Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, September 28, 2013

ராக்கெட் ஏவு தளம் மீண்டும் கோட்டை விடுகிறதா தமிழகம்?

மீண்டும் கோட்டை விடுகிறதா தமிழகம்?
இந்தியாவில் மூன்றாவது ராக்கெட் ஏவு தளம் அமைப்பதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு புவியியல், பாதுகாப்பு மற்றும் பொருளாதார ரீதியாக நாட்டிலேயே மிகச் சிறந்த இடமாக தூத்துக்குடி மாவட்டத்தின் குலசேகரப்பட்டினம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இஸ்ரோ விண்வெளி கமிட்டியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு இல்லாததால் திட்டம் கடந்த ஆறு மாதங்களாக இழுபறியில் நிற்கிறது. மேலும், பெரும்பான்மை ஆந்திர அதிகாரிகள் லாபகரமான இத்திட்டத்தை ஆந்திராவுக்குக் கடத்திச் செல்ல தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

ஈஸியா செய்யலாம் இஞ்சி பிஸ்கெட்




நொறுக்குத் தீனி என்றாலே நம் பிள்ளைகள் தராமலே சாப்பிடுவார்கள். ஆனால் விலை உயர்ந்த தீனிகளை நாம் அவர்களுக்கு வாங்கி தந்தாலும் அதில் சேர்க்கப்பட்ட செயற்கை கலவைகளால் பிள்ளைகளின் உடலுக்கு கேடு ஏற்படும். டீ, காபியோடு ஒன்றிரண்டு பிஸ்கெட்களை சாப்பிடுவது என்பது அன்றாட உணவு விஷயங்களில் பழகிப்போன ஒன்று. எளிதில் ஜீரணமாகிவிடும் என்பதால் குழந்தைகள், வயதானவர்கள் என அனைவரும் விரும்பிச் சாப்பிடும் சிறந்த உணவாக இருக்கிறது. ஏன் இதனை நாமே வீட்டில் சுவையாகவும் எளிதாகவும் செய்ய கூடாது.

சைனஸ் தொல்லைக்கு வேப்ப எண்ணெய்!


வேம்பின் மருத்துவ பயன்கள் இன்றியமையாதது. பல நோய்களுக்கு அருமருந்தாக விளங்கும் வேம்பின் குணநலன்களை அறிந்துகொள்வோமா....

* வேப்ப எண்ணையுடன் தூய தேங்காய் எண்ணை அல்லது ஆலிவ் எண்ணையை 1:4 என்ற விகிதத்தில் கலந்து உடலில் தேய்த்தால், பூச்சிகள் மற்றும் கொசுக்கடியில் இருந்து தப்பிக்கலாம். மேலும், இந்த கலவை தோல் எரிச்சல், சிறு வெட்டுக்காயங்கள், தீக்காயங்கள் ஆகியவற்றையும் குணப்படுத்துகிறது.

Thursday, September 12, 2013

பாவம்! புண்ணியம்!!

பஸ்சில் பயணம் செய்த முதியவர், பஸ் நடத்துனரிடம் தனது சில்லறை காசை கேட்டார்.

நடத்துனரிடம் சில்லறை இல்லாததால், "

இறங்கும் முன் கிடைத்தால் தருகிறேன்" என்றார் …!

"கடைகளில் சூப் சாப்பிடாதீங்க!' :

Photo: "கடைகளில் சூப் சாப்பிடாதீங்க!' :
==========================

பிரபல ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷியன் சைனி சந்திரன்: "சூப்' பசியைத் தூண்டும். உடல் பருமனைக் குறைப்பதற்கு உதவும். ஆரோக்கியத்தைக் கூட்டும். இதற்காகத் தான், சூப் சாப்பிடும் வழக்கம் ஏற்பட்டது.ஆனால், இன்றைக்கு பீச், பார்க் போன்று, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விற்கப்படும், சூப், பசியைத் தூண்டுவதற்கு பதில், பசியை அடக்கி விடுகிறது. ஆரோக்கியத்தை மேம்
படுத்துவதற்கு பதில், வேறு சில பிரச்னைகளையும் கொண்டு வருகிறது.தினமும் சூப் பருகலாம் தவறில்லை.

