Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, November 16, 2014

காஃபி (Coffee)


காஃபி (Coffee) இதை நாம் அனைவரும் விரும்பி அருந்தும் பானம். இந்தக் காஃபி எங்கிருந்து தோன்றியது தெரியுமா? எதியோப்பியாவில்தான் முதன் முதலில் காஃபிச் செடிகள் தோன்றின.  

   ஆனால் ஒரு செவி வழி கதை பரவலாக உண்டு கதையின் படி, ஆப்பிரிக்காவில் உள்ள எத்தியோப்பியா நாட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த   சிலர் ஒரு நாள் சில ஆடுகள் அதிக ஆட்டத்துடன் உலாவி வந்ததையும், இரவிலும் தூங்காமல் இருந்ததையும் கண்டு வியந்தார்கள். ஆடுகள் ஏன் அப்படி நடந்து கொள்கிறது அவர்களுக்கு தெரியவில்லை மறு நாளும் ஒரு குறிப்பிட்ட செடியின் இலை, காய்களை சாப்பிட்டு சுறு சுறுப்பாக இருந்தது அதுதான் காப்பிச் செடி. ஆடுகள் காஃபிச் செடி இலைகளையும் பழங்களையும் உண்டதால்தான் இப்படி அதிக விழிப்புடனும் ஆற்றலுடனும் இருந்ததெனக் கண்டு தாங்களும் அவ்வாறே உண்டு காப்பியின் சிறப்பான உணர்வூட்டும் தன்மையை உணர்ந்தனர். இது கி.பி. 9 ஆம் நூற்றாண்டிலேயே நிகழ்ந்திருக்க வேண்டும்.
     700 ஆண்டுகளுக்கு முன்னர், எதியோப்பியாவிலிருந்து ஏமன் நாட்டுக்கும் பிற அரபு நாடுகளுக்கும் காப்பிச் செடி கொண்டுபோகப்பட்டது. அரபு வியாபாரிகள்தான் காஃபி விதைகளை (400 ஆண்டுகளுக்கு முன்னர்) ஆசியா கண்டத்துக்கும் இந்தியா, இலங்கை மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் விற்பனைக்காகக் கொண்டு சென்றனர். 1727-ம் ஆண்டு பிரேசில் நாட்டில்தான் முதல் காஃபி எஸ்டேட் நிறுவப்பட்டது.
   இந்தியாவுக்கு காஃபி வந்தது ஒரு சுவையான வரலாறு: 1720-ம் ஆண்டு பாபா புதான் என்பவர் மெக்காவுக்குச் சென்று வரும்போது 7 காஃபி விதைகளைக் கொண்டு வந்தார். கர்நாடகாவிலுள்ள சிக்மகளூர் கிராமத்தில் தனது நிலத்தில் இந்த விதைகளை விதைத்தார். இந்தியக் காஃபிச் செடிகள் அனைத்தும் இந்த 7 விதைகளிலிருந்துதான் தோன்றின. பிற்காலத்தில் ஆங்கிலேயர்களால் நீலகிரி மலைப் பகுதியில் காஃபி எஸ்டேட்டுகள் ஏராளமாக நிறுவப்பட்டன. இன்றும் இது தொடர்கிறது.
         காஃபி (Coffee) என்பது பலரும் விரும்பி அருந்தும் ஒரு நீர்ம உணவு (பானம்). ஆரம்பக் காலத்தில் பானமாக இல்லாமல் வெறுமனே காப்பி இலைகளைச் சுவைத்துக் கொண்டிருந்தார்கள்.
காஃபி என்னும் செடியில் விளையும் சிவப்பு நிற காஃபிப் பழத்தின் கொட்டையை பக்குவமாய் வறுத்து, பிறகு அரைத்துப் பொடி செய்து அதன் வடிநீராக பாலுடன் சேர்த்தோ அல்லது சேர்க்காமலோ பெரும்பாலும் சூடாக அருந்தும் நீர்ம உணவு காஃபி ஆகும். இந்தியாவில் பலரும் பாலுடனும் சிறிது சர்க்கரை (சீனி) சேர்த்துக் குடிப்பார்கள். மேற்கு நாடுகளில் பால் இல்லாமலும், சர்கரை இல்லாமலும் கசப்பான கரும் காஃபியாகக் குடிக்கிறார்கள். சர்க்கரை சேர்த்துக் குடித்தாலும் காஃபி சற்று கசப்பான நீர்ம உணவுதான் (பானம்தான்). ஒரு குவளை (தம்ளார்) (200 மில்லி லிட்டர்) காஃபி குடித்தாலே அதில் 80-140 மில்லி கிராம் வரை காஃவீன் என்னும் போதைப் பொருள் இருக்கும்   இந்த காஃவீன் என்னும் போதைப் பொருள் இருப்பதால் காஃபி குடிப்பவர்கள் ஒருவகையான பழக்க அடிமைத்தனத்திற்கு உள்ளாகிறார்கள்.வ்

No comments:

Post a Comment