Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, January 2, 2015

புகைப்பதை நிறுத்தினால்

20 நிமிடங்களில்... 
ரத்த அழுத்தம் இயல்புநிலைக்குத் திரும்புகிறது. ‘பல்ஸ் ரேட்’ இயல்பாகிறது. கை, காலில் அதிகரித்த வெப்பம் இயல்புநிலைக்குத் திரும்புகிறது.
8 மணி நேரத்தில்...
ரத்தத்தில் கார்பன் மோனாக்சைட் அளவு குறைந்து இயல்புநிலைக்குத் திரும்புகிறது. ஆக்சிஜன் அளவு அதிகரிக்கிறது. அல்லது இயல்பு நிலைக்கு வருகிறது.
48 மணி நேரத்தில்...
நரம்பு மண்டலத்தின் கடைக்கோடி முனை மறுவளர்ச்சியடைகிறது. நுகரும் மற்றும் சுவைத் திறன் அதிகரிக்கிறது.
2-12 வாரங்களில்...
மூச்சுவிடும் திறன் மேம்படுகிறது. ரத்த ஓட்டம் மேம்படுகிறது. நடப்பது எளிமையாகிறது.
1-9 மாதங்களில்...
தொடர் இருமல் மற்றும் சைனஸ் பிரச்னை குறைகிறது. மூச்சுத்திணறல் பிரச்னை குறைகிறது. ஒட்டுமொத்த ஆற்றல் மேம்படுகிறது. நுரையீரல் தன்னைத்தானே சுத்தப்படுத்திக்கொள்ளும் திறனும், கிருமிகளை எதிர்க்கும் திறனும் அதிகரிக்கிறது.
1ஆண்டில்...
இதய நோய்க்கான வாய்ப்பு பாதியாகக் குறைகிறது.
5 ஆண்டுகளில்...
பக்கவாதத்துக்கான வாய்ப்பு குறைந்து, புகைபிடிக்காதவர்களுக்கு இணையான நிலைக்குத் திரும்புகிறது. வாய், தொண்டைப் புற்று நோய்க்கான வாய்ப்பு, புகைபிடிப்பவர்களுக்கு உள்ளதைக் காட்டிலும் பாதியாகிறது
10 ஆண்டுகளில்...
வாழும் காலம் புகைப்பழக்கம் இல்லாதவர்களைப் போன்று இயல்பாகிறது. புகைப்பவர்களைக் காட்டிலும் நுரையீரல் புற்றுநோய்க்-கான வாய்ப்பு பாதியாகக் குறை--கிறது. வாய், தொண்டை, சிறுநீர்ப்பை, சிறுநீரகம் மற்றும் கணையம் புற்றுநோய்க்கான வாய்ப்பு குறைகிறது.
15 ஆண்டுகளில்...
இதயத் திசுக்களுக்கு ரத்தம் செல்லும் குழாய்களில் ஏற்படும் நோய்க்கான வாய்ப்பு, புகைபிடிக் காதவர்களுக்கு உள்ள நிலைக்குத் திரும்புகிறது.

No comments:

Post a Comment