Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, April 8, 2015

வெயிலு.. வெயிலு.. வெயிலம்மா!


ஜில்லுனு சில டிப்ஸ்
வ ந்தாச்சு கோடை! ‘மழையா பெய்தது!’ என்று வியக்கும் வண்ணம் எங்கும் தெப்பலாக நனைந்தபடி நடமாடுகிறார்கள் மக்கள். ‘வெயிலடிச்சா வேர்க்கத்தான் செய்யும்’ என்று சாதாரணமாக விட்டுவிட முடியாது. உடலின் நீர்ச்சத்து அளவுக்கதிகமாக வெளியேறிவிட்டால், ‘சன் ஸ்ட்ரோக்’ பாதிப்பு ஏற்பட்டு, உயிருக்கே ஆபத்து நேரலாம்.
இந்தக் கோடை வெப்பத்தில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்வது எப்படி? இந்த நேரத்தில் எந்த அளவுக்கு தண்ணீரோடு நாம் ஐக்கியமாகியிருக்கவேண்டும்? இதோ, விளக்குகிறார்... சென்னை - ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் எஸ்.கே.ராஜன்.

சாதாரணமாகவே ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்தவேண்டும். கோடைக்காலத்தில் வியர்வை, உடல் வெப்பம் ஆகியவை அதிகரிப்பதால், குடிக்கும் தன்ணீரின் அளவை இருமடங்கு ஆக்கிக் கொள்ளவேண்டியது அவசியம்.
தண்ணீரை நன்கு காய்ச்சி, ஆற வைத்துக் குடிப்பதே நல்லது. ஃப்ரிட்ஜில் வைத்துக் குடிப்பதற்கும், ஐஸ் க்யூப்ஸ் தயாரிப்பதற் கும் கூட காய்ச்சிய தண்ணீரையே உபயோகியுங்கள்.
முடிந்தவரை மினரல் வாட்டர் அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது. மினரல் வாட்டராக இருந்தாலும், குறிப்பிட்ட சில நாட்களுக்கு மேல் அந்த தண்ணீரில் உள்ள வைரஸ் கிருமிகள் பெருகி, உடலுக்கு தீங்கை விளைவிக்கும் வாய்ப்பு உள்ளது.
உடலில் உஷ்ணம் அதிகமாகி நீர்ச்சத்து குறையும்போது, ’சன் ஸ்ட்ரோக்’ ஏற்பட வாய்ப் புண்டு. இவர்களுக்கு குடிக்க நிறைய தண்ணீர் கொடுக்க வேண்டும். மெல்லிய துணியில் ஐஸ் கட்டிகளை வைத்து, உட லில் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
உஷ்ணத்தால் ஏற்படும் கண் ஒவ்வாமை நோய், நீச்சல் பயிற்சி பெறும் குழந்தைகளுக்கு, நீச்சல்குளத் தண்ணீரில் உள்ள கிருமிகளால் அதிகரிக்க வாய்ப்புண்டு. எனவே, அதிக நேரம் நீச்சல் பயிற்சி வேண்டாம்.
கோடையில் அதிக நேரம் வேகமாக நடப்பது, ஓடுவது, உடற்பயிற்சி செய்வது போன்றவற்றால் வியர்வை அதிகம் வெளியேறி, உடலின் தண்ணீர் சத்து குறைந்துவிடும். இதற்கு கலோரி குறைவாக உள்ள பானங்கள் அல்லது தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில், தசைப் பிடிப்பு ஏற்பட்டு வலி உண்டாகும்.
கர்ப்பிணிப் பெண் களுக்கு கோடையில் உட லின் வெப்பம் அதிகமாவ தால். நீர்ச்சுருக்கு ஏற்பட்டு, சிறுநீரக உள் உறுப்புகள் பாதிக்கப்பட்டு சொட்டு சொட்டாக சிறுநீர் பிரிதல், எரிச்சல் ஆகியவை ஏற்படும். இதற்கு அதிக தண்ணீர் குடிப்பதுதான் சிறந்த மருத்துவம்.
தண்ணீருக்கு பதிலாக பழச்சாறு, நீர்மோர், இளநீர், கஞ்சி, கூழ் போன்ற பானங்களை அருந்தலாம். குளிர்பானங்களை விடவும் பழச்சாறு நல்லது. இளநீரில் பொட்டாஷியம் அதிகம் உள்ளது.
காய்ச்சல், சளி, ஜலதோஷம் இருந்தாலும் தண்ணீர் குடிப்பதை நிறுத்தவேண்டாம். சளி, ஜலதோஷம் உள்ளவர்கள் கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீர் அருந்தவேண்டும்.
குழந்தைகள் விளையாடிவிட்டு வந்ததும், தண்ணீர் கொடுக்கலாம். ஆனால், ஐஸ் வாட்டர் வேண்டாம்.
தலை குளித்ததும், தலையை நன்கு துவட்டிவிட வேண்டும். ஈரம் சொட்ட சொட்ட இருப்பது, தலையை காயவிடாமல் வெயிலில் செல்வது ஆகியவை நல்லதல்ல.

No comments:

Post a Comment