வெற்றி ஆண்களுக்கு மட்டுமல்ல - சாதித்துக் காட்டிய ஸ்ரீவித்யா பிரியா
என்னதான் பெண்கள் எல்லாத் துறைகளிலும் ஆண்களுக்கு இணையாகப் பணிபுரிந்தாலும்
சில துறைகளை ஆண்களுக்கென்றே நேர்ந்துவிட்டதுபோல இருக்கும். சுற்றி ஆண்கள்
மட்டுமே நிறைந்திருக்க, பெண்கள் அங்கே பார்வையாளர்களாகக்கூட இடம்பெற
முடியாது. ‘லாஜிஸ்டிக்ஸ்’ எனப்படும் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் சார்ந்த
துறையும் ஆண்களால் மட்டுமே அரசாளப்படுவதுதான். ஆனால் அதில் தனித்துக்
களமிறங்கி, சாதித்தும் காட்டியிருக்கிறார் வித்யா என்கிற ஸ்ரீவித்யா
பிரியா.