாலருக்குள் இருக்கும் என்கிறார் ஸ்ரீதர். அந்த அளவுக்கு விலை குறையுமா என்று கேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கம்ப்யூட்டர் இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதே என்கிறார்கள் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள். ஸ்ரீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நிஜமாகும் பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
மேலும் விவரங்களுக்கு:http://en.wikipedia.org/wiki/K._R._Sridhar
http://www.bloomenergy.com/
நன்றி: http://lttenews.com
Tuesday, May 29, 2012
தெரிந்து கொள்வோம் வாங்க பகுதி-18
தெரிந்து கொள்வோம் வாங்க
பகுதி-18
நமது அறிவிற்கு அப்பாற்பட்ட பல ஆச்சர்யங்கள்
நிறைந்தது தான் விண்வெளி. என்னதான் விஞ்ஞானம் மூலம் ஆராய்ச்சிகள் பல மேற்கொண்டாலும்
இன்னும் புதிய புதிய தகவல்கள் கிடை த்துக் கொண்டேதான் இருக்கின்றன. சூரியன்,
கிரகங்கள், நட்சத்திரங்கள், விண்கற்கள் எனப் பல புதுமைகள் இந்தப் பால்வீதியில்
நிறைந்துள்ளன. அவற்றைப் பற்றிய சில தகவல்கள் இங்கே..
1. சூரியனில் ஆண்டுக்கு ஏழு முறை கிரகணம்
தோன்றுகிறது.
2. ஒருவரின் எடை பூமியில் 70 கிலோ என்றால்,
சூரியனில் அவரது எடை 2000 கிலோ.
3. அண்டார்டிகாவில் செப்டம்பர் 21-ஆம் தேதி
மட்டும் சூரியன் உதயமாகும்.
4. விண்வெளியில் பயணம் செய்த முதல் மிருகம்
லைக்கா (Laika) என்ற நாய்.
5. விண்வெளி வீர்ர்களுக்கு உணவாகப்
பயன்படுவது பாசி குளோரெல்லா.
6. சூரியனின் வெப்பக்கதிர்கள் 930 இலட்சம்
மைல்கள் பயணித்து, பூமிக்கு வர சுமார் எட்டு நிமிடங்கள் ஆகின்றன. நாம் பார்க்கும்
ஒளி, எட்டு நிமிடங்களுக்கு முந்தையது. மிக வேகமான ஒரு ஜெட் விமானம் இந்த தூரத்தைக்
கடக்க 18 ஆண்டுகள் ஆகும்.
7. பூமி தன்னைத்தானே ஒரு முறை சுற்றிக்கொள்ள
23 மணி நேரமும் 56 நிமிடங்களும் ஆகின்றன.
8. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின்
பெயர் நாசா.
9. இரவு வானில் கிட்டத்தட்ட 3000
நட்சத்திரங்களை, வெறும் கண் களாலேயே நம்மால் பார்க்க முடியும்.
10. பூமி விண்வெளியில் சுமார் 1,07,343
கி.மீ வேகத்தில் சுற்றுகிறது.
11. சூரிய கிரகணம் சுமார் 8 நிமிடங்கள்
மட்டுமே நிகழும். ஆனால் சந்திர கிரகணம் 10 நிமிடங்களுக்கு மேல்
நீடிக்கலாம்.
12. நட்சத்திரங்கள் என்பது சொந்த ஒளியைக்
கொண்டு மிளிரும். கிரகம் என்பது சூரிய ஒளியை வாங்கிப் பிரதிபலிக்கும்.
13. சூரிய வெளிச்சத்தில் பூமியின் நிழல்
சுமார் 8,59,000 மைல்கள் தூரம் விழும்.
14. ஒரு விண்மீன் வெடித்துச் சிதறும் ஒளி,
நம் கண்ணுக்குத் தெரிய ஆகும் காலம் 1,70,000 ஆண்டுகள்.
15. 1866-ம் ஆண்டு பிப்ரவரி மாதம்
பவுர்ணமியே தோன்றவில்லை. அதே ஆண்டு ஜனவரி மற்றும் மர்ர்ச் மாதங்களில் இரண்டு
பவுர்ணமி கள் தோன்றின. இது போன்று அதிசயம் 25 லட்சம் ஆண்டுகளுக்கு பிறகு தான்
தோன்றுமாம்.
