Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, August 8, 2015

சீனிமிட்டாய் என்ற வீதிமிட்டாய் என்ற சுத்துமிட்டாய்.





       


          திருநெல்வேலி மாவட்டத்திற்கு உரியசிறப்பு இனிப்பு பலகாரம் இதுவீதி மிட்டாய்,தேங்காய் எண்ணெய் மிட்டாய்சுத்து மிட்டாய்,சீனிமிட்டாய்என்றெல்லாம்இதைக்குறிப்பிடுவர்ஆரம்ப கட்டத்தில்திருவிழாக் காலங்களில் வீதிகளில்முளைக்கும் திடீர் மிட்டாய் கடைகளில்விற்பனை செய்யப்பட்டதால் இது வீதிமிட்டாசிஆனது.
கருப்பட்டியில் செய்த இந்த மிட்டாய் துண்டைஇரண்டாக உடைத்தால் நடுவில் குழல் போன்றபகுதியிலிருந்து கருப்பட்டிப்பாகு தேன் போலஒழுகும்அதனால் தேன் ஒழுகும் மிட்டாய்என்று குறிப்பிடப்பட்ட இது காலப்போக்கில்தேங்காய் எண்ணெய்மிட்டாசி என்று திரிந்துபோனதுசுட்டு தட்டில் வட்டமாய்  சுற்றிஅடுக்கப்படுவதால் இது சுத்துமிட்டாசி ஆனது.சீனிபாகுவில் தோய்ப்பதால் சீனிமிட்டாசிஇந்தபழமையான இனிப்புமுன்னர் கருப்பட்டியில்தயார் செய்யப்பட்டது 
                      ஒரு காலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் பனைமரங்கள் அதிகம் இருந்தன.அதனால் இந்த பகுதியில் பனைபடு பொருளானகருப்பட்டியின் பயன்பாடு அதிகம்.காலப்போக்கில் பனைமரங்கள் குறைந்துபோயினகூடவே கருப்பட்டி உற்பத்தியும்தான்.உற்பத்தியில்லாமல் அதன் விலை உயர்ந்தது.எனவே இப்போது கருப்பட்டிக்குப் பதில்சர்க்கரைஅதாவது சீனிதான் பயன்படுத்தப்படுகிறது.. மற்றபடி செய் முறை,சேர்மானங்கள் மாறவில்லை. பண்டிகைகாலங்களில் வீடுகளில் செய்து சுவைக்கப்பட்டஇந்த இனிப்பு காலப்போக்கில் கடைகளில்விற்பனைக்கு வந்தது.
செய்யும் முறை:
தோல் அகற்றிய உளுந்தை  அதாவதுகுத்துப்பருப்பை திருகையில் வைத்து திரித்துமாவாக்க வேண்டும்மாவில் புளிப்புத் தன்மைஏற்ற முதல் நாள் இரவு, 100 கிராம் உளுந்துமாவை கெட்டியாகப் பிசைந்து வைக்கவேண்டும்மறுநாள் புளிக்க வைத்த மாவோடுகூடுதலாக 100கிராம் உளுந்து மாவு சேர்த்து,அதோடு கிலோ பச்சரிசி மாவைக் கொட்டி,தோசை மாவு பதத்தைவிட சற்று மேலானகுழைவில் அடித்துப் பிசைய வேண்டும்இந்தக்கலவை மணி நேரம் புளிக்க வேண்டும்.   

அடியில் காலணா அளவுக்கு சிறிய ஓட்டைபோட்ட பித்தளை அல்லது வெண்கலச் சொம்பு தான் இந்த மிட்டாசியை வார்க்கும் வார்ப்புக்கருவி.        சுத்து மிட்டாய்           வார்க்க, 2 அடுப்பும், 4 ஆட்களும் தேவை. ஒரு அடுப்பில் கடலை எண்ணெய் இன்னொருஅடுப்பில் பதமான சர்க்கரைப் பாகு.   எண்ணெய் சூடேறிய பின்  வார்ப்பு சொம்பில் மாவை ஊற்றிஎண்ணெய்  சட்டியில் பூ வடிவத்தில் சுற்ற வேண்டும்.. சட்டியின் விளிம்பை ஒட்டியேசுற்றினால் தான் வட்டமாக அடுக்கி அழகு செய்ய முடியும் மேலும்,சுற்று பொடிச்சுற்றாக இருக்க வேண்டும்..  .  
                    வெந்து  வெண்மை மாறா நிலையில்அள்ளிஅதே சூட்டோடு அருகில் கொதிக்கும் சர்க்கரைப் பாகில் போட வேண்டும். இரண்டு நிமிட பாகுக் குளியலுக்கு பின்  அதே வேகத்தில் அள்ளி, தட்டில் வட்டவடிவமாக அடுக்கிமேல் புறத்தில் பெயிண்ட் அடிக்கிற பிரஷால் பாகைத்தொட்டு பூசவேண்டும்.  இது தான்அடுக்கும் தொழில்நுட்பம்இப்போதுதயாராகிவிட்டது தேன் ஒழுகும் வீதி மிட்டாசி.சுவைத்துப் பார்த்தவர்களால் அதன் சுவையைஒரு போதும் மறக்கவே முடியாது 

No comments:

Post a Comment