ஓய்வில்லாமல் துடிக்கும் இதயம் தொடர்பான பல தகவல்களை நம்மிடையே
பகிர்ந்துகொள்கிறார்கள் இதய நோய் நிபுணர் ஜே.கே.பெரியசாமி, இதய மருத்துவர்
காஞ்சனா காசிநாதன் மற்றும் டாக்டர் டி.சதீஷ் காந்தி. இதய நோய்களுக்கான
அறிகுறிகள், தடுப்பு முறைகள், சிகிச்சைகள் எனப் பல தகவல்களும் இந்த
இணைப்பில் இடம்பெறுகின்றன. படியுங்கள்; பயன்பெறுங்கள்.
தாயின் கருவில் இருக்கும்போதே குழந்தையின் இதயத்தில் குறைபாடுகள் தோன்ற
வாய்ப்பு அதிகம் இருக்கிறது. பிறவிக் குறைபாடுகள் மற்றும் வளர்ந்த பிறகு
வருகின்ற நோய்கள் என இதய நோய்களை இரண்டு வகைப்படுத்தலாம்.
பிறவிக் குறைபாடுகள்
வளர்ந்த பிறகு ஏற்படும் இதய நோய்கள்
பள்ளி செல்லும் வயதில் உள்ள குழந்தைகளைப் பாதிக்கும் நோய் 'சரவாங்கி’
(Rheumatic Heart Disease).வளர்ந்துவரும் நாடுகளிலும் மக்கள்தொகை அதிகம்
உள்ள நாடுகளிலும் இந்த நோய் பரவலாக இருக்கிறது.
சிகிச்சை முறை:
சிகிச்சைக்குப் பிறகு:
மாரடைப்பு நோய்
உயிர் இழப்புக்கு முக்கியக் காரணமாக இருப்பது மாரடைப்பு நோய். எல்லா
வயதினரையும் எல்லாத் தரப்பினரையும் தாக்கும் நோய் இது. கிட்டத்தட்ட 40
சதவிகிதம் மனித உயிர் இழப்புக்குக் காரணமாவது மாரடைப்புதான். ஆண்டுதோறும்
50 லட்சம் பேர் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். ஆனாலும் உரிய விழிப்பு
உணர்வும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டால், மாரடைப்பின்
பாதிப்பில் இருந்து நிச்சயம் நம்மைக் காத்துக்கொள்ளலாம்.
காரணங்கள்:
மாரடைப்பு நோய் திடீரென்று தோன்றுவது அல்ல. 20 ஆண்டுகளானாலும் எந்த விதமான அறிகுறிகளும் இல்லாமலேயே இருக்கும் நோய்.
உயர் ரத்த அழுத்தம், அதிகக் கொழுப்புச் சத்து, சர்க்கரை நோய்,
புகைபிடித்தல், மன அழுத்தம் போன்றவற்றால்கூட ரத்த நாளத்தின் உட்சுவர்
பாதிக்கப்படுகிறது. உட்சுவர் கரடுமுரடாகி, அதன் மீது ரத்தத்தில் மிதக்கும்
கொழுப்புத் திவலைகள் படிந்துகொண்டே வரும். ரத்த ஓட்டத்துக்கான பாதை
குறுகலாகி, ரத்த ஓட்டம் தடைபடும். பிறகு இதய நாளத்தில் விறைப்பு அல்லது
உறைகட்டி ஏற்பட்டால், ரத்த ஓட்டம் முழுவதுமாகத் தடைபடும். இதயத் தசைக்கு
ரத்த ஓட்டம் தடைபடுவதால், அவை செயலிழக்கின்றன. புகைபிடித்தல், அதிகமாக
உணர்ச்சிவசப்படுதல், அளவுக்கு அதிகமானக் கடின உழைப்பு போன்றவற்றால், இது
ஏற்படலாம். அடைப்பு அதிகமாகும்போது, இறுக்கம் அல்லது தீவிர மாரடைப்பு
ஏற்படுகிறது.
