Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Showing posts with label பானம். Show all posts
Showing posts with label பானம். Show all posts

Monday, October 7, 2013

நுங்கு மில்க் ஷேக்


தேவையானப் பொருட்கள்:
இளநுங்கு - 4
பால் - 2 கப்
சர்க்கரை - தேவையான அளவு
ரோஸ் எசன்ஸ் - சிறிது
ஐஸ் க்யூப்ஸ் - சிறிது
செய்முறை: நுங்கின் மேல் தோலை உரித்து எடுத்து விட வேண்டும். பாலைக் காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளவும். மிக்சியில் நுங்கு, பால், சர்க்கரை, ரோஸ் எசன்ஸ், ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து அரைத்து, ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி, மேலே சிறிது நுங்கை மிதக்க விட்டு அருந்தலாம்.

கோடைக் கால நெல்லி சர்பத்

கோடைக்கான எளிய பானம்

கோடை காலத்திற்கேற்ற மிகவும் எளிமையான ஜில்லென்ற பான்ம சம்பங்கூழ்தான். அதை வருமானத்தில் கீழ்த்தட்டு மக்களின் பானம் என்ற அனைவரம் ஒதுக்கி விடுகிறோம். ஆனால் வெயிலில் அனைத்துத் தரப்பினரும் தினமும் அருந்தி குளிர்ச்சி பெறலாம்.
இதைத் தவிர அவரவர் வசதிக்கேற்ப வேறு சில பானங்களும் அருந்தலாம். சிலர் ஃபிரிட்ஜ் இருந்தால்தான் ஜூஸ் குடிக்க முடியும் என்று எண்ணலாம். அது தவறு. இளநிரை வாங்கியவுடன் குளிர்ந்த நீரில் போட்டுவிடுங்கள்.
வெளியில் வேளையில் இளநீரில் ஒரு ஸ்பூன் குளுக்கோஸ் கலந்து நுங்கு தோலுரித்து சிறு துண்டுகளாக்கி அதில் போட்டுக் கலந்து குடித்துப் பாருங்கள். உடலே குளிர்ந்துவிடும்.

சம்மர் மேஜிக்


என்னென்ன தேவை?
சர்க்கரை பாகு, - அரை கப்,
எலுமிச்சைச்சாறு - கால் கப்,
புதினா சாறு - கால் கப்,
உப்பு ஒரு சிட்டிகை, சோடா - ஒரு பாட்டில்,
அலங்கரிக்க உப்புத்தூள் சிறிது.

எப்படிச் செய்வது?

ஒரு கிளாஸ் டம்ளரை கவிழ்த்து கெட்டியான எலுமிச்சைப் பழச் சாற்றில் தோய்த்து உடனே உப்புத் தூளில் மீண்டும் தோய்த்தால் அது டம்ளரில் ஒட்டிக் கொள்ளும். அந்த டம்ளரை திக்ஷீமீமீக்ஷ்மீ செய்யவும். அரைமணி நேரம் கழித்து பின் எடுத்து வைத்துக் கொண்டு முதலில் எலுமிச்சைச் சாறு, பின் புதினா சாறு தலா 2 டேபிள்ஸ்பூன் சேர்த்து பரிமாறும் போது சோடாவை சேர்த்து பரிமாறவும். ஐஸ் கட்டிகள் சேர்த்தும் பரிமாறலாம்.

ஜாக் அண்ட் ஜில் ஷேக்


என்னென்ன தேவை?

விதை நீக்கிய பலாச்சுளை - 5,
பால் - 2 கப்,
சர்க்கரை - 5 டேபிள்ஸ்பூன்,
தேன் - 2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?
பலாச்சுளையை சின்னத் துண்டுகளாக நறுக்கி, பால், சர்க்கரை சேர்த்து மிக்சியில் அரைக்கவும். அதைக் குளிர வைத்து, மேலே தேன் சேர்த்துப் பரிமாறவும்.