Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, May 24, 2015

பால் பணியாரம்


என்னென்ன தேவை?
பச்சரிசி -1 ஆழாக்கு
உளுத்தம் பருப்பு-3/4 ஆழாக்கு
சர்க்கரை-100கிராம்
பால்- 1/2லிட்டர்
எண்ணெய்- 1/4 லிட்டர்
உப்பு- 1சிட்டிகை
எப்படி செய்வது?


அரிசியையும் உளுந்தையும் ஊறவைத்து அதிகம் தண்ணீர் இல்லாமல் நைஸாக அரைத்துக்கொள்ளவும். எண்ணெய்யைக் காயவைத்து அதில் அரைத்த  மாவை கோலி அளவுள்ள உருண்டைகளாக உருட்டி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். பாலுடன் சிறிதளவு நீர் சேர்த்து காய்ச்சி  சர்க்கரையை கலக்கவும். பரிமாறுவதற்கு சற்று முன் பொரித்து வைத்துள்ள பணியாரங்களை வெந்நீரில் கொட்டி உடனே எடுத்து பாலில் போடவும்.  அதிகம் ஊறினால் பணியாரம் கரைந்து போகும்.

No comments:

Post a Comment