Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, October 20, 2013

நீரிழிவு நோய் மற்றும் இரத்த கோளாறு நீங்க பாகற்காய்




காய்கறி வகைகளில் பாகற்காய் மருத்துவத்தில் சிறந்து விளங்குகின்றது..

இரத்த கோளாறுகள்

பாகற்காயை ஜீஸ் செய்து சாப்பிட்டு வந்தால் இரத்த கொதிப்பு, இரத்த கொதிப்பு காரணமாக உண்டாகும் அரிப்பு மற்றும் இரத்த கோளாறு போன்ற வற்றிற்கு பாகற்காய் சிறந்த மருந்தாகும். இரண்டு ஸ்பூன் பாகற்காய் சாறுடன் எலுமிச்சை சாறு கொஞ்சம் சேர்த்து நான்கு முதல் ஆறு மாதங்களுக்கு வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடல்நிலையில் மாற்றம் ஏற்படும். இரத்த கொதிப்பு இரத்த கோளாறுகள், போன்றவைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

பெண்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுகள்


ஆரோக்கியமான பெண்களால் தான் ஆரோக்கியமான சந்ததியை உருவாக்க முடியும். ஆனால் இன்றைக்கு பெரும்பாலான பெண்கள் ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்காத காரணத்தினால் நீரிழிவு, இதயநோய், ரத்த சோகை போன்றவைகளுக்கு ஆளாகின்றனர்.சரிவிகித சத்துள்ள உணவுகளை உட்கொண்டாலே பெரும்பாலான நோய்களை தவிர்த்து விடலாம்.
குடும்பத்தை பற்றிய சிந்தனையாலும், பணிச் சூழலாலும் பெண்களுக்கு தங்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த முடியாமல் போய்விடுகிறது.

மன அழுத்த பிரச்னைக்கு தீர்வாகும் ஏலக்காய்




வாசனைப் பொருட்களின் அரசி என்று வர்ணிகப்படுவது ஏலக்காய். சமையலில் வாசனைக்காக சேர்க்கப்படும் ஏலக்காய் அசைவ உணவுகளுக்கு கூடுதல் சுவை சேர்க்கக்கூடியது.ஏலக்காயில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்களான போர்னியோல், கேம்பர், பைனின், ஹீயமுலீன், கெரியோ பில்லென், கார்வோன், யூகேலிப்டோல், டெர்பினின், சேபினின் ஆகியவற்றின் காரணமாக அதில் அரிய மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன.

கல்லீரலை வலுவாக்கும் துளசி




கல்லீரலில் பிரச்சனை உள்ளவர்களுக்கு தண்ணீர் உணவுகள் எது சாப்பிட்டாலும் வாந்தி வரும். ஏனெனில் இவர்களுக்கு கல்லீரல் வேலை செய்யவிலலை என்றால் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று அறிந்துகொள்ள வேண்டும் . கல்லீரல் பாதிப்பை போக்க நாட்டு மருந்துக்கடையில் கிடைக்கும் சதகுப்பை 100 கிராம், சோம்பு 100 கிராம் வாங்கி இரண்டையும் தனித்தனியே லேசாக வறுத்து, இடித்து சூரணம் செய்து, சலித்து எடுக்கவும்.

மாதுளை

வேறுபெயர்: தாடிமம், பீசபுரம், மாதுளங்கம், மாதுளம், மாதுளுங்கம்
தாவரவியற் பெயர்: Punica granatum

ஆங்கிலப் பெயர்: Pomegranate
இது மரகுவப்பைச் சேர்ந்தது, முக்கியமாக ஆப்கானிஸ்தான், பாரசீகம் முதலிய   இடங்களில் அளவு கடந்து வளர்கின்றது. இலங்கை இந்தியாவில் எல்லா இடங்களிலும் பயிரிடப்பட்டு வருகிறது. இதில் இனிப்பு மாதுளை, புளிப்பு மாதுளை, பூமாதுளை என்று 3 வகுப்புகளுண்டு. இதன் பூ, பிஞ்சு, பழம், விதை, பட்டை, வேர் என்பன மருத்துவத்தில் பயன்படுகின்றன. பொதுவாக குருதி வாந்தி, வயிற்றுக்கடுப்பு, வெப்பம், குருதி மூலம் இவை போம் . இது குருதியைப் பெருக்கும் வன்மையைத் தரும். பிஞ்சினால் கழிச்சல் வகைகள் யாவும் போம். பழத்தினால் சுரத்தில் காணுகின்ற வாந்தி நீர்வேட்கை, வாய்நீர் ஊறல் என்பன தீரும். இதன் மருத்துவப் பயன்பாடுகளாவன;

பல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் முருங்கை


பச்சைக் கீரைகளில் எவ்வளவோ எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன. நாம் தான் அதனை முறையாகப் பயன்படுத்துவதில்லை.கீரை வகைகளை உணவோடு சேர்க்கச் சொல்லி சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதையர்கள். கீரை வகைகளில் இரும்புச் சத்து கணிசமாக உள்ளது.
முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய் இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.

