Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Showing posts with label இதயம். Show all posts
Showing posts with label இதயம். Show all posts

Wednesday, October 1, 2014

இதயம் காக்க... எளிய வழிகள்!


கையளவு இதயத்தின் தாள லயமான சங்கீத ஒலிதான் 'லப்டப்... லப்டப்!’ நாளன்றுக்கு லட்சம் முறைக்கு மேல் துடிக்கிறது நம் இதயம். உடலில் இருக்கும் சுமார் ஒரு லட்சம் கிலோ மீட்டர் நீள ரத்த நாளங்களுக்கு, 15,000 லிட்டர் ரத்தத்தைச் செலுத்துகிறது. நாம் உறங்கினாலும், விழித்திருந்தாலும், சும்மா இருந்தாலும், சுறுசுறுப்பாக வேலை செய்தாலும் இடைவிடாது துடிப்பது இதயம் ஒன்றுதான். இதயம் நன்கு செயல்பட்டால்தான், உடலின் அனைத்து உறுப்புகளும் நல்ல நிலையில் இருக்கும்.

Sunday, December 1, 2013

இதயத்தை பாதுகாக்கும் காலிப்ளவர் :-



காய்கறி இனத்தைச் சேர்ந்த காலிப்ளவர் ஒருவகையான பூ வகையைச் சேர்ந்தது. இதில் மருத்துவ குணம் அதிகம் உள்ளதால் மூலிகையாகவும் கருதலாம்.முட்டைக்கோஸும், காலிப்ளவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவை. இது சாதாரணமாக வெள்ளையாகவோ, இளம் மஞ்சளாகவோ காணப்படும்.காலிப்ளவர் ஒரு குளிர்பிரதேச காய்கறி. இது குளிர்காலங்களில் அதிக அளவில் கிடைக்கின்றது. இத்தாலியில் அதிக அளவில் விளைவிக்கப்பட்ட காலிப்ளவரானது முதன் முதலில் ஆசியாவில் தான் பயிரிடப்பட்டது.அக்காலத்தில் தென்னிந்திய மக்களுக்கு இது பற்றி எதுவும் தெரியாததால் இதற்கு தமிழில் பெயர் இல்லை. ஆங்கிலப் பெயரான காலிப்ளவர் என்றே அனைவராலும் அழைக்கப்படுகிறது.

Sunday, November 3, 2013

இதய ஆரோக்கியத்துக்கு.....




ஹார்ட் அட்டாக் கேள்விப்படும்போது பயங்கரமா தான் இருக்கும். ஹார்ட் அட்டாக் வந்துட்டதால, அதோட எல்லாமே முடிஞ்சு போச்சுன்னு நினைச்சு, வாழ்க்கையை வெறுக்க வேண்டியதில்லை. ரெண்டு, மூணு முறை அட்டாக் வந்து பிழைச்சு, நிறைய காலம் ஆரோக்கியமா வாழறவங்களும் இருக்காங்க. வந்ததை நினைச்சு பயப்படாம, அடுத்து எப்படி இருக்கணும், அதுக்கு என்ன சாப்பிடணும், எப்படி சாப்பிடணும்னு தெரிஞ்சுக்க வேண்டியது அவசியம்.