Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Showing posts with label குலசை. Show all posts
Showing posts with label குலசை. Show all posts

Thursday, October 23, 2014

தெலா கிணறு... தமிழர்களின் பாரம்பரிய நுட்பம்...!



கிணறுகளில் பலவகை உண்டு. அவற்றில் பழமையானதுதான் ’தெலா கிணறு’. தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி, ஆத்தூர், அடைக்கலாபுரம், குலசேகரன்பட்டினம் என சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் தெலா கிணறுதான் வழக்கத்தில் இருக்கு. கிணறுகளில் கப்பி அல்லது கயிறை போட்டு தண்ணீரை இறைப்பார்கள். ஆனால், தெலா கிணத்துல் கயிறு, கப்பிக்குப் பதிலாக நீளமான கம்பியில் வாளி கட்டப்பட்டிருக்கும், எதிர் முனையில் பெரிய தடியில் முப்பது கிலோ எடையுள்ள கல்லைக் கட்டி வைத்திருப்பார்கள்.

Friday, October 10, 2014

#குலசை_தசராவும் #மனித_நேயமும்!!




இந்தியாவில் நடைபெரும் மிகப் பிரமாண்டமான தசரா விழா மைசூருக்கு அடுத்து குலசையில் தான் பெரிய அளவில் கொண்டாடப் படுகிறது..
ஒரே நாளில் (பத்தாம் நாள்) பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த சிறிய ஊரில் கூடுகிறார்கள். நாட்டின் பல பாகங்களிலும் இருந்து வருகிறார்கள்.. இந்த கூட்டத்தை தாங்கும் அளவுக்கு கட்டமைப்பு வசதிகள் இல்லாத ஊர் இது.. இருப்பினும் ஊர் மக்களும், பஞ்சாயத்து நிர்வாகமும் வரும் கூட்டத்திற்கு வேண்டிய வசதிகளை முடிந்தளவு செய்து கொடுக்கிறார்கள்..

Wednesday, January 29, 2014

புதிய வலைப்பூ “குலசை” பார்க்க! ரசிக்க!!





இந்த இணையத்தின் சகோதர தளமான “குலசை” வலைப்பூ தற்போது புதிய வடிவில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பதிவுகளுடன் உங்களுக்காக.

புதிய தளம் “குலசை-kulasai ஐப் பார்க்க இங்கே சொடுக்கவும். நன்றி!!
 குலசை சுல்தான்.

Saturday, January 18, 2014

பிரெஞ்ச் கயானாவுக்கு நிகரான குலசேகரப்பட்டினம்: வேண்டுமென்றே புறக்கணிக்கிறதா இஸ்ரோ?

4இந்தியாவில் மூன்றாவது ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான உயர்நிலைக் குழு அறிக்கை சமர்ப்பிக்கும் முன்பாகவே, மூன்றாவது தளம் ஸ்ரீஹரிகோட்டாவில்தான் என்று திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார் இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன். பிரெஞ்ச் கயானாவுக்கு நிகராக, ராக்கெட் ஏவுவதற்கான அனைத்து சாதக அம்சங்களையும் கொண்டிருக்கும் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தை இஸ்ரோ புறக்கணிப்பது விண்வெளி விஞ்ஞானிகளை மட்டுமின்றி தமிழக மக்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Saturday, November 23, 2013

ஆந்திராவில் அவசரகோலத்தில் ராக்கெட் இணைப்புக் கூடம்?

ஆந்திராவில் அவசரகோலத்தில் ராக்கெட் இணைப்புக் கூடம்? - நடுநிலை விஞ்ஞானிகள் அதிர்ச்சி

இந்தியாவில் மூன்றாவது ராக்கெட் ஏவுதளத்தை குலசேகரப்பட்டினத்தில் அமைப்பதற்கான நியாயமான சாத்தியக்கூறுகள் மற்றும் அவை சார்ந்த விவாதங்கள் வலுப்பெற்றுள்ள நிலையில் - சர்ச்சைகளுக்குத் தீர்வுகள் காணப்படாமலேயே ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு அச்சாரமாக ரூ.363.5 கோடி மதிப்பில் ராக்கெட் இணைப்பு தொழிற்கூடம் (Vehicle assembly building) அமைப்பதற்கான பணிகளை ஆந்திர அதிகாரிகள் அவசர கோலத்தில் மேற்கொண்டு வருகின்றனர்.

Thursday, November 21, 2013

‘ஏவுதளம்’ இங்கே வந்திட ஏன் வீண் தயக்கம்?



மாவட்டத்தில் உள்ள மகேந்திரகிரியைச் சேர்ந்த திரவ எரிவாயு மையத்தில்
பணிபுரிவோர் அனுப்பிய வேண்டு கோளினை பரிந்துரை செய்து நான் கடந்த 19-8-2013 அன்று பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களுக்கு கடிதம்
அனுப்பியிருந்தேன். கனிமொழி என்னிடம் வேண்டுகோள் கடிதத்தைக் கொடுத்ததோடு, மாநிலங்கள் அவையிலும் அதைப்பற்றி எழுப்பிய கேள்விக்கு,
அளிக்கப்பட்ட பதிலில், ""“ISRO has two operational launching pads located at Satish Dhawan Space Centre, Sriharikota - the First Launch Pad and the Second Launch Pad, with necessary infra structure to support eight launches per year. The launching infra structure at Sriharikota will be strengthened with the addition of Second Vehicle Assembly Building at SLP, which will enhance the launch frequency to twelve launches per yearby 2017”" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும்: கருணாநிதி

குலசேகரப்பட்டினத்தில் 3-ஆம் ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-

Saturday, September 28, 2013

ராக்கெட் ஏவு தளம் மீண்டும் கோட்டை விடுகிறதா தமிழகம்?

