Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, October 25, 2014

வீட்டுத்தோட்டம் டிப்ஸ்


சிறிதளவு எப்சம் உப்பை தண்ணீரில் கரைத்து செடிகளுக்கு ஊற்றலாம். செடிகள் நன்கு வளரத் தேவையான மெக்னீசியம், சல்பேட் இரண்டையும் இந்த உப்பு கொடுக்கும் . வாரம் ஒருமுறை உபயோக்கிக்கலாம்.

* முட்டை ஓடுகளை காய வைத்து நன்கு தூளாக்கி போட வேண்டும். இதில் இருக்கும் கால்சியம் செடிகளுக்கு நல்ல உரமாகும்.

* 4 ஸ்பூன் வினிகர் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஊற்றவேண்டும்.

* அலங்கார மீன் தொட்டியில் தண்ணீர் மாற்றும்போது வெளியேற்றப்படும் கழிவு நீரை செடிகளுக்கு ஊற்றலாம். செடிகள் செழிப்பாக வளரும்.

* சாம்பல் சிறந்த உரம் , கிடைத்தால் போடலாம்.

* ஓக் மர இலைகள் அல்லது வேப்பமர இலைகளை வாளியில் உள்ள நீரில் போட்டு வெயிலில் வைக்கவேண்டும் , நீரின் நிறம் நன்றாக மாறியதும் குளிர வைத்து செடிகளுக்கு ஊற்றலாம்.

* காய்கறி கழிவுகளை செடியின் அடியில் போட்டு வரலாம்.

No comments:

Post a Comment