16. ஒவ்வொரு வருடமும் பூமியிலிருந்து 3.82
செ.மீ தூரம் நிலா விலகிச் செல்கிறது.
17. சூரிய மண்டலத்தைப் பற்றிய படிப்பு
ஆஸ்டீரியோலஜி எனப்படும்.
18. உலக அளவில் ஆண்டுதோறும் 800 கோடி டன்
கார்பன்-டை- ஆக்ஸைடு தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களால் நாம் இயற்கையை
மாசுபடுத்துவதால் வளி மண்டலத்திற்குள் திணிக்கப்படுகிறது.
19. சந்திரனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள
தூரம் 3,64,000 கி.மீ
20. உலகிலேயே முதல் வான்வெளிப் புகைப்படம்,
அமெரிக்க உள்நாட்டுச் சண்டையின்போது பாராசூட்டிலிருந்து
எடுக்கப்பட்டது.
21. யுரேனஸ் கிரகத்தில் கோடைகாலம் 21
ஆண்டுகளும், குளிர் காலம் அதையடுத்த 21 ஆண்டுகளும் நீடிக்கின்றன.
22. மனிதனை விண்வெளிக்கு அனுப்பிய 14வது
நாடு இந்தியா.
23. 1970ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி
பூமியிலிருந்து இயக்கப்பட்ட லூனா கோடி என்ற ஆளற்ற ஓடமே சந்திரனில் இறங்கிய முதல்
ஓடமாகும்.
24. ஒரு மின்னல் 250 கோடி வோல்ட்ஸ்
மின்சக்தி கொண்டது.
25. நிலவு ஒளி பூமிக்கு வர எடுக்கும் நேரம்
1.3 நொடி.
26. நிலவை முதலில் டெலஸ்கோப் வழியாகப்
பார்த்தவர் கலிலியோ.
27. பூமி சந்திரனுக்கு மிக அருகில் வருவது
டிசம்பர் மாதத்தில். பூமி சூரியனுக்கு மிக தொலைவில் போவது ஜூலை
மாதத்தில்.
பூமியிலிருந்து சுமார் 20 ஆயிரம் கிலோ
மீட்டர் தூரத்திற்கு மேல் நிலைநிறுத்தப்பட்ட செயற்கை கோள் மூலம் பூமியின் நடவடிக்கை
களை கண்காணிக்கலாம். அதாவது பூமியின் ஏதாவதொரு இடத் தில் நடக்கும் சம்பவங்களை,
சிக்னல்கள் அனுப்பியும் பெற்றும் கண்காணிக்க முடியும். சாதாரணமாக ஒரு தெருவில் கீழே
கிடக்கும் ஒரு தபால் தலையின் அச்சிடப்பட்ட முகத்தைக் கூட பார்க்க முடி யும் என்பதே
இதன் சிறப்பு. இந்த தொழில்நுட்ப உதவியைக் கொண்டு சீற்றங்களை முன் கூட்டியே
அறியலாம். இந்தப் புவி ஆய்வு முறையை ஆங்கிலத்தில் Global Positioning System (GPS)
என்று அழைக்கிறார்கள்.
பூமி
சூரியனைச் சுற்றுவது நமக்குத் தெரியும். அதேபோல் விண் வெளியின் மையத்தைச் சூரியன்
சுற்றும். வட்டப் பதையில் இது நொடிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றும். ஒரு
முறை மையத்தைச் சுற்றி முடிக்க 250 மில்லியன் வருடங்களாகும். இது ஒரு காஸ் மிக்
வருடம் (Cosmic year) எனப்படுகிறது.
இன்னும் நம் கண்களுக்குப் புலப்படாத பல
அதிசயங்கள் வான்வெளியில் உள்ளன.