மாரடைப்பு நோய்க்கான அறிகுறிகள்:
ஒருவர் ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கும்போது, அவருடைய ரத்த நாளங்களில் 50
சதவிகிதம் அடைப்பு இருந்தால்கூட இதயத்துக்குத் தேவையான சுத்த ரத்தம்
கிடைத்துவிடுகிறது. அதனால் அவருக்கு எந்த விதமான அறிகுறியும் தெரியாது.
பரிசோதனை முறைகள்
முதலில் இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்படும்.அதன்பிறகே, தேவையான ஆய்வுக்கூடப் பரிசோதனைகள் பரிந்துரைக்கப்படும்.
ஈ.சி.ஜி (இதய மின் வரைபடம்)
இதயம் சுருங்கும்போது ஒவ்வொரு துடிப்பிலும் மின் அலைகள் உடல் முழுவதும்
பரவுகின்றன. இந்த மின் அலைகளைக் கருவி மூலம் பதிவு செய்வதே ஈ.சி.ஜி. இதயத்
துடிப்பு சீராக இருக்கிறதா என்பதை இதன் மூலம் அறிந்துகொள்ளலாம். இதய நோய்
உள்ள ஒரு சிலருக்கு ஈ.சி.ஜி - இல் மாறுபாடுகள் இல்லாமல்கூட இருக்கும்.
மார்பு எக்ஸ்ரே
இதயம் விரிந்துள்ளதா என்பதையும், நுரையீரலின் ரத்த ஓட்டம் மற்றும் செயலாற்றும் தன்மையையும் கண்டறியலாம்.
அடிப்படை ரத்தப் பரிசோதனைகள்
அடிப்படையான ரத்தப் பரிசோதனைகள் செய்வதன் மூலம், ரத்தத்தில் உள்ள
சர்க்கரை அளவு, கொழுப்பின் அளவு, ரத்த அணுக்களின் அளவு, ஹீமோகுளோபின் அளவு,
யூரியா, கிரியாட்டின் ஆகியவற்றின் அளவுகள் பரிசோதிக்கப்படும். இவை மூலம்
இதய நோய்களை உருவாக்கும் இதரக் குறைபாடுகள் உள்ளனவா என்பதையும், சிறுநீரகம்
மற்றும் நுரையீரல் ஆகியன பாதிக்கப்பட்டு இருக்கின்றனவா என்பதையும்
தெரிந்துகொள்ளலாம்.
சிறப்பு ரத்தப் பரிசோதனைகள்
மாரடைப்பு நோயால் ரத்தத்தில் ஏற்படும் மாறுதல்களைக் கண்டறிய 'சி.பி.கே -
எம்.பி’ ((cpk-mb - creatine phosphokinase myocardial band)என்ற பரிசோதனை
செய்யப்படும். கிரியாட்டின் ஃபாஸ்போகைனேஸ் என்ற என்ஸைம் அளவு
பரிசோதிக்கப்படும். மாரடைப்பு இருந்தால் இதன் அளவு ரத்தத்தில்
அதிகரித்திருக்கும்.
இதேபோல ட்ரோபோனின் 'டி’ பரிசோதனையும், மாரடைப்பு நோய்க்கான குறிப்பிட்ட மாறுதல்கள் ஏற்பட்டு உள்ளனவா என்பதைக் கண்டறிய உதவும்.
எக்கோ கார்டியோகிராம் பரிசோதனை
இதயத்தின் அமைப்பு மற்றும் அதன் செயல்திறன் கண்டுபிடிக்கப்படும்.
பிறவியிலேயே இதயத்தில் கோளாறுகள் இருந்தாலும் அவற்றைக்
கண்டுபிடித்துவிடலாம்.
டிரட்மில் பரிசோதனை
சில நோயாளிகளின் இதயத்தில் உள்ள அடைப்புகள் அவர் வேகமாக நடப்பது போன்ற
செயல்களில் ஈடுபடும்போதுதான் கண்டறிய முடியும். டிரட்மில் என்ற
எந்திரத்தில் நோயாளியைச் செயற்கையாக நடக்கவைத்து இதயத் துடிப்பு மாறுதல்களை
நுணுக்கமாக ஈ.சி.ஜி. மூலம் கண்டறியும் பரிசோதனை இது.
