Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Showing posts with label இயற்கை. Show all posts
Showing posts with label இயற்கை. Show all posts

Wednesday, December 4, 2013

இயற்கை அளித்த அற்புதக் கல்!

 
ஒரு காலத்தில் ஓஹோவென ஒரு பொருள் பயன்படுவதும், பின்னர் அது புழக்கத்தில் இல்லாமல் போவதும் புதிய விஷயமல்ல. 18ஆம் நூற்றாண்டில் நவீன உலகம் கட்டமைக்கப்பட்டபோது பயன்படுத்தப்பட்ட எத்தனையோ கட்டுமானப் பொருட்கள் இன்று காணாமல் போய்விட்டன. அதில் ஒன்றுதான் செம்பாறாங்கல், சிவப்பு கப்பிக்கல் எனத் தமிழில் பல பெயர்களில் அழைக்கப்படும் லேட்ரைட் (laterite)கற்கள்.
நவீனம் எனத் திருநாமம் சூட்டப்பட்டு வந்த புதிய கட்டுமானப் பொருட்களுக்கு இது ஈடு கொடுக்க முடியாமல் போனாலும், லேட்ரைட் மூலம் கட்டப்பட்ட எத்தனையோ பழமையான கட்டடங்கள் இன்றும் கம்பீரமாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன.

Monday, November 11, 2013

வீடு தேடி வந்த சிட்டுக்குருவிகள்!


சென்னையின் ஒரு வழிப் பாதைகள் பல நேரம் தலைசுற்ற வைக்கும் என்றாலும், அவை சில நேரம் ஆச்சரியமளிக்கும் அபூர்வ அனுபவங்களையும் தரக்கூடும். எங்களுக்கு ஏற்பட்ட அனுபவம், அப்படி ஆச்சரியமளிக்கும் ஒன்றுதான்.
அலுவலகம் செல்வதற்குச் சென்னை எழும்பூர் அருகிலுள்ள சிந்தாதிரிப்பேட்டையை அன்றைக்குக் கடக்க வேண்டியிருந்தது. சிந்தாதிரிப்பேட்டையின் முதன்மைச் சாலை ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டுவிட்ட நிலையில், மாற்று வழியில் வண்டியைத் திருப்பினோம். அங்கு எங்களுக்கு ஒர் ஆச்சரியம் காத்திருந்தது.

Saturday, October 19, 2013

”வாங்க... இயற்கைக்குத் திரும்புவோம்!”


'சென்னை தியாகராய நகர் வடக்கு போக் சாலையில் உள்ள 'தானியம் - ஆர்கானிக் ஸ்டோர்’ பற்றி உங்களுக்குத் தெரியுமா? தேன், தினை மாவு, வரகு, சாமை, கோதுமைப் புல், கைக்குத்தல் அரிசி, சிவப்பு அரிசி, நாவல் மரத் தேன், சுக்குக் கருப்பட்டி என இங்கு கிடைக்கும் அனைத்தும் இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்பட்டவை. இந்தக் கடையைப் பற்றி என் விகடனில் எழுதலாமே?’ - இது விகடன் வாசகர் ரமேஷ்பாபு நம்முடைய வாய்ஸ் ஸ்நாப்பில் தந்த தகவல்.

Saturday, October 5, 2013

உருமறைப்பு செய்யும் உயிரினங்கள்

நம்மைச் சுற்றி வாழும் பல உயிரினங்கள் எப்பொழுதும் ஆபத்துக்களை எதிர்நோக்கியே காத்திருக்கின்றவைகள். அதில் சில உயிரினங்கள் மட்டும் இயற்கையாகவே தம்மை தற்காத்துக்கொள்ள உருமறைப்புச் செய்கின்றன. அதில் சிலவற்றை இங்கே காணலாம்.