இயற்கை எழில் கொஞ்சும் கோவளம் ( கேரளா ) – கன்னியா குமரியிலிருந்து மிக அருகில்
கோவளம் மூன்று அடுத்தடுத்த வளைவான கடற்கரையைக் கொண்ட ஒரு உலகப் புகழ்பெற்ற இடமாகும். இது சுற்றுலாப்பயணிகளின் விருப்பமான அழகிய இடம். குறிப்பாக ஐரோப்பியர்கள் 1930லிருந்து வந்து குவியும் இடமாகவும் உள்ளது. கடற்கரையில் குவிந்து கிடக்கும் பெரிய பாறைகள் அங்கேயே கடல் நீரைத் தடுத்து, ஒரு அழகிய வளைகுடாப் பகுதியை ஏற்படுத்தியுள்ளதால், இந்த அமைதியான நீர் குளிப்பதற்கு ஏற்றதாக உள்ளது.
இங்கு பல்வேறு வகையான பொழுதுபோக்கு அம்சங்கள் கிடைக்கின்றன. சூரியகுளியல், நீச்சல், மூலிகை மருந்து மசாஜ், சிறப்பு கலாச்சார நிகழ்ச்சிகள், கட்டுமர பயணம் ஆகியவை அவற்றுள் சில. வெப்பமான சூரிய ஒளி உடலில் பட்டு வெகு விரைவில் உடலின் தோல் வண்ணத்தை மாற்றும் தன்மைகொண்டதாக உள்ளது. இந்தக் கடற்கரை பிற்பகல் தொடங்கி இரவு வரை சுறுசுறுப்பாக காணப்படும். கடற்கரை வளாகத்தில் குறைந்தவிலை காட்டேஜ்கள், ஆயுர்வேத மருத்துவ தங்கு விடுதிகள், தங்கும் வசதிகள், பொருட்கள் வாங்கும் பகுதிகள், நீச்சல் குளங்கள், யோகா மற்றும் ஆயுர்வேத மசாஜ் மையங்கள் என்று ஏராளமானவை இங்கு உள்ளன.
கேரளாவின் தலை நகரமான திருவனந்தபுரம் கோவளத்திலிருந்து 16 கி.மீ. தொலைவிலேயே உள்ளது. அங்கு செல்வதற்கு எந்தப் பிரச்சனையும் கிடையாது. ஆனால் விடுமுறை நாட்களில் அங்கு சென்றால் கோவளத்தில் தங்கி அந்த நகரைச் சுற்றிப் பார்த்து வருவது நன்று.
திருவனந்தபுரம் நகரத்தில் பார்க்கத்தகுந்த நாப்பியார் அருங்காட்சியகம், ஸ்ரீ சித்ரா ஆர்ட் காலரி, பத்மநாப சுவாமி கோவில், பொன்முடி மலை வாழிடம், முதலியவை உள்ளன. SMSM இன்ஸ்டிடியூட் என்னும் அரசின் சொந்த கைவினைப் பொருட்கள் எம்போரியத்தில் புராதன பொருட்களையும் பிற அழகிய பொருட்களையும் வாங்கலாம்.
சுற்றுலா செல்ல உகந்த நேரம் : இது எல்லா நேரங்களிலும் செல்லுவதற்கு ஏற்ற இடமாக இருந்தாலும் செப்டம்பரிலிருந்து மார்ச் வரை உள்ள காலமே மிகவும் உகந்தது.
இருப்பிடம் : திருவனந்தபுரம் நகரிலிருந்து 16 கி.மீ. தொலைவு, தென் கேரளா.
இங்கு சென்று அடைவதற்கு :
அருகிலுள்ள இரயில் நிலையம் : திருவனந்தபுரம் சென்ட்ரல், 16 கி.மீ. தொலைவு.
அருகிலுள்ள விமான நிலையம் : திருவனந்தபுரம் பன்னாட்டு விமான நிலையம்:10 கி.மீ. தொலைவு.
அருகிலுள்ள விமான நிலையம் : திருவனந்தபுரம் பன்னாட்டு விமான நிலையம்:10 கி.மீ. தொலைவு.
No comments:
Post a Comment