ஆஞ்சியோகிராம் பரிசோதனை
ரத்தக் குழாயில் ஏற்பட்டு உள்ள அடைப்புகள், சுருக்கங்கள் மற்றும் அவற்றின் நீளம் ஆகியவற்றைக் கண்டறியும் பரிசோதனை இது.
கை அல்லது தொடைப்பகுதியில் இருக்கும் ரத்தக் குழாய் வழியாக, சோதனைக்
குழாயைச் செலுத்தி, இதயத்துக்குச் செல்லும் ரத்த நாளங்கள் எக்ஸ்-ரே
உதவியுடன் படம் பிடிக்கப்படுகின்றன. தற்போது குறைந்த செலவில் பின்விளைவுகள்
இல்லாத வகையில் அனைத்துத் தரப்பினருக்கும் செய்யப்படுகிறது. இந்தப்
பரிசோதனையை மேற்கொண்டவர்கள் நான்கு மணி நேர ஓய்வுக்குப் பிறகு வீடு
திரும்பலாம்.
கதிர் இயக்கப் பரிசோதனை
(நியூக்ளியர் ஸ்கேன்)
இதய நோயாளிகளுக்குக் கதிரியக்கம் உள்ள ரசாயனப் பொருட்களைக் கொடுத்து
பரிசோதனை செய்யப்படும். இதன் மூலம் இதயத் தசைகள் எந்த அளவுக்கு
பாதிக்கப்பட்டு இருக்கின்றன என்பதை அறியலாம். பழுதடைந்த தசைகளையும் நல்ல
நிலையில் இயங்கும் தசைகளையும் பிரித்து அறியவும் முடியும். ரத்தக் குழாய்
அடைப்பால் எந்த அளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பதையும்
கண்டுபிடித்துவிடலாம்.
முதலுதவி
சி.பி.ஆர். முதலுதவி
தீவிர இதய சிகிச்சை
பலூன் சிகிச்சை முறை (ஆஞ்சியோபிளாஸ்டி)
ஒன்று அல்லது இரண்டு ரத்தக் குழாய்களில் ஒரு குறுகிய இடத்தில் அடைப்பு
இருந்து, மாரடைப்பு ஏற்பட்டிருந்தால், அதை ஆஞ்சியோகிராம் மூலம் உறுதி
செய்துகொண்டு, ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்வார்கள்.
இந்த சிகிச்சையில் நோயாளிக்கு மயக்க மருந்து கொடுக்கப்படுவது இல்லை.
இதயத்தில் உள்ள ரத்தக் குழாய் அடைப்பை 0.014 அங்குல தடிமன் உள்ள கம்பியினால் கடந்து,
அதன்
மேல் ஒரு பலூனைச் செலுத்தி, அடைக்கப்பட்ட ரத்தக் குழாய்
விரிவுபடுத்தப்படும். இந்தக் குழாய் மீண்டும் சுருங்காமல் இருக்கவும்,
ரத்தக் குழாய் துவாரத்தை அதிகப்படுத்தவும் பாதிக்கப்பட்ட இடத்தில் ஒரு
கம்பிவலை பொருத்தப்படும். இதற்கு 'ஸ்டென்ட்’ (stent )என்று பெயர்.
அறுவைசிகிச்சை முறைகள்
மூன்று ரத்தக் குழாய்களில் அடைப்பு அதிகமாக இருந்தாலோ, இதயத்தின் பெரிய
ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு பலூன் சிகிச்சைக்கு உகந்ததாக
இல்லாவிட்டாலோ, அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்படும். மருந்துகள் மூலமாக,
ஆஞ்சியோபிளாஸ்டி மூலமாக குணப்படுத்த முடியாத வேறு சிக்கல்கள் இருக்கும்
நோயாளிகளுக்கும் அறுவை சிகிச்சையே ஏற்றது.
பைபாஸ் அறுவைசிகிச்சை எவ்வாறு செய்யப்படுகிறது?