கர்ப்பத்துக்கு ஏற்ற வயது என்ன?


20 முதல் 30 வயது பருவம் கர்ப்பத்திற்கு ஏற்றது. நிரந்தர நோயால் பாதிக்கப் பட்டிருக்கும் பெண்களும் நீண்ட நாட்களாக ஏதாவது நோய்க்கு மருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பெண்களும்
கர்ப்பமாக விரும்பினால் அதுபற்றி முதலில் தங்களுக்கு சிகிச்சை அளிக்கும்  டாக்டரிடம் ஆலோசனை பெற்று அதன்படி நடக்கவேண்டும்.

கர்ப்பமான உடன் டாக்டரை சந்திக்கவேண்டுமா?
ஆமாம் அந்த சந்திப்பு முக்கியமானது.ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் அதற்காக எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கைகளை டாக்டர் கூறுவார். அதன் மூலம் கர்ப்பகுழந்தை ஊனமாவதை தடுக்கும் போலிக் ஆசிட் மாத்திரைகளை முதலிலே சாப்பிடத் தொடங்கிவிடலாம்.

மருத்துவ குணம் நிறைந்த பேரிக்காய்



பேரிக்காய் மலைப் பகுதிகளில் விளையக்கூடியது . வெளித் தோற்றத்திற்கு பச்சை காய் போல் தோன்றும். ஆனால் இது சுவைமிகுந்த பழங்களில் ஒன்று. பேரிக்காய் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும் பழமாகும். பேரிக்காயை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கிடைக்கும்.  இதில் ஏ, பி, பி2, என வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இரும்பு சத்து, சுண்ணாம்புச் சத்து, கணிசமான அளவு உள்ளது.

மருத்துவ குணம் மிகுந்த நாவல் பழம்


நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம்சமாகும். நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால்

இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும். மேலும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும்.

சீரகத்தின் பயன்கள்



தினமும் வீடுகளில் பல வகைகளில் சமையலுக்குப் பயன்படும் 'சீரகம்', வாசனைப் பொருட்களில் தனி இடம் பெற்றுத் திகழ்ந்தாலும், ஒரு சிறந்த இயற்கை மருந்தாக அனேக வழிகளில்நமக்கு உபயோகப்படுகிறது. இத்தாவரத்தின் விதைகள்தான் நாம் பயன்படுத்தும் சீரகம். பண்டக்காலத்திலிருந்தேஇந்தியாவில் சீரகம் எளிய மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மலரும் மருத்துவமும் வாழைப் பூ...


            பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத்தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க மாட்டோம். பூக்களின் மருத்துவக் குணங்களைக் கொண்டு பல நோய்களைக் குணப்படுத்தியுள்ளனர் சித்தர்கள். தற்போது மலர் மருத்துவமாகவே மேல் நாடுகளில் சிகிச்சை செய்து வருகின்றனர்.

அம்மை நோய்…

சித்திரை மாதம் பிறந்துவிட்டது. கோடை வெயிலும் தாக்க ஆரம்பித்துவிட்டது. கோடைக்காலத்து சூரியன் கொடுமையால் நிலம் சூடடைவது போல் நம் உடலும் வெப்பத்திற்கு ஏற்ப மாறுதல் அடையும். இந்த மாறுதல்கள் நிகழும்போது ஒரு சில நோய்கள் நம்மை தாக்கக்கூடும். அதில் முதன்மையாக வருவது அம்மை நோயே.
இதனை முன்னோர்கள் கொள்ளை நோய் என்றனர். ஆனால் தற்காலத்தில் இது வைரஸ் கிருமியால் உண்டாகிறது என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் இதனைப் பற்றி சில அறியாத தகவல்களைத் தெரிந்துகொள்வோம்.