மீண்டும் கோட்டை விடுகிறதா தமிழகம்?
இந்தியாவில் மூன்றாவது ராக்கெட் ஏவு தளம் அமைப்பதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு புவியியல், பாதுகாப்பு மற்றும் பொருளாதார ரீதியாக நாட்டிலேயே மிகச் சிறந்த இடமாக தூத்துக்குடி மாவட்டத்தின் குலசேகரப்பட்டினம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இஸ்ரோ விண்வெளி கமிட்டியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு இல்லாததால் திட்டம் கடந்த ஆறு மாதங்களாக இழுபறியில் நிற்கிறது. மேலும், பெரும்பான்மை ஆந்திர அதிகாரிகள் லாபகரமான இத்திட்டத்தை ஆந்திராவுக்குக் கடத்திச் செல்ல தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

Saturday, August 3, 2013

மகத்தான நற்பாக்கியங்கள்!

மகத்தான நற்பாக்கியங்கள்!

1) அல்குர்ஆனிலிருந்து ஓர் எழுத்தை ஓதினால் பத்து நன்மைகள் கிடைக்கும்
2) லுஹாவுடைய இரண்டு ரக்அத்துகளை தொழுதால் 360 தர்மங்களை செய்த நன்மையைப் பெற்றுக் கொள்வார்.
3) 100 தடவை ‘ஸுப்ஹானல்லாஹ்‘ என்று கூறினால் அவருக்கு 1000 நன்மைகள் எழுதப்படும். அல்லது 1000 பாவங்கள் மன்னிக்கப்படும்.
4) அல்கஹ்ப் அத்தியாயத்தின் முதல் 10 வசனங்களை மனனமிட்டால் தஜ்ஜாலின் குழப்பங்களிலிருந்து பாதுகாப்பு பெற்று விட்டார்.
5) எவர் கடமையான தொழுகைகளுக்கு முன் பின் உள்ள பன்னிரண்டு ரக்அத் சுன்னத்தை தொழுது வருவாரோ அல்லாஹ் அவருக்கு சுவர்க்கத்தில் ஒரு மாளிகையை எழுப்புகின்றான்
6) எவர் நபியின் மீது ஒரு தடவை ஸலவாத்துச் சொல்வாரோ அல்லாஹ் அவருக்கு பத்து முறை அருள் புரிகின்றான்
7) எவர் மஸ்ஜிதுக்கு செல்வாரோ அல்லது மஸ்ஜிதில் இருந்து திரும்புவாரோ மஸ்ஜிதுக்கு செல்லும் போது அல்லது திரும்பும் போது வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் சுவர்க்கத்தில் அந்தஸ்துகள் உயர்த்தப்படும்.
8.) அல்லாஹ்வின் அழகிய 99 திருநாமங்களை எவர் மனனமிடுவாரோ அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்.
9) எவர் கடமையான தொழுகையின் பின் ஆயதுல் குர்ஸியை ஓதி வருவாரோ அவருக்கு சுவர்க்கம் நுழைவதற்கு மரணத்தை தவிர வேறெதுவும் தடையாக இருக்காது.
10) எவர் அழகான முறையில் ஒழுச் செய்து பிறகு ஜும்ஆவுக்கு வந்து மொளனமாக செவி தாழ்த்தி உரையை செவிமடுப்பாரோ அவரது ஜும்ஆவுக்கு இடைபட்ட பாவங்களும், மூன்று நாட்களின் பாவங்களும் மன்னிக்கப்படும்.
11) எவர் உறவினர்களுடன் சேர்ந்து வாழ்கின்றாரோ அல்லாஹ் அவரது ரிஸ்கை விஸ்தீர்ணப்படுத்துவதோடு, அவரது ஆயுளையும் நீட்டுகிறான்.
12) எவர் தனது சகோதர முஸ்லிமுக்கு மறைவில் பிரார்த்திக்கின்றாரோ அவருக்காக ஒரு வானவர் மறைவில் சாட்டப்பட்டு ஆமீன் கூறுவார். உமக்கும் அதே போன்று என கூறுவார்.
13) எவர் பாங்கின் பின் ‘அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித்ஃவதித்தாம்மா வஸ்ஸலாதில் காஇமா ஆதி முஹம்மதல் வஸீலத வல்பழீலத வப்அஸ்ஹு மகாமம் மஹ்மூதல்லதி வஅத்தஹு’ என்று ஓதுவாரோ அவருக்கு மறுமையில் நபிகளார் (ஸல்) அவர்களின் பரிந்துரை கிடைக்கும்.
14) எவர் அவையில் அமர்ந்து அதன் இறுதியில் அந்த அவையை விட்டு எழுந்து செல்வதற்கு முன் ‘ஸுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக அஷ்ஹது அல்லா இலாஹ இல்லா அன்த அஸ்தஃபிருக வஅதூபு இலைக்’ என்று ஓதவாரோ, அவர் அவையில் இருக்கும் போது நிகழ்ந்த அவரது பாவங்கள் மன்னிக்கப்படும்.
15) எவர் ஒவ்வொரு நாள் காலையிலும், மாலையிலும் ‘பிஸ்மில்லாஹில் லதீ லா யழுர்ரு மஅஸ்மிஹி ஷய்உன் பிஃல் அர்ழி வலா பிஃஸ்ஸமாஇ வஹுவஸ் ஸமீஉல் அழீம்’ என்று ஓதுவாரோ, அல்லாஹ்வின் நாட்டப்படி எந்த ஒரு தீங்கும் அவருக்கு நேராது.
16) எவர் அல்லாஹ்வின் வழியில் ஏதாவது ஒன்றை செலவிடுவாரோ அவருக்கு எழு நூறு மடங்கு நன்மைகளை அல்லாஹ் எழுதி விடுகின்றான்.
17) அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாள் நோன்பு நோற்றால் அல்லாஹ் எழு நூறு வருட தொலைவுக்கு அவரது முகத்தை நரகை விட்டு தூரப்படுத்துவான்.
18) எவர் ஒரு முஸ்லிமின் ஜனாஸாவை பின் தொடர்ந்து தொழுகையையும், நிரை வேற்றி, ஜனாஸாவை அடக்கும் வரை இருப்பாரோ அவர் இரண்டு கீராத் நன்மைகளை பெற்றவராக திரும்புவார். (கீராத் என்பது உஹத் மலைக்கு சமமாகும்).
19) ஒரு முஸ்லிமின் ஜனாஸாவை பின் தொடர்ந்து சென்று அதை அடக்கம் செய்வதற்கு முன் திரும்புவாரென்றால், அவர் ஒரு கீராத் அளவு நன்மைகளை பெற்று திரும்புகிறார்.
20) ஒரு முஸ்லிமை நோய் விசாரிக்கச் சென்றால் அவர் திரும்பும் வரை சுவர்க்கத்தின் ஒரு இறக்கையில் இருக்கின்றார்.
21) எவர் காலையில் நோன்பாளியாக, இன்னும் ஒரு நோயாளியை தரிசித்து, ஒரு ஜனாஸாவில் கலந்து, ஒரு ஏழைக்கும் உணவளித்தால் (ஒரே நாளில் இவைகள் அமைந்து விடுமானால்) அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்.
22) யார் கல்வியை கற்பதற்காக வெளியேறிச் செல்கின்றாரோ அல்லாஹ் அவருக்கு சுவனத்தின் பாதையை அழகு படுத்துகின்றான்.
23) ஒரு முஸ்லிமுக்கு துன்பம் ஏற்படும் போது ‘இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன், அல்லாஹும்ஃஜுர்னீ பீஃ முஸீபதி வஹ்லுஃப் லீ ஹயிரம் மின்ஹா’ அல்லாஹ் அவரது துன்பத்திற்கு நற்கூலி வழங்குவதோடு, அவரது துன்பத்தையும் மாற்றி அதை விட சிறந்ததை வழங்குவான்.
24) எவர் ஒருவர் அழகான முறையில் ஒழுச் செய்வாரோ, அவரது பாவங்கள் அவரது உடலை விட்டு வெளியேறும், நகத்தின் கீழிருந்து நிகழ்ந்த பாவங்கள் உட்பட.
25) ஒரு முஸ்லிமின் சோதனையை எவர் இந்த உலகில் போக்குவாரோ, அவரது துன்பத்தை அல்லாஹ் மறுமையில் நீக்குவான்.
26) எவர் ஒரு முஸ்லிமின் குறையை மறைப்பாரோ அல்லாஹ் அவரது குறையை நாளை மறுமையில் மறைப்பான்.
27) எவர் ஒருவரின் கடனை இழகு படுத்துகின்றாரோ, அல்லது அதை தல்லுபடி செய்கின்றாரோ நிழலே இல்லாத நாளை மறுமையில் அல்லாஹ் அர்ஷின் கீழ் அவருக்கு நிழல் வழங்குவான்.
28) எவர் ஒழுச் செய்ததன் பின் ‘அஷ்ஹது அல்லா இலாஹ இல்ல ல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு’ அவருக்கு சுவனத்தின் எட்டு வாயில்களும் திறக்கப்படும் அவர் விரும்பிய வாயில் ஊடாக சுவர்க்கம் நுழைவார்.
29) எவர் நேர் வழியின் பால் அழைப்பு விடுப்பாரோ அவரை பின் பற்றியவர்களின் கூலி இவருக்கு உண்டு, அவர்களது கூலியில் எதுவும் குறைக்கப்பட மாட்டாது.
30) நன்மையை எதிர்ப்பார்த்து தனது குடும்பத்துக்கு எவர் செலவளிப்பாரோ அவருக்கு தர்மத்தின் நன்மை உண்டு.
 நன்றி சுவனத்தென்றல்
Engr.Sulthan

