Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Showing posts with label காற்று. Show all posts
Showing posts with label காற்று. Show all posts

Sunday, November 3, 2013

வலி நீக்கும் ஓஸோன் ஊசி

காற்றும் ஒரு வலி நிவாரணிதான்! – வலி நீக்கும் ஓஸோன் ஊசி


வலி என்பது நோயல்ல; நோய்க்கான அறிகுறிகளுள் ஒன்று. நோயின் வருகையை அறிவிக்கும் அலாரம்தான் வலி. நாம் வலியை உடனடியாக நிறுத்தித் தப்பித்துக் கொள்கிறோம் தற்காலிகமாய். ஆனால், வலிக்கான அடிப்படை அப்படியே மறைந்து பதுங்கித்தான் இருக்கும். அந்த ஆணிவேரை அகற்றுவதுதான் அவசியமான சிகிச்சை.
வலியையும் நிறுத்தி, காரணத்தையும் கண்டறிந்து அகற்று இப்போது வந்திருக்கும் புதிய வழிமுறைதான் ஓஸோன் ஊசி. ஓஸோன் என்றால் பரிசுத்தமான ஆக்ஸிஜன்தான். காற்று மருந்தாகும் அந்த மகத்துவம் பற்றி, டாக்டர் பிரபு திலக்கிடம் கேட்டபோது…

நல்ல காற்று… நலமான வாழ்க்கை..!


லகில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 400 மில்லியன் மெட்ரிக் டன் அளவில் காற்றை அசுத்தப்படுத்தக் கூடிய, உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய கழிவுகள் உற்பத்தியாகின்றன. இதில் அமெரிக்கா தான் முதலிடத்தில் இருக்கிறது. இந்தியாவில் ஆண்டுக்கு 51/2 லட்சம் பேர் காற்று அசுத்தமாவதால் ஏற்படும் நோய்களால் இறந்துபோகின்றனர் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் சுமார் 3.35 லட்சம் பேர் நுரையீரல் புற்றுநோயினால் இறக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் காற்று மாசுபடுவதுதான்.

Friday, November 1, 2013

கண்ணுக்குத் தெரியாத காவலாளி


நாம் உயிர் வாழவும் பூமி ஆரோக்கியமாக இருக்கவும் பங்காற்றி வருவது காற்று. நம் கண்களுக்கு வெளிப்படையாகத் தெரியாததால், ஓரிடத்தில் காற்று இருப்பதை பெரும்பாலான நேரம் நாம் உணர்வதில்லை.
நம்மைச் சுற்றி எங்கெங்கும் காற்று விரவியிருக்கிறது. பல்வேறு வகைகளில் அது தாக்கத்தைச் செலுத்திக் கொண்டிருக்கிறது. காற்று, வெளியை அடைத்துக் கொள்கிறது. அதற்கு எடை உண்டு. அனைத்து திசைகளிலும் அழுத்தத்தையும் செலுத்துகிறது.