அடைபட்ட ரத்தக் குழாயின் அடைப்பைத் தாண்டி நல்ல பாகத்துடன், இதயத்தில்
இருந்து ரத்தத்தை வெளியே எடுத்துப்போகும் மகா தமனிக்கு ஓர் ரத்தக் குழாய்
இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது. இந்த இணைப்பு நாளம் காலில் இருந்தோ அல்லது
இடது கையில் உள்ள ரத்தக் குழாயில் எடுக்கப்படும்.
சிகிச்சைக்குப் பிறகு கடைப்பிடிக்க வேண்டியவை
பழைய நிலைக்குத் திரும்ப நான்கு முதல் ஆறு வாரங்கள் வரை ஆகலாம்.
செயற்கை இதயம்
இந்தியாவிலேயே, சென்னையில் மட்டும்தான் செயற்கை இதய வசதி உண்டு.
'எக்ஸ்ட்ரா கார்போரியல் மெம்பரேன் ஆக்சிஜனேஷன்’ என்பதன் சுருக்கம்தான்
எக்மோ. உடலுக்கு வெளியே இருந்து இதயம் மற்றும் நுரையீரல் பணியைச் செய்வது
என்று அர்த்தம். ரத்த அழுத்தக் குறைவு, மாரடைப்பு போன்ற சமயங்களில்
இதயத்தின் செயல்பாடு பாதிக்கப்படும். சில மணி நேரங்களில் உயிரிழப்பு
ஏற்படக்கூடும் என்ற அச்சம் உருவாகும்போது, 'எக்மோ’ கருவியைப் பயன்படுத்தி
உயிரைக் காப்பாற்ற முடியும். இந்த கருவியைப் பயன்படுத்தும்போது மூளை
செயல்படும். மற்றவர்களுடன் பேசலாம். கருவி பொருத்தியிருக்கும் நேரத்தில்
இதயம் மற்றும் நுரையீரலின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கான சிகிச்சையும்
அளிக்கப்படும். சிகிச்சை பலன் அளிக்காதபோது இதய மாற்று அறுவை சிகிச்சை
செய்யப்படும். ஹார்ட்-லங் கருவி மூலம் மூன்று மணி நேரத்துக்கு மேல்
ஒருவருக்கு ரத்த ஓட்டம் அளிக்க முடியாது. 'எக்மோ’ கருவியை மாற்று இதயம்
கிடைக்கும் வரை பயன்படுத்தலாம்.
பேஸ்மேக்கர்
நம்முடைய உடல் முழுவதும் ரத்தத்தைக் கொண்டுசெல்ல இதயம் துடிக்க
வேண்டும். இதயம் துடிக்க அதன் உள்ளேயே ஒரு மினி ஜெனரேட்டர் உள்ளது. இது
இதயத்தின் ஒவ்வோர் அறைக்கும் மின்சாரத்தைக் கொண்டுசென்று இதயத்தைத்
துடிக்கச் செய்யும். இதயத்தில் போதுமான அளவில் மின்சாரம்
உற்பத்தியாகாவிட்டால், இதயத்துடிப்பு குறைந்துவிடும். இதனால் உடல்
முழுவதும் ரத்தம் செல்வது பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். இந்த
நிலையில் நோயாளிக்குச் செயற்கை இதயத் துடிப்பு அளிக்கும் பேஸ்மேக்கர்
கருவி பொருத்தப்படும். தற்போது நவீன வசதிகளுடன்கூடிய பேஸ்மேக்கர் கருவிகள்
வந்துவிட்டன.
இதய நோயாளிகளுக்கான உணவு முறைகள்
சரியான உணவுக்கட்டுப்பாடு இல்லாததே மாரடைப்பு,
சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கான முக்கியமான காரணங்கள்.
அதிகமான கொழுப்புச் சத்து உள்ள உணவுகளைச் சிறு வயதில் இருந்தே கட்டுப்பாடு
இல்லாமல் சாப்பிட்டு வந்தவர்களுக்கு ரத்தத்தில் அதிகக் கொழுப்பு
சேர்வதற்கு வாய்ப்பு உண்டு.