இணையத்திலிருந்து
தெரிந்து கொள்வோம் வாங்க!பகுதி-10
அறியாத சில விசயங்களை
தெரிந்து கொள்வோம் வாங்க! பகுதி-10
தெரிந்து கொள்வோம் வாங்க! பகுதி-10
குரங்குகள் மலைப்பகுதிகளில் அதிகம் காணப்படும்
என்பது நமக்கெல்லாம் தெரிந்த விஷயம்தான். ஆனால் மிக அதிகமான மலைப் பகுதியில்
குரங்குகளை பார்க்க முடியுமா?... முடியும். சீனா திபெத்திய பீட பூமியின்
தென்பகுதிகளில் காணப்படும் தங்க நிறக் குரங்குகள் 10 ஆயிரம் அடி உயரமான மலையில்
அதிகம் வசிக்கின்றன. இது அபூர்வ வகை இனக் குரங்காகும். பனி காலத்தில் இவை கடும்
குளிரைத் தாங்க முடியாமல் மலையடிவாரத்திற்கு வந்து விடும். இதன் உடல் நீள அளவிற்கு
வாலின் நீளமும் இருக்கும். வால் இரண்டரை அடி நீளம் வரை வளரும்.
அண்மையில் சீனாவின் சான்டோங் நகரில் உள்ள மிருககாட்சி சாலையில் தங்க நிற பெண் குரங்கு ஒரு குட்டியை ஈன்றெடுத்தது. அந்தக் குட்டியை முதன் முறையாக பொதுமக்களின் பார்வைக்கு அனுமதித்தார்கள்.
***
முதன் முதலில் தென் ஆப்பிரிக்க நாட்டில்தான் வெள்ளைச் சிங்கங்கள் இருப்பது வெளி யுலகிற்குத் தெரிய வந்தது. அங்குள்ள டிம்பாவதி பகுதியில் வெள்ளைச் சிங்கம் இருப்பதை உறுதி செய்தனர். ஆனால் உண்மையில் அவை வெள்ளை நிறம் அல்ல, பிறவிக் கோளாறு காரணமாக இப்படி இவை பிறந்திருக்கலாம் என்று கருதினார்கள்.
ஆனால் உண்மையில் வெள்ளைச் சிங்கங்கள் இருப்பது 1975-ம் ஆண்டு உறுதி செய்யப்பட்டது. இதேபோல் இந்தியாவிலும் வெள்ளைச் சிங்கம் இருப்பது கண்டறியப்பட்டது. இவற்றுக்கு வெள்ளைச் சிங்கம் என்று பொதுவான பெயர் இருந்தாலும் கூட அவற்றின் மீது மெல்லிய சாம்பல் நிறம் இருக்கிறது.
இந்த வெள்ளைச் சிங்கங்களை பிடித்து வளர்ப்பது சிரமமாக இருந்தது. இதனால் மிருககாட்சி சாலையில் இவற்றை வளர்க்க முடியாமல் இருந்தது. ஆனால் கடந்த 5 வருடங்களாக வெள்ளைச் சிங்கங்களை மிருககாட்சி சாலையில் இனப்பெருக்கம் செய்வதில் வெற்றி கிடைத்து விட்டது. அண்மையில் ஜெர்மனியின் நூரம்பெர்க் நகரில் ஒரு பெண் வெள்ளைச் சிங்கம் குட்டியொன்றை ஈன்றெடுத்தது.
***
அமெரிக்கா, கனடா நாடுகளில் மஞ்சள் நிற ராபின் குருவியை அதிக அளவில் பார்க்க முடியும். அண்மையில் இந்த பறவையை இங்கிலாந்து மக்கள் தங்களது நாட்டின் பெரும்பாலான இடங்களில் பார்க்க நேர்ந்தது. அவர்களில் பெரும்பாலானோர் இந்தக் குருவி நமது நாட்டிற்கு எப்படி வந்தது என்று புரியாமல் குழம்பினார்கள்.
வட அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக வீசிய சூறாவளிக் காற்றில் இந்தப் பறவை அட்லாண்டிக் கடலையும் தாண்டி வந்திருப்பது தெரிந்தது. காற்றின் போக்கிலேயே இங்கிலாந்து வந்து சேர்ந்த மஞ்சள் வயிற்று ராபின் குருவிகள் தற்போது தங்களின் புதிய இடத்தில் எந்த வித ஆபத்துமின்றி வாழ்கின்றன.
***
நமது நாட்டில் 1921-ம் ஆண்டு தீப்பெட்டி தயாரிக்கும் முதல் தொழிற்சாலை கொல்கத்தா நகரில் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு முன்பு தீப்பெட்டிகள் பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன.
***
தோன்றியதிலிருந்து அன்று முதல் இன்று வரை எந்த வித பரிணாம வளர்ச்சியும் அடையாத ஒரே உயிரினம் கரப்பான் பூச்சிதான்.