ஆனால், எப்போதும் வெளியிடங்களில், ரெகுலர் கஸ்டமராகப் பருகுவது ஆபத்து. இதிலிருந்து தப்பிப்பதற்கு ஒரே வழி, வீட்டிலேயே தயாரித்து சாப்பிடுவது தான்!சரி, வீட்டில் தானே தயாரிக்க வேண்டும் என்று, பலர், ரெடிமேடாகக் கிடைக்கும் சூப் பவுடர்களைக் கொண்டு, வீட்டிலேயே சூப் தயாரிக்கின்றனர். அவசர வாழ்க்கையில், வீட்டிலேயே சூப் தயாரிக்க நேரம் இருக்காது என்பதால், இதைத் தவறு என்று சொல்ல முடியாது. ஆனால், சூப் பவுடர்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும். சூப் பவுடர்களில், சுவை கூட்டும் கெமிக்கல் கலக்கக் கூடாது என, "ரூல்ஸ்' இருக்கிறது.

ஆகவே, அதற்கு பதிலாக, சில பிராண்டுகளில், "மோனோ சோடியம் குளுடோமிட்' கலந்திருக்கலாம். எனவே, சூப் பவுடர் பாக்கெட் வாங்கும் போது, அதில், மோனோ சோடியம் குளுடோமிட் கலந்திருப்பதாகக் குறிப்பிட்டிருந்தால், அதைத் தவிர்க்கலாம்.சுவையாக இருக்கிறது என்று எல்லா சூப் வகைகளையும் ஒரு வெட்டு வெட்டக்கூடாது. சுகர் பேஷண்டுகள், தக்காளி சூப் தவிர்க்க வேண்டியிருக்கலாம்.

சில சூப் வகைகள், உடல் உஷ்ணத்தைத் தூண்டுவதாக இருக்கும். இது மாதிரி அவரவர் உடல் நிலைக்கேற்ப, சூப் வகைகள் மாறுபடும்.சூப் வகைகளை, காலை நேரங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். மதியச் சாப்பாடு, மாலை டிபன், அதேபோல், இரவு சாப்பிடப் போவதற்கு பத்து, பதினைந்து நிமிடங்கள் முன்னதாக சூப் சாப்பிடுவது, "பெஸ்ட்!'


ரிலாக்ஸ் ப்ளீஸ் ஆங்கிலத்திலும் Relaxplzz



பிரபல ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷியன் சைனி சந்திரன்: "சூப்' பசியைத் தூண்டும். உடல் பருமனைக் குறைப்பதற்கு உதவும். ஆரோக்கியத்தைக் கூட்டும். இதற்காகத் தான், சூப் சாப்பிடும் வழக்கம் ஏற்பட்டது.ஆனால், இன்றைக்கு பீச், பார்க் போன்று, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விற்கப்படும், சூப், பசியைத் தூண்டுவதற்கு பதில், பசியை அடக்கி விடுகிறது. ஆரோக்கியத்தை மேம்
படுத்துவதற்கு பதில், வேறு சில பிரச்னைகளையும் கொண்டு வருகிறது.தினமும் சூப் பருகலாம் தவறில்லை.

அண்ணாவின் இறுதி நாட்கள்


அண்ணாவின் இறுதி நாட்கள் பற்றி கருணாநிதி உருக்கம்


ழைகளை கரையேற்றிடப் புறப்பட்ட கருணைக் கப்பல் கவிழ்ந்துவிட்டது என்று அண்ணாவின் இறுதி நாட்கள் பற்றி கருணாநிதி கூறியுள்ளார்.

முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

என் நினைவு 1969-ம் ஆண்டு பிப்ரவரி திங்களுக்குச் செல்கிறது. அதற்கு முன்பே 1968-ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் தொடக்கத்திலேயே அண்ணாவுக்கு அடிக்கடி வயிற்று வலி.

Wednesday, August 28, 2013

ஆல்கஹால் அருந்துவதால் ஏற்படும் அபாயங்கள்..!



