Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, May 17, 2015

தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கேடானதா?

தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கேடானதா? சூரியகாந்தி எண்ணை சாப்பிடலாமா?

முன்பு எல்லாம் என்ன சொன்னார்கள்? தேங்காய் முழுக்க கொழுப்பு. அதனால் தேங்காய் எண்ணெய் சாப்பிடக்கூடாது. சூரியகாந்தி எண்ணெய்யில் சமையல் செய், கர்டி ஆயிலில் சமை, சோயா ஆயிலில் சமை என்றார்கள்.



தேங்காய் முழுக்க இருப்பது சாச்சுரேட்ட பேட் (உறைந்த கொழுப்பு). கெமிக்கல் மூலம் எண்ணெய் வித்துக்களில் இருந்து எடுக்கும் எண்ணெயில் இருப்பது பாலி அன் சேச்சுரேட்டட் பேட் என்ற உறையாத வகை கொழுப்பு. உறைந்த கொழுப்பு கொலாஸ்டிராலை அதிகரிக்கும் என்றார்கள். உறையாத கொழுப்பு கொல்ச்டிராலை குறைக்கும் என்ரார்கள். அதை நம்பி பலரும் பாரம்பரியமா உன்டு வந்த தேங்காய் எண்னெய் ச்மையலை நிறுத்திவிட்டு சூரியகாந்தி, எண்னெய்வித்துக்களுக்கு மாறினார்கள்.

ஆனால் இந்த அறிவாளிகள் சொல்லாமல் விட்ட விஷயம் தேங்காய் எண்ணெய் அதிகரிப்பது நல்ல கொல்ஸ்டிராலை என்பதை. நல்ல கொல்ஸ்டிரால் உங்கள் ரத்த நாளங்களில் இருக்கும் கெட்ட கொலஸ்டிராலை மீண்டும் லிவருக்கு கொன்டுபோய் ஜீரணம் செய்வித்துவிடும். அந்த நல்ல பணியை செய்யும் எச்டிஎல் கொலஸ்டிஆரலை தேங்காய் எண்னெய் அதிகரிக்கும். அந்த நல்ல கொலச்டிராலை எண்னெய் வித்துக்களில் இருந்து எடுக்கும் எண்னெய்கள் குறைக்கும்.

மேலும் தேங்காயில் இருக்கும் கொழுப்பு லாரிக் அமிலம் என்ற வகை கொழுப்பு. இது தேங்காய்பாலுக்கு அடுத்து மனிதனுக்கு கிடைக்கும் ஒரே சோர்ஸ் தாய்ப்பால் தான்!!!!!!!

தாய்ப்பால் மூலம் ஒரு குழந்தைக்கு தினம் 1 கிராம் லாரிக் அமிலம் கிடைக்கும். மூன்று ஸ்பூன் செக்கில் ஆட்டி எடுத்த தேங்காய் எண்ணெய்யை உன்டால் அல்லது ஏழெட்டு தேங்காய் துன்டுகளை இது மனிதனுக்கு கிடைக்கும். இத்தனை அற்புதமான ஒரு பொருளை சாப்பிடவிடாமல் தடுத்து பாக்டரியில் இருந்து எடுக்கும் ஹைட்ரஜனேட்டட் எண்னெய்களை உண்ண வைத்ததன் பலன் அவற்றில் ட்ரான்ஸ்ஃபேட் எனும் வகை ஆபத்தான கொழுப்பு சேர்ந்து இதய அடைப்புகளுக்கும், மரணங்களுக்கும் காரணம் ஆகிவிட்டது.

1 comment: