இணைய நாணயமான பிட்காயின் (BitCoin) மதிப்பு அதிகரித்து வரும் நிலையில்,
பிட்காயின் லட்சாதிபதிகளும் கோடீஸ்வரர்களும் உருவாகி வருகின்றனர்.
இந்த பிட்காயின் அதிர்ஷ்டசாலிகள் மத்தியில் பிட்காயினை நினைத்து ஐ.டி துறை
பணியாளர் ஒருவர் புலம்பிக்கொண்டிருக்கிறார். பிரிட்டனைச் சேர்ந்த ஜேம்ஸ்
ஹோவல்ஸ் எனும் அவரது கதையைக் கேட்டால் நமக்கும் பரிதாபமாகத்தான் இருக்கும்.