உலகில் உள்ள பல வளரும் நாடுகள் மற்றும் வளர்ந்த நாடுகள் தங்களை பசுமை புரட்சி நாடாக மாற்றிக்கொள்ள ஆயித்தமாகி வருகின்றன. 1940 முதல் 1960 களில் பசமை புரட்சியின் தீவரம் உலகம் முழுக்க அதிகமாக இருந்தது. அப்பொழுது விவசாயத்தின் முக்கியதுவத்தை உணர்த்தும் வகையில் பசுமை புரட்சி தொடங்கியது.
இப்பொழுது இயற்க்கை வளங்களை கொண்டு மின்சாரம் போன்றவற்றை உற்பத்தி செய்ய பசுமை புரட்சி ஆரம்பித்துள்ளது. பல நாடுகளும் இயற்க்கை வளங்களை கொண்டு தங்களுக்கு தேவையான வளங்களை உற்பத்தி செய்து கொள்ள வழிகளை ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இயற்க்கை மூலம் மனித குலத்திற்க்கு தேவையான வளங்களை உற்பத்தி செய்யும் பொழுது உலகம் வெப்ப மயம் ஆகுதல், சுற்றுச் சூழல் மாசுப்படுதல் போன்ற பல பிரச்சனைகள் தடுக்கப்படுகிறது. அதனால்தான் உலகில் பல நாடுகளும் இயற்க்கை வளங்களை நாடி செல்கின்றனர்.
இந்தியாவில் மின்சாரம் மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததே, அதுவும் குறிப்பாக தமிழக்கத்தில் இந்த பிரச்சனையின் தாக்கம் நிறையவே இருக்கிறது. இந்த பிரச்சனையை போக்க அணு மின் நிலையம், அனல் மின் நிலையம் பல வழிகளை நாம் கையாண்டாலும் அது சரியான நிரந்திர தீர்வாக இருக்காது.
இது போன்ற வழிகள் நமக்கு தேவையான வளம் கிடைத்தாலும் அதன் பின் விழைவுகள் நம்மை பாதிக்கும் அபாயம் அதிகம் உள்ளது. இயற்க்கை வளங்கள் மூலம் இதற்க்கு தீர்வு காண்பதே சரியானதாக இருக்கும். இந்தயாவிலும் இந்த வழிகள் ஆரம்பம் ஆக தொடங்கிவிட்டன. இந்த மாற்றத்திற்க்கு எடுத்துக்காட்டாக இருக்கும் சில விஷியங்களை கீழே பார்ப்போம்.
ராஜஸ்தான் சோலார் பிளான்ட் :
ராஜஸ்தான் மாநிலத்தில் உலகின் மிகப்பெரிய சோலார் பிளான்டை இந்தியா உருவாக்கி வருகிறது. 23,000 ஏக்கர் பரப்பளவில் சாம்பார் லேக் உருவாக்கப்படுகிறது
கிரீன் எனர்ஜி கோரிடார் :
கிரீன் எனர்ஜி கோரிடார் என்ற பிராஜெக்ட் இந்தியாவில் 7 மாநிலங்களில் ஆரம்பிக்கப்பட உள்ளது. 43,000 கோடி பட்ஜெட்டில் உருவாக்கும் இந்த பிராஜெக்ட் முதல் கட்டமாக ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாட்டில் தொடங்கும் என்று தெரிகிறது.
குஜராத் சோலார் பார்க் :
குஜராத்தில் சோலார்பார்க் நிறுவப்பட்டு சூரிய மின் சக்தி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும் சூரிய மின் வளத்தை அதிகரிக்க கூரை மேல் (roof top) வைக்கக்கூடிய சோலார் பேனல்களை குஜராத் அரசாங்கம் அமல்படுத்தி வருகிறது.
அலைகள் மின் சக்தி :
கடல் அலைகள் மூலம் மின் சக்தியை உற்பத்தி செய்யவும் மேற்க்கு கடலோர மாநிலங்களில் வேலைகள் நடந்து வருகிறது.
காற்றாலை :
கடல் காற்று மூலம் மின் சக்தி ஒரு குறிப்பிட்ட அளிவில் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது மேலும் விரைவில் கடலோர காற்று மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.
No comments:
Post a Comment