Saturday, June 16, 2012

கரு வேல மரத்தால் அப்படி என்னதான் கெடுதல்?

கருவேல மரம் நிலத்தடி நீரை உருஞ்சுவது பற்றி வேறு யாரும் ஆக்ரிகல்சுரல் இன்ஜினியர், விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும்

எனது கருத்து
இதற்கு ஏற்ற ஆள் சகோதரர் இன்ஜினியர் சுல்தான் தான். அவர் சற்று விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும்.


Best Regards
Vahid Malimar.
சகோ.வாஹித் அவர்கள் என் மேல் வைத்திருக்கும் ஆழமான நம்பிக்கையை காக்கும் பொருட்டு, என்னிடமுள்ள ,இணையங்களிலிருந்து, திரட்டிய தொகுப்புகளில் தேடிப் பார்த்ததில் கிடைத்த தகவல்களை இங்கு தருகிறேன். மற்றபடி இதைப் பற்றி நமக்கு அதிகமாக தெரியவில்லை. "மரம் வளர்ப்போம்" எனும் சித்தாந்தத்தின் படி வாழ்பவன் நான். அதற்காக, மரங்கள் மீது கொண்ட காதலால் வீட்டு மொட்டை மாடி தானே என்று கூட பாராமல் நிறைய கண்ட மரங்களையும் வளர்க்கிறேன். களையை பிடுங்கி போட கூட மனம் வராது. இவைகளை பாதுகாக்க வேண்டும் என்ற ஆவலில், தொடர்ந்து 2,3 நாட்கள் வெளியூர் செல்ல வேண்டிய பயணத்தைக் கூட ரத்து செய்ய வேண்டியிருக்கிறது.
இனி கருவேல மரம் வேண்டுமா வேண்டாமா என்ற பட்டி மன்றத்தினை சகோதரர்கள் தொடர வழி அமைத்து கொடுத்து விட்டேன்...ஹும்...தொடருங்கள்...

சரி கரு வேல மரத்தால் அப்படி என்னதான் கெடுதல் என விரிவாக அறிந்து கொள்வோமே என்று தேடிப்பார்த்தால் ஆச்சர்யமான, அதிர்ச்சியான சில உண்மைகள் விளங்கின. அவைகளைத்தான் இங்கே விளக்கமாக பார்க்க போகிறோம். விசயத்திற்கு செல்லும் முன் வெட்டசொன்ன மரத்தினை பற்றி சிறு அறிமுகம்.


Image

இதன்
அறிவியல் பெயர் : Prosopis Juliflora

நம்மூரில் அறியப்படுவது : சீமை கருவேலம் அல்லது வேலிமரம்


இந்த மரத்தின் தீமைகளாக எடுத்து வைக்கப்படும் விசயங்கள்...
1) இந்த மரம் அதிகம் விஷத்தன்மை கொண்டது.
2) இதன் வேர்கள் ஆழமாக சென்று நீரை உறிஞ்சி விடுவதால் நீராதாரம் பாதிக்கப்பட்டு தென்தமிழகத்தின் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் நிலவும் வறட்சிக்கு இவைகளே முக்கிய காரணம்.

3) இந்த மரத்தின் எந்த ஒரு பொருளும் பயன்பாட்டுக்கு உதவாது, முக்கியமாக இலை,காய் (நெத்து), பூ என எல்லாமே விஷத்தன்மையுள்ளது. ஆகையால் கால்நடைகள் தெரியாமல் உண்டுவிட்டால் உயிரிழப்பு ஏற்படும்.
4) நிலத்தடி நீரை விஷமாக மாற்றுவதோடு இல்லாமல் மண்ணின் வளத்தை முற்றிலுமாக சீரழித்து விடும். இது வளர்ந்த இடத்தில் எதையுமே பயிரிடமுடியாது. விவசாய நிலங்களை ஆக்கிரமித்து விவசாயத்தை கெடுக்கிறது

5) இந்த மரத்தில் கால்நடைகளை கட்டிவைத்தால் அவைகள் மலடாக மாறும் அல்லது கன்றுகள் ஊனமாக பிறக்கும்.

இதே விசயங்கள் இணையம் முழுதும் எங்கும் பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் உண்மை அப்படியே நேர்மாறாக இருக்கிறது. அதனால் ஒரேயடியாக இந்த மரத்தை விஷம் நிறைந்த மரம் என்று ஒதுக்கி தள்ளுவதற்கு முன் இதனை பற்றி சரியாகத் தெரிந்து கொள்வது கொஞ்சம் அவசியமாகிறது.

இதை இங்கு தெரிவிப்பதின் காரணம் இந்த மரம் நமக்கு மிகவும் அவசியமானது, இதை வீட்டுக்கு ஒன்றாக வளர்க்க வேண்டும் என இந்த மரத்துக்கு பரிந்துபேசி வலியுறுத்த போவதில்லை. மாறாக இந்த மரத்தைப் பற்றிய தவறான தகவல்களை ஆதாரங்களோடு மறுப்பதோடு, சொல்லிக்கொள்ளும் அளவில் இருக்கும் இம்மரத்தின் நன்மைகளையும் பார்க்கப் போகிறோம்.

ஆனால் இதன் பொதுவான தீங்கு விவசாய நிலங்களில் வளர்ந்து விவசாயிகளுக்கு பெரும் தொந்தரவாக இருப்பது. இது பெரியதாக வளர்ந்து விட்டால் இதன் வளர்சித்தன்மையின காரணமாக வேகமாக பரவும். அதுவும் எந்த காலநிலையும்,மண் தன்மையும் இதன் வளர்ச்சியை ஒன்றும் செய்ய முடியாது. பெரும்பாலும் எந்த விவசாயியும் இதனை தனது நிலத்தில் வளர அனுமதிப்பது இல்லை அந்த நிலத்தில் தொடர்ந்து விவசாயம் செய்யும் பொருட்டு. இது ஒன்றுதான் நாம் எதிர்கொள்ளும் தீமை.அதுவும் நாமே அதை வளர அனுமதித்தால் ஒழிய.
1. விஷச்செடியா??

இது விஷச்செடி வகையை சார்ந்ததா என்றால் நிச்சயமாக இல்லை. விஷச்செடி என்றால் அரளிச்செடியை சொல்லலாம். இந்த முறையில் பார்த்தால் இந்த மரத்தினால் உயிரினங்களுக்கு அந்த மாதிரியான எந்த பாதிப்பும் இல்லை. மேலும் இதன் முள் விஷத்தன்மை வாய்ந்தது, இலையை தின்றால் உயிரிழப்பு என்பதெல்லாம் முற்றிலும் ஆதாரமற்ற விசயங்களே.
2. வறட்சிக்குக் காரணமா?

அடுத்து சில மாவட்டங்களில் நிலவும் வறட்சிக்கு இதுதான் முக்கிய காரணம் என்பது அபத்தமானது. வறட்சி என்பது ஒருவகையில் மட்டும் வருவது இல்லை. பல காரணிகள் பின் நிற்கின்றன. மண்வளம், நிலத்தடி நீரின் அளவு, காற்றில் நிலவும் ஈரப்பதம் போன்ற காரணிகள். இந்த மரமே இதை சுற்றியுள்ள காலநிலையை நிர்ணயிக்கிறது என்பதும் சரியில்லை.

குறிப்பாக விருதுநகர்,ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலவும் வறட்சிக்கு அங்கு நிலவும் மண்வளமே காரணம். மண்ணில் காணப்படும் கால்சியம் கார்பனேட் (Calcium carbonate) மண்ணின் வளம் மேம்படுவதை வெகுவாக பாதிக்கிறது. வைகைப் படுகை இடங்களைத் தவிர மற்ற இடங்களில் மணல், உவர்நிலங்களாகவே இருக்கின்றன.
இப்படி அதிகமாக காணப்படும் தரமற்ற மண்ணில் மரவகைகள் செழித்து வளர்வது முடியாத காரியம். ஆனால் இந்த கருவேலம் மரத்துக்கு மண் வளம் பெரிய பிரச்சினையே இல்லை. முக்கியமாக உவர், உப்பு நிலங்களில் கூட செழித்து வளரும். இதுவளரும் சூழ்நிலையில் மற்ற மரங்கள் வளர்வது சாத்தியமற்றது.

இந்த வறட்சியான சூழ்நிலையை கருத்தில் கொண்டுதான் பென்னி குக் பெரியார் அணையே கட்டினார். ஏனென்றால் வைகை ஆற்றில் இருந்து கிடைக்கபெரும் நீர் அங்கு நிலவும் வறட்சியை தாக்குப்பிடிக்க முடியாது என்று எண்ணியதே. முக்கியமான விசயம் என்னவென்றால் பல நூறு வருடங்களுக்கு முன்னரே இந்த வறட்சி இருந்து இருக்கிறது. ஆனால் கருவேலம் இந்தியாவுக்கு வந்தது 1857 ல் தான். அதுவும் தமிழகத்துக்கு இதன் வருகை கொஞ்சம் காலம் தள்ளியே இருக்க வேண்டும். பார்க்க..
///the earliest recorded introduction of P. juliflora was in 1857, the first systematic plantations were not carried out until 1876 ~ 77 in the Kaddapa area of Andhra Pradesh. It was introduced into parts of Gujarat in 1882 ///

ஆனால் பெரியாறு அணை கட்டும் திட்டம் 1807 ல் அடிப்படை வேலைகள் தொடங்கி சில பிரச்சினை வந்து அப்புறம் 1882 ஆம் ஆண்டில் முழுவதும் கட்டி முடிக்கபெற்று இருக்கிறது. இந்த அணை கட்டுவதற்க்கு முன்பே நிலவிய வறட்சியின் காரணமே இதனை உருவாக்கும் எண்ணம்அவருக்கு தோன்றி இருக்கிறது.

எனவே இந்த கருவேலம் மரம்தான் அங்கு நிலவும் வறட்சிக்கு முழுக்காரணம் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்வதில் அர்த்தமில்லை. மேலும் மற்ற மரங்கள் வளரமுடியாத அந்த உவர் நிலங்களில் இந்த கருவேல் மரம் வளர்ந்து அப்பகுதி மக்களுக்கு கரிமூட்டம், அடுப்பு எரிக்க விறகு போன்ற விசயங்களுக்கு உதவுகின்றது.

3. எப்படி பயனளிக்கிறது...?
எரிபொருளாக

இந்த மரத்தில் இருந்து கிடைக்கும் பொருள்களை அப்படியே விஷம் என்று சொல்லி ஒதுக்கி இருந்தால் இந்நேரம் அதிக இழப்புகளை சந்தித்து இருப்போம். முக்கியமாக ஏழை மக்கள். அவர்களுக்கு முக்கியமான எரிபொருளாக பயன்படுவது இந்த மரமே. பார்க்க பக்கம் 137 & 138, http://www.iamwarm.gov. in/Environment/report.pdf.

அதோடு ஏழைமக்களுக்கு வேலையோடு நிலையான வாழ்வாதாரத்தையும் இந்த மரங்கள் கொடுத்து வருகின்றன. மிகவும் வறட்சி மற்றும் பொதுவான மரங்கள் செழித்து வளர முடியாத இடங்களில் வாழும் மக்களுக்கு இந்த மரத்தை விட்டால் வேறு மாற்றுவழி இல்லாததே காரணம். இதன் விதைகளையும் மாவாக்கி பயன்படுத்தலாம் என்றும் சொல்கிறார்கள். பார்க்க பக்கம் 7 ~ 10 .. http://www.cazri.res.in/ envis/pdf/3no3-4.pdf

வாழ்வாதாரத்தைப் ஏழைகளுக்கு கொடுப்பதில் இதன் விறகு முக்கியத்தன்மை பெறுகிறது. இதில் இருந்து கரிமூட்டம் மூலமாக தயாரிக்கப்படும் கரி பல்வேறு உபயோகங்களுக்கு பயன்படுகிறது. முக்கியமாக் சிறு தீப்பெட்டி தொழிற்சாலைகள், செங்கல் சூளைகள் உணவகங்கள், கொள்ளபட்டரை, தாது பொருள்களை பிரித்து எடுக்கும் பெரிய தொழிற்சாலைகள் என பட்டியல் நீளும். பார்க்க பக்கம் 1 ~ 2 http://www. currentsciencejournal.info/ issuespdf/Saraswathi% 20Prosophis.pdf.

உணவாக
அடுத்து இதன் நெத்து (காய்), மற்றும் அதில் இருந்து பெறப்படும் விதைகள் விலங்குகளுக்கும்,மனிதர்களுக்கு ம் உதவுகின்றன. ஆடு மாடுகளுக்கு இதையே உணவாக கொடுக்கிறார்கள். இதில் ப்ரோடீன் சத்து நிறைவாக இருப்பதாகவும் இதை உணவாக உண்பதால் கால்நடைகள் நலமாக வளர்வதாக சொல்கிறார்கள். பார்க்க பக்கம் 11 ~ 14 & 28. http://www.issg.org/ database/species/reference_ files/progla/Mwangi&Swallow_ 2005.pdf

இதனை மரமாக எப்படி திறன்மிக்க முறையில் வீட்டு உபகரணங்கள், கரிமுட்டம் இவற்றிக்கு பயன்படுத்தலாம் என்பதை பார்க்க பக்கம் 77 ~ 81 http://www.gardenorganic.org. uk/pdfs/international_ programme/ ManagingProsopisManual.pdf

ஆச்சரியப்படும் விசயம் என்னவென்றால் இதன் விதையை மாவாக்கி அதை மனிதர்களும் உணவுப் பொருள்களாக பயன்படுத்துவதுதான். அதுவும் இது மிகவும் சத்து நிறைந்த ஒன்றாக அதாவது இதில் ப்ரோடீன் 10%, fiber 14% கலந்து இருப்பதுதான். இதை கொண்டு தயாரிக்கப்பட்ட ரொட்டிக்கும், கோதுமை மாவினால் செய்த ரொட்டிக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை. அதோடு பிரேசில், பெரு போன்ற நாடுகளில் இந்த விதைகளை அரைத்து காபியாக குடிக்கிறார்கள். பார்க்க பக்கம் 84 ~ 86 (தொடர்ந்து வரும் பக்கங்களில் எப்படி மருந்தாக பயனளிக்கிறது என்பதயும் பார்க்கலாம்) http://www.gardenorganic.org. uk/pdfs/international_ programme/ ManagingProsopisManual.pdf

4. உவர்நிலங்களில் மண்ணின் வளம் மேம்படுதல்

இது வளர மண்வளம் தேவை இல்லை என்பதை பார்த்தோம். சாதாரண மரங்கள் வளர முடியாத மண்வளத்தில் அதாவது உப்பு,உவர்,மற்றும் அமிலத்தன்மை அதிகம் கொண்ட மண்ணில் இது செழித்து வளருவதோடு அந்த மண்ணின் தன்மையை மாற்றியமைக்கிறது. அதாவது அதில் உள்ள கேடுகளை நீக்கி ஒருவகையில் மண்ணின் வளத்தை மேம்பட செய்கிறது.

உவர்,உப்பு தன்மை கொண்ட நிலங்ககளில் உள்ள அமிலத்த தன்மையை இந்த மரத்தை அதில் பயிரிடுவதன் மூலம் அந்த மண்ணை மேம்படுத்தலாம் என்பதை ஆராய்ச்சியின் மூலமாக நிரூபித்து உள்ளார்கள்,

கர்நாடக மாநிலம் சித்திரதுர்க்கா என்னும் மாவட்டத்தில் அதிகம் உப்புத்தன்மை கொண்ட சாதரணமாக மரங்கள் வளர முடியாத நிலம் சோதனைக்கு எடுத்துகொள்ளப்பட்டு அதில் இந்த மரத்தை நட்டுவளர்த்து அதற்கு பின் அந்த மண்ணில் ஏற்ப்பட்ட மாற்றத்தை கணக்கிட்டு இதனை நிரூபித்து உள்ளார்கள்.

இந்த ஆய்வில் முற்றிலும் உப்புத்தன்மை கொண்ட நிலமாக இருந்த இடத்தில் கருவேலம் மரத்தை சில வருடங்கள் வளர்ததின் மூலம் அதில் உள்ள கனிமங்கள் எவ்வாறு மாறி இருக்கிறது என்பதை தெளிவாக இங்கு காணலாம். பார்க்க பக்கம் 1 ~ 3 http://pub.uasd.edu/ojs/ index.php/kjas/article/ viewFile/354/339

அவர்களின் ஆய்வின்படி இந்த மரம் மண்ணில் உள்ள ஆர்கானிக் கார்பன் (organic carbon) மண்ணில் அதிகமாக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த organic கார்பன் மண்ணின் வளத்தில் முக்கியபங்கை வகிக்கிறது என்பதை இந்த இணைப்பில் படித்து தெரிந்து கொள்ளலாம். பார்க்க பக்கம் 1 ~ 3 http://www.esd.ornl.gov/~wmp/ PUBS/post_kwon.pdf

இன்னொரு ஆய்வு தொழிற்சாலைகள் அதிகம் இருக்கும் இடமான கோயம்புத்தூர் பகுதியில் செய்யப்பட்டு இருக்கிறது. பொதுவாக தொழிற்சாலைகள் இருக்கும் இடங்களில் அதில் இருந்து வெளியாகும் சிறு உலோக துகள்களால் மண்ணின் வளம் கண்டிப்பாக பாதிக்கப்படும்.

கொஞ்சம் கொஞ்சமாக சேரும் இந்த துகள்கள் நாளடைவில் மண்ணின் மேற்பரப்பில் ஒரு தடுப்பு போல அமைந்து மற்ற தாவர இனங்கள் வளர முடியாதபடி செய்துவிடும். இந்த ஆய்வின் படி அந்த பகுதியில் இருந்த தாமிரம் மற்றும் காட்மியம் போன்ற உலோகதுகள்களால் பாதிப்படைந்த நிலத்தில் இம்மரங்களை வளர்த்து ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் அதிகமாக உலோகதுகல்களால் பாதிப்படைந்த நிலம் கொஞ்சம் கொஞ்சமாக அதன் தன்மையில் இருந்து மாறி வருவது கண்டறியப்பட்டது.