இன்றைய காலத்தில் மார்டன் என்ற பெயரில் ஆல்கஹால் பருகுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதுவரை ஆண்கள் தான் அதிக அளவில் ஆல்கஹால் அருந்திக்கொண்டிருந்தனர். தற்போது பெண்களும் குடிக்க ஆரம்பித்துவிட்டனர். சொல்லப்போனால் ஆண்களை விட பெண்களே அதிகம் குடிக்கின்றனர்.
அத்தகையவர்களிடம் மது அருந்துவீர்களா என்று கேட்டால், அவர்கள் இல்லை, அது ஃபேஷன் நான் அவ்வளவாக அருந்தமாட்டேன் என்று சொல்வார்கள். ஆனால் என்ன தான் ஃபேஷனாக இருந்தாலும். அவற்றை குடிப்பதால், உடலில் ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையைச் சொன்னால், நம்பவேமாட்டீர்கள். அந்த அளவு நோயானது ஏற்படும். இந்த பழக்கத்தை உடனே நிறுத்த முடியாது. ஆனால் வயதுக்கு ஏற்றவாறு குறைத்துக் கொண்டு வந்தால், நல்லது. ஒரு வேளை அவ்வாறு செய்யாவிட்டால், பின் ஆல்கஹால் அதன் உண்மையான சுயரூபத்தை வெளிக்காட்டும்.
அதாவது உயர் இரத்த அழுத்தம், இதய நோய் போன்றவை உடலில் ஏற்படும். அதுவும் குறைந்த வயதிலேயே அளவுக்கு அதிகமான அளவில் ஆல்கஹால் பருகினால், அவை இளம் வயதிலேயே உடலில் நோய்களை அதிகமாக்கிவிடும். உண்மையில் நிறைய நோய்கள் ஆல்கஹால் பருகுவதால், ஏற்படுகிறது. இப்போது அவ்வாறு ஆல்கஹால் பருகுபவர்களின் உடலில் சாதாரணமாக எந்த நோய்கள் வரும் என்பதை பட்டியலிட்டுள்ளோம்.
குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்படும். இந்த நோயால் கல்லீரலில் உள்ளசெல்களில் டாக்ஸின்கள் தங்கி, அந்த செல்களை அழிக்கும். இவை தொடர்ந்தால், இறுதியில் கல்லீரலின் செயல்பாடு முற்றிலும் குறைந்து, இறப்பு ஏற்படும்.
பொதுவாக மதுபானங்கள் பருகினால், இரத்த அழுத்தம் அதிகரிக்கும். அவையே அளவுக்கு அதிகமானால், இரத்த அழுத்தமானது உடனே அதிகரித்து, பின் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.
வோட்கா, பீர் மற்றும் ஜின் போன்றவற்றில் கொழுப்புகள் அதிகம் உள்ளன. பொதுவாக இவற்றை இந்த ஆல்கஹாலில் உணவுகளை விட, அதிகமான அளவில் கலோரிகள் இருக்கும். எனவே இதனை பருகினால், உடல் எடை அளவுக்கு அதிகமாக அதிகரித்துவிடும். பின் உடல் பாதிப்பின் ஆரம்ப நிலையான தொப்பை வந்து, பின் பல்வேறு கொடிய நோய்களும் உடலில் வந்துவிடும்.
இரத்த அழுத்தம் உடலில் அதிகரித்தால், இவை இதயத்திற்கு அழுத்தத்தை கொடுத்துவிடும். பின் மாரடைப்பு ஏற்படும். அதுமட்டுமின்றி, ஆல்கஹால், இரத்தத்தை உறைய வைத்து, இதயத்திற்கு போதிய இரத்த ஓட்டத்தையும் தடுத்துவிடும்.
அனீமியா எனப்படும் இரத்தக்குறைவு, ஆல்கஹால் பருகுவதால், ஏற்படும். ஏனெனில் ஆல்கஹால் பருகும் போது, ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் கொள்ளவானது குறைந்து, உடலில் இரத்த ஓட்டம் குறைந்துவிடும். இதனால் எந்த வேலை செய்யாமல் இருக்கும்போதும், அதிகமான சோர்வு ஏற்பட்டு, மூச்சுவிடுவதே கஷ்டமாக இருக்கும்.
மன அழுத்தம் குறைய வேண்டும் என்பதற்காக ஆல்கஹால் பருகுவார்கள். ஆனால் உண்மையில் ஆல்கஹால் பருகினால், தான் விரைவில் மன அழுத்தம் மற்றும் மன இறுக்கம் ஏற்படும்.
மூட்டுகளில் யூரிக் ஆசிட் அதிகமாக இருப்பதால், மூட்டு வலியானது ஏற்படுகிறது. அதிலும் ஆல்கஹால் அதிகமாக பருகினால், மூட்டுகளில் இன்னும் அதிகமான வலி ஏற்படும்.
ஆல்கஹால் குடித்தால், கணையத்தில் காயங்கள் ஏற்பட்டு, சாதாரணமாக நடைபெறும் செரிமானத்தையும் பாதிக்கும். இத்தகைய பிரச்சனை ஏற்பட்டால், அது குணமாவது மிகவும் கடினம். இதனால் இறப்பு கூட ஏற்படலாம்.
ஆல்கஹால் நரம்பு செல்களுக்கு விஷம் போன்றது. எனவே ஆல்கஹாலை அதிகம் பருகும் போது, அது உடலில் உள்ள நரம்புகளில் ஆங்காங்கு ஊசியை வைத்து குத்துவது போன்று இருக்கும் அல்லது உடலின் ஒரு பகுதி மட்டும் ஒரு மணிநேரத்திற்கு உணர்ச்சியில்லாமல் இருக்கும்.ஒரு குடும்பத்தையே சிதைக்க கூடிய இந்த மதுவை விட்டு விடுங்கள் என்று இன்று ஒரு தகவல் சார்பாக நண்பர்களை கேட்டு கொள்கிறோம் மற்றும் உங்களுடைய நண்பர்களிடமும் இதை புரிய வைக்க முயற்சி செய்யுங்கள் .இதனால் ஒருவர் திருந்தினால் கூட நல்ல விடயம் தான்