***
விளக்குகளில் இருந்து வெளியாகும் ஒரு வித இன்பாஸ்டிரேட் கதிரியக்கம்தான் விட்டில் பூச்சிகள் விளக்குகளை நோக்கி வரக்காரணமாக உள்ளது.
***
ஆப்பிரிக்க காடுகளில் வாழும் சிறுத்தை புலிகள் மான்களை விரட்டிப் பிடிக்கும்போது மணிக்கு 100 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும். அப்போது 125 அடி தூரத்தைக் கூட ஒரே துள்ளலில் தாண்டிவிடும். அகப்பட்டுக் கொண்ட மானின் எடை வாயில் கவ்வி தூக்கிச்செல்லக் கூடிய அளவில் இருந்தால் அப்படி மரத்தின் மீது ஏறி அங்கேயே உட்கார்ந்து கொண்டு இரையைத் தின்னும்.
கழுதைப் புலி போன்ற சிறிய விலங்குகளின் தொல்லையில் இருந்து தப்பிப்பதற்காகவே இவ்வாறு இரையை மரத்தின் உச்சிக்கு சிறுத்தைகள் கொண்டு செல்கின்றன.
***
உலகப் புகழ்பெற்ற பாபா பிளாக் ஷீப் என்ற மழலையர் ஆங்கிலப் பாடலின் சில வரிகளை மாற்றியமைக்கப்போகிறார்க?.பிளாக் ஷீப் என்பது கறுப்பர் இனத்தைக் குறிப்பதாக புகார் வந்ததால் இந்த முடிவு. பிளாக் என்பதற்குபதில் ரெயின்போ என மாற்றப்போகிறார்கள். இனிமேல் இந்தப் பாடல் பாபா பாபா ரெயின்போ என்று பாடப்படும்.
இப்போது இந்தப் பாடல் இங்கிலாந்தில் பாபா பாபா கிரீன்ஷீப் எனவும் ஸ்காட்லாந்தில் பாபா பாபா ஹேப்பிஷீப் எனவும் பாடப்படுகிறது.
***
புகைப்பட காமிரா உருவத்தின் நீள, அகலத்தை மட்டுமே படம்பிடிக்கும். ஆனால் உருவத்தின் ஆழத்தைக் காட்ட இயலாது. நம் இரண்டு கண்களும் வெவ்வேறு இரண்டு உருவங்களைப் பார்க்கும்போது மூன்றாவது பரிமாணம் ஏற்படுகிறது. எனவேதான் பார்க்கும் பொருளின் ஆழத்தை நம் கண்களால் காண முடிகிறது.
***
ஆழ்கடலில் மலர்ச்செடி போல் அழகாக இருப்பது கடல் அனிமோன். இது இருந்த இடத்தை விட்டு நகராமலேயே இரையைப் பிடிக்கும். இதன் உடலில் இழைகள் மொட்டுகள் போன்ற அமைப்புகள் உண்டு.
இரையைப் கண்டதும் தன் மொட்டுக்களை வெடிக்கச் செய்து ஒரு வித விஷத்தை அதன் உடலில் பாய்ச்சிவிடும். பிறகு அவற்றை உண்ணும்.
***
* உலகிலேயே மிகவும் சிறிய மரம் குட்டை வில்லோ என்னும் மரமாகும். இந்த மரத்தின் மொத்த உயரம் இரண்டே அங்குலம்தான்.
* ஆகாயத் துப்புரவு தொழிலாளி என்று காக்கையை அழைப்பார்கள்.
*விவசாயியின் நண்பன் மண் புழு என்பது உங்களுக்குத் தெரியும். பகைவன் யார் என்று தெரியுமா?... வெட்டுக்கிளிதான் அந்த புண்ணியவான். பெருமளவு பயிர்களை வெட்டுக் கிளிகள் வளரவிடாமல் அழிப்பதால்தான் அதற்கு இந்தப் பெயர்.
* கடல் நீரில் உப்பு 3.5 சதவீதம் கலந்துள்ளது.
* கடலின் சராசரி ஆழம் 3.75 கிலோ மீட்டர்கள்.
Engr.Sulthan

தெரிந்து கொள்வோம் வாங்க!பகுதி-6
Subscribe to:
Posts (Atom)