இதில் காட்மியம் எனும் உலோகம் மிக அபாயம் நிறைந்த ஒன்று என்பதால் இந்த நிலங்ககளில் வளரும் மரத்தின் எந்த ஒரு பொருளையும் மக்கள் தங்கள் கால்நடை பயன்பாட்டுக்கு கிடைக்காமல் செய்யப்படவேண்டும் என அறிவுருத்தபடுகிறது. மண்ணில் இருக்கும் ஆபத்தான உலோகங்களை மரமே உறிஞ்சி எடுத்துக் கொள்வதாலேயே இப்படி சொல்லப்படுகிறது (இந்த காட்மியம் உலோகம் ஒரு வகைp புற்றுநோய்க்கு காரணமாக இருக்கிறது என்று அறிக). பார்க்க http://www.ncbi.nlm.nih.gov/ pubmed/16054919

5. கால்நடைகளுக்கு மருந்து

இதை உண்டால் கால்நடைகள் இறந்துவிடும் அல்லது மலடாக மாறிவிடும் என்ற ஜல்லியடிப்புகள் விழிப்புணர்வு என்ற போர்வையில் பரப்பப்பட்டு இருக்கிறது என்பதை கிழே உள்ள விசயங்களை படிப்பதின் மூலம் உணரலாம்.


இதன் இலைகளை கால்நடைகள் உண்ணாது எனபது உண்மை. இதன் நெத்து (காய்) சத்து பொருள்கள் நிறைந்த ஒரு உணவாக கால்நடைகளுக்கு கொடுக்கப்படுகிறது. வறட்சி காலங்ககளில் ஏற்க்கனவே சேகரித்து வைக்கப்பட்டு இருக்கும் இந்த நெத்துக்களை தங்களின் கால்நடைகளுக்கு கொடுக்கின்றனர், வறட்சியான நிலங்களில் வசிப்பவர்கள். பார்க்க பக்கம் 82 http://www.gardenorganic.org. uk/pdfs/international_ programme/ ManagingProsopisManual.pdf

இந்த மரத்தினால் மலட்டுத்தன்மை உண்டாகிறது என்று அபத்தமாக எந்த வித ஆதாரமும் இல்லாமல் எப்படி பொத்தம் பொதுவாக சொல்ல முடிந்ததோ தெரியவில்லை. காரணம் இந்த விதைகளே ஆடுகளின் மலட்டுத்தன்மையை போக்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. எப்படி உண்மையை நேர்மாற்றமாக பரப்பி வருகிறார்கள் பார்த்தீர்களா?

அதாவது ஒருகிராமத்தில் உள்ள இரண்டு வெவ்வேறு ஆட்டுமந்தைகள் சோதனைக்கு எடுத்து கொள்ளப்பட்டு ஒரு பிரிவில் இந்த நெத்தை அல்லது இதன் விதைகளை பார்லி உடன் சேர்த்து உணவாகக் கொடுக்கபட்டது. மற்ற பிரிவில் இந்த உணவு வழங்கப்படவில்லை.இந்த விதைகளை சினை காலங்களில் ஆட்டுக்கு கொடுப்பதின் மூலம் அவற்றின் சினை பிடிக்கும் திறன் அதிகரித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பார்க்க http://www.dfid.gov. uk/r4d/PDF/Outputs/R6953e.pdf
6. பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி

விவசாயம் ஏதும் செய்ய முடியாத, வறட்சி மிகுந்த நிலங்களில் வாழும் ஏழை மக்களுக்கு இந்த மரங்களினால் ஏற்படும் நன்மைகள் ஏராளம். இதனை ஏழைகளுக்கான மரம் என்றே சொல்கிறார்கள். ஆனாலும் முதலில் சொன்னபடி இது தொடர்ச்சியாக விவசாயம் செய்யும் நிலங்களில் வளருவதால் விவசாயிகள் பாதிப்படைந்து அரசாங்கத்திடம் இதன் முற்றிலும் அளிக்கும் திட்டத்தினை செயற்படுத்துமாறு நிர்பந்திக்கிரார்கள்.
இவர்கள் சொல்படியே நமது மாநிலத்தில் இருக்கும் எல்லா மரங்களையும் அழித்துவிட்டால் இதனை எரிபொருளாக,தொழிலாக பயன்படுத்துவோரின் நிலை என்னவாக இருக்கும். அதே நேரத்தில் நல்ல செழிப்பான பகுதிகளில் இருக்கும் மற்ற எல்லா விவசாயிகளும் இதனை தனது நிலத்தில் வளரவிடாமல் முன்னெச்சரிக்கையாக இருந்தாலே போதுமானது அல்லவா?

அதற்கு விளை நிலங்களை எந்த காரணம் கொண்டும் தரிசாக வைத்து இருக்கக் கூடாது. தொடர்ந்து சில வருடங்ககள் வரை கண்டுகொள்ளாத நிலங்களாக இருந்தால் கண்டிப்பாக இந்த மரங்கள் வளர வாய்ப்பு இருக்கிறது. எனவே முடியாத பட்சத்தில் வருடத்தில் ஒருமுறையாவது தனது நிலத்தில் இருக்கும் தேவையில்லாத செடிகளை அகற்றும் பணியில் செயல்பட வேண்டும். அது ஆட்களை வைத்து அகற்றுவதாக அல்லது உழவு அடிப்பதான முறையில் இருக்கலாம். இதுதான் அவர்களுக்குண்டான விழிப்புணர்வைக் கொடுக்கும் விசயமாக இருக்கழ்மே தவிர மற்றவர்களுக்கு வேறு விதத்தில் பயனளிக்கும் ஒன்றை மொத்தமாக அழிப்பது என்பதை எதில் சேர்ப்பது ?

இந்த மரத்தைப் பயன்படுத்துவோரின் நலனை கருத்தில் கொள்ளும் வகையில் சில விசயங்களை இந்த இணைப்பில் காணலாம் பார்க்க http://www.gardenorganic.org. uk/pdfs/international_ programme/Prosopis- PolicyBrief-2.pdf

7. மின்சார தயாரிப்பில் இதன் பங்கு

மின்சாரம் தயாரிப்பதில் இருக்கும் சிக்கல்கள், மின்சாரத்தின் அவசியம் எல்லாவற்றையும் தமிழ்நாட்டு மக்களுக்கு இப்போதைய நிலையில் நான் எதையும் ஆதாரத்தோடு விளக்க வேண்டிய அவசியம் இல்லையென நம்புகிறேன். அனைத்தையும் அனுபவப் பாடமாக படித்துக்கொண்டு இருக்கிறோம்.
இருக்கும் மின்தட்டுப்பாட்டை அணுமின்நிளையம் வைத்து போக்க முயன்றால்பாதுகாப்பு,சுற்றுப்புற சூழ்நிலை நலன் கருதி முடக்கி வைத்தாயிற்று. மற்ற முறையில் எடுக்கப்படும் மின்சார முறையில் ஏற்ப்படும் இழப்புகளும் அதிகம். அனல்மின்சாரம் எடுக்கும் இடங்களில் இருந்து வெளியேற்றப்படும் புகை, பிற கழிவுகளை எல்லோரும் அறிந்ததே.
இந்த மாதிரியான நிலையில் ஒரு நல்ல தீர்வை முடிவாக எடுப்பது உடனடி தேவை. அந்த தீர்வும் உடனடியாக கிடைக்கும் தருவாயில் இருப்பதாக இல்லை.இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மிக அதிகச்செலவில் மாற்று மின்சார முறைகளை புதியாதாக ஆராய்ந்து புதிய தொழில்நுட்பங்களை நடைமுறைபடுத்துவது என்பது அதிக காலமும்,பண விரயத்தையும் கொண்ட செயல். அதிலும் முழு பயன் கிடைக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது.  

இந்த நிலையில் நமது நாட்டில் கிடைக்கும் அதிகமான உதிரிப்பொருள்களை ஆதாயமாக வைத்து சில திட்டங்ககளை செயல்படுத்தினால் நல்ல பலனோடு அதை கொடுப்பவர்களின் வழக்கையும் உயர வாய்பிருக்கிறது. அந்த வகையில் பார்த்தால் Biomass Power Generation என்ற முறை சிறப்பான ஒன்று.

இந்த முறையில் இயற்கையாக கிடைக்கும் கனிம அல்லது மற்ற பொருள்களை வைத்து மின்சாரம் தயாரிக்கப்படுகின்றது. நாம் கொட்டும் குப்பைகள் கூட ஒருவிதத்தில் இதுக்கு உதவும் என்கிறார்கள். குப்பையை பயன்படுத்துவதின் மூலம் அதை வேறொரு முறையில் அழிக்கும் போது இருக்கும் பாதிப்புகள் தவிர்க்கப்படுவதோடு பயனாக மின்சாரம் கிடைக்கிறது.

தமிழ் நாட்டில் இந்தமாதிரியான சிறு மின்நிலையங்கள் சில இடங்களில் நடைபெற்றுவருகிறது. இங்கே முக்கியமான விசயம் என்னவென்றால் அதற்கு எரிபொருளாக கருவேல் மரத்தின் விறகுகள் பயனபடுத்தப்படுகின்றன. இந்த மரவிறகுகள் அதிக எரிசக்தி கொண்டவையாக இருப்பதால் நல்ல பலனும் கிடைக்கிறது. மற்ற வழிமுறைகளைவிட குறைந்த அளவே கார்பன் டை ஆக்சடை வெளியிடுகிறது. (பக்கம் 23, 24). http://www.sgsqualitynetwork. com/tradeassurance/ccp/ projects/395/BMC-PDD-Final% 5B1%5D.pdf

இதனால் இன்றைய அத்தியாவசியத்த் தேவையான மின்சாரமும் கிடைப்பதோடு பிந்தங்கிய மாவட்டங்களில் வாழும் இந்த மரத்தை சார்ந்து தொழில்செய்வோரின் வாழ்வாதாரமும் உயரும் என்பதில் சந்தேகமில்லை.
 
இந்த Biomass Power Generation எவ்வாறு இயங்குகிறது அதற்கு உண்டான வழிமுறைகள் என்னென்ன போன்ற விசயங்களை தெளிவாக இந்த இணைப்பில் படிக்கலாம். கொடுமை என்னவென்றால் இது திருநெல்வேலி பகுதிகளில்தான் அதிகமாக இருக்கிறது. சொந்த ஊரில் இந்த மாதிரியான விசயங்ககளை வைத்துக்கொண்டு விழிப்புணர்வு என்ற பெயரில் எதையுமே ஆராய்ந்து பார்க்காமல் ஜல்லியடித்து இருப்பவர்களை என்ன சொல்வது....? பார்க்க



இது எவ்வாறு சாத்தியம் என்பதில் சந்தேகம் இருந்தால் அறிவியல்பூர்வமான செயல்முறை விளக்கம் இங்கே காணலாம் பார்க்க,

ஒவ்வொன்றையும் தெளிவாக விளக்கவே நினைத்தோம். படிப்பவர்களுக்கும் எளிதாக இருந்திருக்கும். ஆனால் கட்டுரையின் அதிக நீளம் கருத்தில் கொண்டு பல இடங்களில் "பார்க்க பக்கம்" என்று போடவேண்டியாதாகிவிட்டது. எப்படியோ இதன் மூலம் கருவேலம் ஒரு நச்சுப்பொருள் இல்லை என்பதோடு அதனால் எப்படியெல்லாம் பயனடைகிறோம் என்பதை விளக்கமாக தெரிந்து இருப்பிர்கள். முக்கியமாக விழிப்புணர்வு என்ற பெயரில் உண்மை என்னவென்று அறிந்து கொள்ளாமல் அபத்தங்களை எழுதி பரப்பியவர்களின் நோக்கம் என்னவென்றாவது புரிந்து இருக்கும்.

நன்றி:டெரர் கும்மி
Engr.Sulthan