Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, March 10, 2015

முள் முந்திரி


குமரி மாவட்டத்தில் பாஞ்சிக்காய்,முள்ளுசக்கை,சீமாத்திக்காய் என்றெல்லாம் அழைக்கப்படும் முள்முந்திரி ஒருகாலத்தில் ஒவ்வொரு வீட்டு வேலி ஓரத்திலும் காய்த்து தொங்கும்..!


இந்த பழத்தின் முக்கியத்துவம் பற்றி அறியாத மக்கள் இச்செடிகளை அனேகமாக அழித்தே விட்டனர்..!
சமீப காலமாகத்தான் இப்பழத்தில் கேன்சரை தடுத்து குணப்படுத்தக்கூடிய மருத்துவ தன்மை இருப்பதாக வெளி உலகுக்கு தெரிய வந்தது.!

இந்த பழத்தில் நம் ரத்தத்திலுள்ள செல்களை புதுப்பிக்கும் சக்தி உள்ளது.,கேன்சர் கட்டிகள் வராமல் தடுக்கிறது..!இதன் இலைகளை தினமும் நான்கு இலை வீதம் நீரில் கொதிக்க வைத்து தண்ணீர் மூன்றில் ஒருபங்கு வற்றியதும் அதனை தினமும் இரண்டு வேளை பருகி வருவதும் சிறப்பாகும்..!புற்று நோயை புறந்தள்ளி விடும்..!

ஒருகாலத்தில் சீந்துவார் இன்றி இருந்த இந்த பழம் இப்போது ரூபாய் 200 க்கு விற்கிறது..!குற்றாலத்தில் இதன் விலை 400 வரை விற்கிறது. பிற மாநிலத்தில் இருந்தெல்லாம் வந்து வாங்கி செல்கிறார்கள்..!

அரசாங்கம் இந்த பழத்தை உற்பத்தி செய்ய விவசாயிகளை ஊக்குவித்து ...,அதனை மதிப்புக்கூட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முயற்சி செய்யவேண்டும்.,!இதனால் நமக்கு அதிகப்படியான அன்னிய செலாவணி கிடைக்க வாய்ப்பிருக்கிறது..!
செய்யுமா நமது அரசாங்கம்.....?????!!!!

No comments:

Post a Comment