Monday, August 19, 2013

இறைவனிடம் நாம் பிராத்திப்போம்.

யா அல்லாஹ்!
 சிறந்த வேண்டுகோளையும்
சிறந்த பிரார்த்தனையையும்
சிறந்த வெற்றியையும்
சிறந்த அமலையும்
சிறந்த நன்மையையும்
சிறந்த உயிர்வாழ்வையும்
சிறந்த மரணத்தையும் நான் உன்னிடம் கேட்கின்றேன்.
(யா அல்லாஹ்!)
என்னை நீ உறுதிப்படுத்துவாயாக!
என்னுடைய தராசை (நன்மையால்அதிக எடையுள்ளதாகஆக்கியருள்வாயாக!
என்னுடைய ஈமானை (நம்பிக்கையைஉறுதிப்படுத்துவாயாக!
என் அந்தஸ்தை உயர்த்துவாயாகஎன்னுடைய தொழுகையைஏற்றுக் கொள்வாயாக!
 என் பாவத்தை மன்னித்தருள்வாயாக!
(யா அல்லாஹ்!)
சுவர்க்கத்தில் உயர்ந்த அந்தஸ்துக்களையும் நான் உன்னிடம்கேட்கின்றேன்.
(தப்ரானி)
உயர்ந்தோன் அல்லாஹ் கூறினான்என் அடியான் என்னைப் பற்றிஎன்ன நினைக்கிறானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்துகொள்வேன்அவன் என்னை நினைவு கூரும்போது நான்அவனுடன் இருப்பேன்அவன் என்னைத் தன் உள்ளத்தில் நினைவுகூர்ந்தால் நானும் அவனை என் உள்ளத்தில் நினைவு கூறுவேன்.அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவு கூர்ந்தால்அவர்களைவிடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான்நினைவு கூறுவேன்அவன் ஒரு சாண் அளவுக்கு என்னைநெருங்கினால் நான் ஒரு முழமளவுக்கு அவனை நெருங்குவேன்.அவன் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் நான்(வலதும் இடதுமாக விரித்தஇரண்டு கைகளின் நீள அளவுக்குஅவனை நெருங்குவேன்அவன் என்னை நோக்கி நடந்து வந்தால்நான் அவனை நோக்கி ஓடிச் செல்வேன் என நபி (ஸல்அவர்கள்கூறினார்கள்.
·  புஹாரி : 7405 அபூஹுரைரா (ரலி).

யா அல்லாஹ்எனது மார்க்கத்திலும் எனது உலக வாழ்விலும்எனது குடும்பத்திலும் எனது செல்வத்திலும் மன்னிப்பையும்நலனையும் நான் உன்னிடம் கேட்கின்றேன்யாஅல்லாஹ்!என்னுடைய குறைகளை மறைப்பாயாகயாஅல்லாஹ்என்அச்சங்களை அகற்றி எனக்கு அமைதியைத் தந்தருள்வாயாக!யாஅல்லாஹ்எனக்கு முன்னாலிருந்தும் பின்னாலிருந்தும் எனதுவலது புறமிருந்தும் இடது புறமிருந்தும் எனக்கு மேலிருந்தும்எனக்குப் பாதுகாப்பு அளிப்பாயாகஎனக்கு கீழ்புறத்திலிருந்து நான்எதிர்பாராத விதமாகக் கொல்லப்படுவதை உன் வல்லமையைக்கொண்டு நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்.(அபூதாவூத்)