இதயம் காக்கும் உணவுகள்
கடைப்பிடிக்கவேண்டியவை:
தவிர்க்க வேண்டியவை:
சீரான எடை சிறப்பான ஆரோக்கியம்!
இதமான உடற்பயிற்சிகள்
இதய நோயாளிகள் என்று உறுதி செய்யப்பட்டவர்களும், 40 வயதுக்கு மேற்பட்ட
ஆண்களும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகே
உடற்பயிற்சிகளில் ஈடுபடவேண்டும்.
நடைப்பயிற்சி
வாரத்துக்கு 120 நிமிடங்கள் வேகமாக நடப்பது என்ற உடற்பயிற்சியே பொதுவாக மருத்துவரீதியாகப் பரிந்துரைக்கப்படுகிறது.
நடக்கும் ஒவ்வொரு நிமிடமும் வாழ்நாளில் ஒன்றரை நிமிடத்தை அதிகரிக்கிறது.
தினமும் 20 முதல் 30 நிமிடம் நடந்தால், ஆண்டொன்றுக்கு சுமார் 4.5 கிலோ வரை
கூடுதல் எடையைக் குறைக்க முடியும்.
'நடப்பதெல்லாம்’ நன்மைக்கே...
ஏரோபிக் பயிற்சி
இதய நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனையின்பேரில் ஏரோபிக் எக்சர்சைஸ்
எனப்படும் விரைவாக நடத்தல், சைக்கிள் சவாரி, நீச்சல், கைப்பந்து, டென்னிஸ்
போன்றவற்றைச் செய்யலாம்.
சில சந்தேகங்களும், பதில்களும்
மாரடைப்புக்குப் பிறகு உடனே உடற்பயிற்சி செய்யலாமா?
மாரடைப்புக்குப் பிறகு உடற்பயிற்சியை மெதுவாகவும் சீராகவும்
கூடுதலாக்கிக் கொள்ளலாம். முதல் ஒரு வார கால ஓய்வுக்குப் பிறகு தினமும்
ஐந்து நிமிடங்கள் நடக்க முயற்சிக்கலாம்.
மாரடைப்பு நோயாளிகள் வாகனம் ஓட்டலாமா?
மாரடைப்பு ஏற்பட்ட ஒரு மாத காலத்துக்கு மோட்டார் சைக்கிள், கார் போன்ற வாகனங்கள் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.
விமானத்தில் செல்லலாமா?
மருத்துவர் மற்றும் விமான முகவர்களிடம் கலந்து ஆலோசிக்கவேண்டும். சில
விமான நிறுவனங்கள் மாரடைப்பு ஏற்பட்ட பிறகு, மூன்று மாதங்கள் வரை நோயாளிகளை
வரவேற்பதில்லை.
மாரடைப்புக்குப் பிறகு தாம்பத்திய வாழ்வில் எப்போது ஈடுபடலாம்?
குறிப்பிட்ட கால அளவு ஏதும் இல்லை. சிரமம் இன்றி உடற்பயிற்சி செய்யும்
நிலை ஏற்படும் வரை (உதாரணமாக இரண்டு மாடிகளில் ஏறி இறங்குவது) தாம்பத்ய
வாழ்வைத் தள்ளிப்போடுவது நல்லது.
மாரடைப்புக்குப் பிறகு எப்போது வேலைக்குத் திரும்பலாம்?
பொதுவாக நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை ஓய்வில் இருப்பது நல்லது.
கடினமான வேலை செய்பவர்கள் அலுவலகப் பணி செய்பவர்களைவிட அதிக நாட்கள்
ஓய்வில் இருக்க வேண்டும்.
யோகா
ஆரோக்கியமான உடலையும் மகிழ்ச்சியான மனதையும் தருவது யோகாதான். ஆசனங்கள்,
மூச்சுப்பயிற்சி மற்றும் தியானம் போன்றவற்றை உள்ளடக்கிய யோகாவை முறையாகப்
பயின்று பயிற்சி செய்துவந்தால் அற்புதமான நன்மைகளைப் பெறலாம்.
பலன்கள்:
இதயம் காப்போம்... இன்பம் காண்போம்!
No comments:
Post a Comment