Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, April 27, 2015

நுரையீரலை சுத்தப்படுத்தும் உணவுகள் :-

பல்வேறு காரணிகளால் காற்று மாசுபாட்டில் ஏற்பட்டுள்ள பன்மடங்கு உயர்வு, மிகக் கடுமையான சுவாசக் கோளாறுகளுக்கு வித்திட்டு நுரையீரலுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது.


கடும் சுவாசப்பாதை கோளாறு, வயது முதிர்ந்தோரின் இறப்புகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. நுரையீரலை ஆரோக்கியமாக வைக்கும் சில உணவுகளை பார்க்கலாம். இந்த உணவுகள் நுரையீரல் நலனை ஊக்குவிப்பதோடு, காற்று மாசுபாடு மற்றும் புகைப்பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து காத்துக் கொள்ள, இவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.

மாதுளைப் பழங்கள் நுரையீரலில் கட்டிகள் தோன்றுவதைத் தடுக்கக் கூடியவை. மூச்சுப் பிரச்சனைகளையும் தீர்க்கக் கூடிய ஒரு அற்புதமான உணவு இது. ஆப்பிள்களில் ஃப்ளேவோனாய்டுகள் மற்றும் வைட்டமின் ஈ, பி மற்றும் சி நிறைந்துள்ளன. இவையனைத்தும் சுவாச நலனில் நல்ல முன்னேற்றத்தைத் தரக்கூடியவை.

கேரட்டுகள் சுவாசக் கோளாறுகளை சரிசெய்ய உதவுகின்றன. இவற்றில் வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்து காணப்படுவதால், நுரையீரல் நலனைப் பேணுவதில் மிகவும் உதவுகின்றன. வால்நட்ஸ், பாதாம் மற்றும் ஹாசில் நட்ஸ் உள்ளிட்ட பருப்புகள் உடற்கூறுக் கேட்டைத் தடுப்பதுடன், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ளன.

இவை நுரையீரலை சுத்தம் செய்யும் சத்தான உணவாகும். இவற்றில் அடங்கியுள்ள அதிக அளவு புரதம் உடலுக்கு உரத்தை அளிக்கிறது. ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி சத்து அதிகளவில் உள்ளது. புகைப்பிடிப்போர் உண்ண வேண்டிய ஒரு அருமையான பழம் இது. நுரையீரல் ஆக்ஸிஜனை நன்கு உள்ளிழுக்கும் திறனை அதிகரிப்பதில் இவை முக்கிய பங்காற்றுகின்றன.

No comments:

Post a Comment