யா அல்லாஹ்நீயே என் இரட்சகன்வணக்கத்திற்குரிய இறைவன்
உன்னைத்தவிர வேறு யாருமில்லைநீயே என்னைப் படைத்தாய்
நான் உன்னுடைய அடிமைநான் என்னால் முடிந்த அளவிற்கு 
உனது உடன்படிக்கை மற்றும் வாக்குறுதியின் மீது 
நிலைத்திருக்கின்றேன்நான் செய்த சகல... தீமையைவிட்டும் 
உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்நீ எனக்களித்த 
அருட்கொடைகளைக் கொண்டு உன்பக்கமே நான் மீளுகின்றேன்
இன்னும் என்னுடைய பாவங்களை (மனமாறஒப்புக் 
கொள்கின்றேன்எனவேஎன்னை நீ மன்னித்தருள்வாயாக
உன்னைத் தவிர வேறு யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது. (புகாரி)
 யா அல்லாஹ்நீயே என் இரட்சகன்வணக்கத்திற்குரியஇறைவன் உன்னைத்தவிர வேறு யாருமில்லைநீயே என்னைப்படைத்தாய்
யாஅல்லாஹ்என்னுடைய குறைகளை மறைப்பாயாக!யாஅல்லாஹ்என் அச்சங்களை அகற்றி எனக்கு அமைதியைத்தந்தருள்வாயாக!...

2:286. அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ளமுடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லைஅது சம்பாதித்ததின்நன்மை அதற்கேஅது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களேபிரார்த்தனை செய்யுங்கள்:) “எங்கள் இறைவா!நாங்கள் மறந்து போயிருப்பினும்அல்லது நாங்கள் தவறுசெய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக!  எங்கள்இறைவாஎங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையைபோன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாகஎங்கள் இறைவா!எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாதசுமையைஎங்கள் மீது சுமத்தாதிருப்பாயாகஎங்கள் பாவங்களை நீக்கிப்பொறுத்தருள்வாயாகஎங்களை மன்னித்தருள் செய்வாயாக!எங்கள் மீது கருணை புரிவாயாகநீயே எங்கள் பாதுகாவலன்;காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய)எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!”...

·  யா அல்லாஹ் என்னுடலில் எனக்கு ஆரோக்கியத்தைஅருள்வாயாகயா அல்லாஹ் எனது செவிப்புலனில் எனக்குஆரோக்கியத்தை அருள்வாயாகயா அல்லாஹ் எனதுபார்வையில் எனக்கு ஆரோக்கியத்தை  அருள்வாயாக.வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும்இல்லை.


யா அல்லாஹ்எனது சிறியபெரியஆரம்பமானஇறுதியான,மறைவானபகிரங்கமான,  அனைத்து பாவங்களையும்மன்னிப்பாயாக.



அல்லாஹ்வின் பரிபூரணமான வார்த்தைகளை கொண்டுபாதுகாப்பு 
தேடுகிறேன்அவன் படைத்த பொருள்களின் தீங்கினை விட்டும் 
பாதுகாப்பு தேடுகிறேன்.

 யாஅல்லாஹ்எனக்கு கிருபைசெய்வாயாக!
 எனக்கு பாதகமாக கிருபை செய்யாதிருப்பாயாக!
 எனக்கு உதவி செய்வாயாக!
 எனக்கு பாதகமாக உதவி செய்யாதிருப்பாயாக!
 எனக்காக சூழ்ச்சி செய்வாயாக!
எனக்கு பாதகமாக சூழ்ச்சி செய்யாதிருப்பாயாக!
எனக்கு நேர்வழியை காட்டுவாயாக!
 நேர்வழியை எனக்கு எளிதாக்குவாயாக!
 எனக்கு அநீதி செய்பவருக்கு பாதகமாக எனக்குஉதவிசெய்வாயாக!
உனக்கு நன்றி செலுத்துபவனாகஉன்னை நினைவு கூர்பவனாக,உன் மீது அதிக அச்சம் கொள்பவனாகஉனக்கு வழிப்படுபவனாக,கட்டுப்படுபவனாகஅடிபணிபவனாகசரணடைபவனாக என்னைஆக்குவாயாக!
 இறைவா!
 எனது பாவமன்னிப்பை ஏற்றுக் கொள்வாயாக!
 எனது பாவங்களை போக்கிடுவாயாக!
எனது பிரார்த்தனைக்கு பதிலளிப்பாயாக!
 எனது ஆதாரங்களை நிலைபெறச் செய்வாயாக!
 எனது உள்ளத்திற்கு நேர்வழி காட்டுவாயாக!
 எனது நாவை பலப்படுத்துவாயாக!
 எனது உள்ளத்தின் கசடுகளை அகற்றிடுவாயாக!
(ஆதாரம்திர்மிதிஅபூதாவூத்)


Engr.Sulthan