Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, April 19, 2015

சூப்பரான சிக்கன் 65


தேவையான பொருட்கள்: 
இஞ்சி சிறு துண்டாக நறுக்கியது               5
உரித்த வெள்ளைப்பூண்டு பல்                    7
தனி மிளகாய்ப் பொடி                                  3 ஸ்பூன்
மஞ்சள் பொடி                                                1/2 ஸ்பூன் 
கேசரி பவுடர் (ஆரஞ்சு)                                1சிட்டிகை
கட்டித் தயிர்                                                   1/4 கப்
சுத்தம் செய்த கோழிக் கறி                          1/2 கிலோ
உப்பு தேவையான அளவு
பொறித்தெடுக்கத் தேவையான எண்ணெய்
தயார் செய்யும் முறை: 
இஞ்சி , வெள்ளைப்பூண்டு இரண்டையும் மிக்சியில் நைசாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
அரைத்த விழுதை சுத்தம் செய்த கோழிக் கறியாடு சேர்த்து மேலும் மிளகாய்ப் பொடி , மஞ்சள் பொடி , கலரு்காக கேசரிப் பொடி மற்றும் தயிர் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசறி ஒரு மணி நேரம் ஊர வைக்க வேண்டு்ம்.
அடுப்பில் வடை சட்டியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி பிசறி வைத்த கோழிக் கறியை மிதமான சூட்டில் பொறித்தெடுக்க வேண்டும்.
சூப்பரான சிக்கன் 65 ரெடி.
நறுக்கிய எலுமிச்சை துண்டுகள் , வட்டமாக வெட்டிய பெரிய வெங்காயம் இவற்றோடு சேர்த்து பறிமாறவும். செய்து பாருங்கள் கட்டாயம் பாராட்டுவார்கள்.
(கடையில் பல பெயர்களில் விற்கும் சிக்கன் மசாலா பவுடர்களை வாங்கிப் பயன் படுத்துவதை விட நாமே எளிய முறையில் செய்து ருசித்து சாப்பிடலாமே.)

No comments:

Post a Comment