நீங்கள் வாழ்வில் நல்ல வாய்ப்பை தவறவிட நேர்ந்தால்
கண்களுக்கு கண்ணீர் திரையிட்டுக் கொள்ளாதீர்கள்......
அதன் மூலம் உங்கள் முன்னே இருக்கும் இன்னொரு
நல்ல வாய்ப்பும் தெரியாமல் போகக்கூடும் ......
பிறரது வேலையில் குற்றம் கண்டுபிடிப்பது மிக எளிது.
ஆனால் நம் வேலையில் குற்றம் கண்டுபிடிப்பது மிகக் கடினம்.....
நீங்கள் நடக்கும் கட்டாந்தரைக்கு கம்பளம் விரிக்க நினைப்பதை விட
உங்கள் கால்களுக்கு செருப்பு போட்டுக்கொள்வது நன்று ......
தவறுகள் நிகழ்கையில் வலி மிகுந்ததாகும்.....
காலப்போக்கில் தவறுகளால் கண்ட படிப்பினைகள்
உங்களின் வெற்றிக்கு பாதை வகுத்து கொடுக்கும்......
உங்களை எக்காரணம் கொண்டும் உலகில் எவருடனும்
ஒப்பிட்டுக் கொள்ளாதீர்கள்.....
அது உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளும் அவமரியாதையாகும்.....
ஒவ்வொரு வெற்றிபெற்ற மனிதனுக்கு பின்னாலும்
ஒரு வலிமிகுந்த உண்மைக் கதை இருக்கும்......
ஒவ்வொரு வலிமிகுந்த கதைக்கும் மகிழ்ச்சியான,
வெற்றிகரமான முடிவே இருக்கும்.....
வலியை ஏற்றுக்கொள்
வெற்றியை எட்டிப்பிடி.....
தோல்வி அடைகையில் உறுதியாயிறு
வெற்றி பெறுகையில் அமைதியாயிரு.....
தங்கத்தை உருக்கினால் தான் நகை செய்ய முடியும்.
பித்தளையை அடித்தால் தான் கம்பி செய்ய முடியும்.
கல்லை செதுக்கினால் தான் சிலை செய்ய முடியும்.
அதீத துயரம் அனுபவித்தவனுக்கே வாழ்கையின் அருமை தெரியும்.
ஒரு தவறான தொடக்கத்தை மீண்டும் பின்னால்
சென்று திருத்துவது கடினம்
ஆனால் யார் வேண்டுமானாலும் திட்டமிட்டு செயலாற்றுவது
மூலம் வெற்றியை அடையலாம்......
தீர்வுகாணக் கூடிய சோதனை குறித்து
கவலை கொள்ளத் தேவையில்லை......
தீர்வேயில்லாத சோதனை குறித்து
கவலை கொண்டு ஆகப்போவது ஏதுமில்லை.....
சாவியில்லாத பூட்டுக்களை யாரும் தயாரிப்பதில்லை.
அது போலவே
தீர்வே இல்லாத சோதனைகளை
கடவுள் மனிதனுக்கு கொடுப்பதில்லை......
முகத்தை ஒளித்துக் கொள்வதனால் எதுவும் ஆகப்போவதில்லை.
ஆனால்
பிரச்சனையை முகம் கொண்டு எதிர்நோக்குவதால்எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கின்றன...........
யாரை பற்றியும் குற்றம் சொல்வதைவிட
நம்மில் குற்றம் இருந்தால் அதை மாற்றிக்
கொள்வது மூலம் சமாதானம் கிடைக்கிறது .....இணையத்திலிருந்து
Friday, July 6, 2012
அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து
Labels:
Did you know?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment