இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்களை வரை அனைவரையும் வாட்டி வதைக்கிறது “அல்சர்”.
ஆரோக்கியமற்ற உணவு பழக்க வழக்கம், துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளால் மக்கள் ஈர்க்கப்படுகின்றனர்.
அல்சர் என்பது என்ன?
தொண்டையில் தொடங்கி இரைப்பை வரை உணவு செல்ல உதவும் உணவுக்குழாய், இரைப்பை, முன்சிறுகுடல் ஆகியவற்றில் ஏற்படும் புண்களைப் பொதுவாக ‘பெப்டிக் அல்சர்’ (Peptic ulcer) என்கிறோம்.
|
Saturday, January 17, 2015
அல்சரால் அவதியா? கவலைய விடுங்க
ஈஸியான மருத்துவ குறிப்புகள்: ட்ரை பண்ணி பாருங்க
உப்பு தண்ணீரில் குளிப்பதால் கிடைக்கும் சூப்பரான நன்மைகள்
உப்பு தண்ணீரில் தொடர்ச்சியாக குளித்து வரும் போது உடல் ரீதியான மற்றும் மனரீதியான நன்மைகள் கிடைக்கின்றன.
சாதாரண தண்ணீரில் குளிக்கும் போது உடலில் உள்ள கிருமி தொற்று நீங்குவதற்கு சாத்தியம் இல்லாமல் போகலாம். ஆனால் உப்பு தண்ணீரில் குளிக்கும் போது உடலில் ஏற்பட்ட காயங்கள் மற்றும் அதன் மூலம் உண்டாகும் தொற்றுகள் ஆகியவை பாதிப்பை ஏற்படுத்துவதை தவிர்க்கலாம்.
|
Wednesday, January 14, 2015
`ரெடிமேட்' உணவுகள் சரியா... தவறா? பரோட்டா, சப்பாத்தி, இடியாப்பம்...
இன்றைய அவசர உலகில் சென்னை, மும்பை, டெல்லி போன்ற மெட்ரோபாலிட்டன் நகரங்கள் முதல், அடுத் தடுத்த இடங்களில் இருக்கும் நகராட்சிகள் வரை வேர் ஊன்றி உள்ளது 'ரெடி டு ஈட்’ உணவுகளின் வியாபாரம். 'பெரு நகரங்களில் 82% குடும்பங்கள் ரெடிமேட் உணவுகளிடம் சரணடைந் துள்ளன' என்கிறது சமீபத்தில் வெளியான ஒரு புள்ளிவிவரம். பல மணி நேர சமையலறைச் சுமையை, சில நிமிடங்கள் ஆக்கியிருப்பதாலே பலராலும் விரும்பப்படும் இந்த ரெடிமேட் உணவுகளில் கலக்கப்படும் ரசாயனங்களும், அது ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளும் நிறைய நிறைய! அதைப் பற்றியதே இந்தக் கட்டுரை!
இம்சை தரும் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்!
குழந்தைகளுக்கான நூடுல்ஸ் விளம்பரங்கள் நிறைய நிறைய. இன்னொரு பக்கம், விதவிதமான வடிவங்கள், ஃப்ளேவர்கள் என நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு களமிறங்குகின்றன. விளைவு... கிராமத்துக் குழந்தைகள் வரை விரும்பிச் சாப்பிடுகிறார்கள் நூடுல்ஸ்!
‘இரண்டே நிமிடத்தில் ரெடி!’ என்பதையே பிரதான பிளஸ் பாயின்டாகக் கொண்டுள்ள இந்த இன்ஸ்டன்ட் நூடுல்ஸ், நம் வயிற்றில் செரிக்க எத்தனை மணி நேரம் ஆகிறது என்பது, அதிர்ச்சித் தகவல்!
மஸாச்சுசெட்ஸ் ஜெனரல் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர். பிரேடன் குவோ, இதுகுறித்து ஓர் ஆராய்ச்சி மேற்கொள்ள விரும்பினார். ஒருவரை பிரபலமான இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் சாப்பிட வைத்து, உடனேயே மாத்திரை வடிவிலான கேமரா ஒன்றை அவரை விழுங்கச் செய்தார். கேமரா குடலுக்குச் சென்றதும் அங்கு நூடுல்ஸ் செரிக்கும் புராசஸ், இங்கே வெளியே மானிட்டரில் தெரிகிறது. சாதாரணமாக, வீட்டில் தயாரிக்கும் நூடுல்ஸ் நம் வயிற்றில் 20 நிமிடங்களில் ஜீரணிக்கப்பட்டு விடும். ஆனால் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ், இரண்டு மணி நேரம் கழித்தும் பாதியளவே ஜீரணிக்கப்படுகிறது. செரிமானத்திலேயே இவ்வளவு சிக்கல் என்றால், அது ஏற்படுத்தும் விளைவுகள் அச்சம் கொள்ள வைக்கின்றன! http://bit.ly/1xjW5uE இந்த லிங்க்கை பாருங்கள். அதன்பின் உங்கள் குழந்தைகளுக்கு இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் வேண்டுமா, வேண்டாமா என்று முடிவெடுங்கள்! |
Monday, January 12, 2015
பில்லிங் தொழில்நுட்பம்!
சிறிய அளவில் கடை வைத்து வியாபாரம் செய்பவர்கள் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் உழைக்கிறார்கள். ஆனால், அதன் பலனாக அவர்களுக்கு கிடைப்பதென்னவோ ஒரு சில ஆயிரம் ரூபாய்தான். பல லட்சம் ரூபாய் முதலீடு செய்து, பல ஆண்டுகள் உழைத்தும் பெரிய அளவில் லாபம் கிடைக்காமல் போவதற்கு ஒரு முக்கிய காரணம், வருமானமும் செலவும் சரியானபடி கணக்கில் வராமல் போவதினால்தான். சரியான லாபம் கிடைக்காமல் தவிக்கும் இவர்களுடைய பிரச்னைக்குத் தீர்வு தேடி, சில கடைகாரர்களைச் சந்தித்தோம்.
Sunday, January 11, 2015
சிக்கனுடன் எதற்கு எலுமிச்சை...?
‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்று நம் முன்னோர்கள் வாழ்ந்து வந்தார்கள். நாம் சாப்பிடும் உணவு சரியாக இருந்தால், நோய் அண்டாது என்பது முன்னோர்களின் அனுப அறிவு.
உலகின் வல்லரசு நாங்கள் என்று மார்த்தட்டிக் கொள்ளும் நாடுகள் உருவாகும் முன்பே... தமிழ் மண்ணில் நாகரீகமும், வாழ்வியல் முறையும் ஓங்கி உயர்ந்திருந்தது. காலையில் பல் துலக்குவதில் தொடங்கி, படுக்கைக்கு செல்லும் வரை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒவ்வொரு விஷயத்தையும் பரிசோதித்து பார்த்து வாழ்ந்து வந்துள்ளார்கள்.
|
Subscribe to:
Posts (Atom)