சமீபத்தில் இறால் எலும்புக் கூடு போன்ற ஒரு பிராணியானது கேட்டலினா தீவில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை கேப்ரிலோடியா என்று அழைக்கிறார்கள். இதனைப் பார்த்தால் வெறும் எலும்புக் கூட்டின் தோற்றம் மட்டுமே தெரிகிறது. இதன் உடல் மேற்பரப்பை உற்று நோக்கினோமானால் இது இறாலினை சற்றே ஒத்திருப்பது போல் இருக்கிறது. எனினும் எது கை, எது கால் என பிரித்து அறியமுடியாத வண்ணம் இதன் உடல் உறுப்புகள் அமைந்துள்ளன.
இது கடல் வாழ் பிராணியாக இருந்தாலும் இதனை மீன் வகையுடன் சேர்க்கவும் இயலாததாக இருக்கிறது.உலகம் முழுவதும் உள்ள கடல்களில் இந்த வகை பிராணிகளை காணலாம். ஒருசில வகை ஆழ்கடலிலும் கிடைக்கும். ஆனால் பெரும்பாலும் அலைகள் அதிகம் இல்லாத இடங்களிலேயே காணலாம். இவை அனைத்தையும் உண்ணும் வகையைச் சேர்ந்தவை.இவைகளில் சில தங்கள் உடல் உறுப்புகளில் உள்ள வடிகட்டி போன்ற பாகங்களின் மூலம் கடலில் உள்ளவற்றை வடிகட்டி பின்னரே சாப்பிடுகின்றன.
ஜெல்லி மீன்கள் மற்றும் வேறு சில மீன்கள் இந்த கேப்ரிலோடியா இறாலை உணவாக உண்கின்றது. இனச்சேர்க்கைக்குப் பின் இவற்றின் பெண் இனமானது முட்டையை தன் பைக்குள் வைத்து அடைகாக்கிறது. பின் குஞ்சு பொறித்து வளர்ந்த பிறகு, சில பெண் கேப்ரிலோடியாக்கள், தங்களது ஊசி போன்ற கூறிய நகங்களால் ஆண் கேப்ரிலோடியாக்களின் மீது விஷத்தை செலுத்தி கொன்றுவிடுகிறது.
No comments:
Post a Comment