கழுத்து வலி…


எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்பது சித்தர்களின் முதுமொழியாகும். மனிதனின் இயக்கங்கள் அனைத்திற்கும் உள்ள சூட்சும பகுதிதான் சிரசு. இத்தகைய சக்திகள் அனைத்தையும் தன்னுள் அடக்கி பல கோடிக் கணக்கான அணுக்களைக் கொண்ட பந்து போல தோற்றமளிக்கும் சிரசை தாங்கி நிற்பது கழுத்துப் பகுதிதான். கழுத்து உடலின் முக்கிய உறுப்பாகும். கழுத்தில்தான் முக்கிய நாடி நரம்புகள் நெருக்கமாக செயல்பட்டுக்கொண்டு இருக்கும். உடலுக்கும் சிரசுக்கும் இரத்தம் மற்றும் நரம்புகள் பிரயாணம் செய்கின்றன. கழுத்தின் மையமாக தண்டுவட எலும்புகள் உள்ளன. இதில் ஏழு எலும்புகள் உள்ளன. அந்த எலும்பு சட்டத்தைச் சுற்றி தசைகளும், தசை நார்களும் உறுதி கொடுக்கின்றன. இந்த கழுத்து எலும்பிலிருந்து தான் கைகளுக்கு போகும் நரம்புகள் வெளிவருகின்றன.

சினைப்பை நீர்க்கட்டி…


சினைப்பையில் சிறு சிறு கட்டிகள் காணப்படும் நிலையை சினைப்பை நீர்க்கட்டிகள் என்று கூறுவர். பெண்கள் கருத்தரிப்பதில் சிரமங்கள் ஏற்படுவது பரவலாக காணப்படுகிறது. இதற்கு சினைப்பை நீர்க்கட்டிகள் 10 சதவீதம் காரணமாக இருப்பதாக மருத்துவ ஆராய்ச்சி தகவல்கள் கூறுகின்றன. கருத்தரிக்க முடியாமல் போகும் பெண்கள் குடும்பத்திலும், சமூகத்திலும் நித்தமும் பல எண்ணற்ற போராட்டங்களை சந்திக்கின்றனர்.

முதுகு: வலியின்றி வாழ வழி உண்டு…


வாழ்க்கையில் ஒருதடவையாவது முதுகுவலியை அனுபவிக்காத மனிதர்கள் யாருமே இருக்க முடியாது! அதுவும் நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒரு முறையாவது `ஆ… அம்மா…’ என்று சப்தமிட்டு, முதுகு வலியால் வேதனைப்பட்டிருப்பார்கள்.
முதுகுவலி என்றதும் நம் நினைவுக்கு வருவது, மற்ற நகரும் உயிரினங்களிடமிருந்து வேறுபடுத்தும், மனிதனின் முதுகெலும்புத் தொடர். இது ஒரே ஒரு தனி எலும்பு அல்ல. 33 எலும்புகள், தசைகள், தசை நார்கள், நாண்கள் ஆகியவை மிகவும் நேர்த்தியுடன் இணைந்த தொடர் சங்கிலியாகும். இந்த சங்கிலித் தொடரின் “தொடர்ந்த சேவை”, மனிதனுக்கு மிகத் தேவை !

பற்கள்: இறுதிவரை உறுதி பெற…


- வைட்டமின் `சி’ சத்து குறைபாடு!
- மது அதிகமாக அருந்துதல்!
- சத்துள்ள உணவுகளை சாப்பிடாமல் இருத்தல்… போன்றவைகளால் பல் ஈறு நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புண்டு.
சிகரெட், `பான்’, புகையிலை, பல்குச்சி உபயோகம் இவைகளும் ஈறு நோயை உண்டுபண்ணும். சொத்தைப் பல், பல்லில் பெரிய ஓட்டை, செயற்கைப் பல் செட் சரியாக பொருந்தாமை, பற்கள் வரிசையாக சீராக இல்லாமை, இவைகளும் ஈறு நோயை உண்டு பண்ணும். சர்க்கரை வியாதி, கர்ப்பத்தடை மாத்திரைகள் சாப்பிடுதல் இவைகளும் ஈறுநோயை உருவாக்கும்.

மூச்சில் முன்னூறு விஷயம்

- மூச்சு வாங்குது.
- மூச்சு திணறுது.
- மூச்சுவிட கஷ்டமா இருக்கு.
- மூச்சு நின்னுடுச்சு.
இப்படி மூச்சு, மூச்சு என்று அடிக்கடி எல்லோரும் சொல்வதை, நீங்களும் கேட்டிருப்பீர்கள். மூக்கு வழியாக காற்றை உள்ளிழுத்து, வெளியே விடுவதைத்தான் `மூச்சு’ என்று சொல்லிப் பழகிவிட்டோம். இதையே `சுவாசித்தல்’ என்றும் நாம் சொல்வதுண்டு.
நம்மை அறியாமலே, இயற்கையாக, தன்னிச்சையாக, சுவாசித்தல் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், அதைப் பற்றி நாம் யாரும் கண்டுகொள்வதில்லை. கணக்கில் எடுத்துக் கொள்வதும் இல்லை.

புற்று நோய்: – ஏன்? – எப்படி?


- புற்று நோய்.
- `யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். எப்போது வேண்டுமானாலும் வரலாம்’ என்று பலரையும் பயமுறுத்திக் கொண்டிருக்கும் நோய் இது!
- ஆனால் உண்மையில் இது பயப்பட வேண்டிய நோய் அல்ல. விழிப்புணர்வுடன் இருக்கவேண்டிய நோய். தொடக்கத்திலே கண்டுபிடித்தால் 95 சதவீதம் குணப்படுத்தி நிம்மதியாக வாழ முடியும். இந்த நோய்க்கு இப்போது வியக்கவைக்கும் அளவிற்கு நவீன நோய் கண்டுபிடிப்பு கருவிகளும், நவீன ஊசி மருந்துகளும் உள்ளன. அதனால் தரமான சிகிச்சையால் உயிர் பிழைத்து, நலமாக வாழ வாய்ப்பிருக்கிறது. ஆனால் அறிகுறிகளை அலட்சியப்படுத்திவிட்டு கண்டுகொள்ளாமலே இருந்தால் மட்டுந்தான் இது ஒரு ஆபத்தான நோயாக ஆகிவிடுகிறது.

சிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்!

காரத்தன்மைக்குக் காரணம்… அதில் உள்ள ‘அலைல் புரோப்பைல் டை சல்பைடு’ என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. அதன் பலன்களை இங்கே பார்ப்போம்,
* முருங்கைக்காயைவிட அதிக பாலுணர்வு தரக்கூடியது வெங்காயம்தான். தினமும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், பாலுறவுத் திறத்தோடும் வாழ்ந்ததாக ஒரு நபர் கின்னஸில் இடம் பிடித்திருக்கிறார்.

ரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கும் நல்லெண்ணைய்


எள்ளில் இருந்து ஆட்டி எடுக்கப்படும் நல்லெண்ணைய்யை அதிகம் பயன்படுத்துபவர்கள் நாம். இது வெளிப்பூச்சுக்கும், உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. தென்னிந்தியாவில் அதிகமாக சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணை இதுதான். இந்தியா, சீனா, துருக்கி போன்ற நாடுகளில் எள் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. எள்ளில் வெள்ளை எள், கறுப்பு எள், சிவப்பு எள் என்ற மூன்று வகை உண்டு. மேலும் காட்டெள், சிற்றெள், பேரெள் போன்ற வகைகளும் உண்டு.

ஆயுளை அதிகரிக்கும் ஆலிவ்..!


சின்ன சின்ன உணவுப் பொருட்கள் மூலம் நாம் சிறப்பான பலன்களை பெறமுடியும். நமது வீட்டில் உள்ள உணவுப் பொருட்களின் மகத்துவத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
* வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.

செயற்கை “பேஸ் மேக்கர்’ இயங்குவது எப்படி?

பேஸ் மேக்கர் பணி இயற்கையாக நடைபெறவில்லை எனில், செயற்கை பேஸ் பேக்கர் பொருத்த வேண்டியுள்ளது. இது ஒரு ரூபாய் அளவுள்ள மருத்துவக் கருவி. குறைந்த இதயத் துடிப்பை அதிகமாக்க, உடலில் பொருத்தப்படும் கருவி.

பசிக்க 7 வழிகள்

ருசியான உணவுகளைக்கூட சாப்பிட விடாமல் செய்யும் பிரச்சினைதான் `பசியின்மை’. இதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. பசியை அதிகரித்து, உணவுகளை விரும்பி சாப்பிட நீங்கள் உணவுப் பழக்கத்தில் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் இங்கே…
* நல்ல உடல்நலத்துக்கு 40-க்கு மேற்பட்ட ஊட்டச் சத்துக்கள் அவசியம். எனவே உங்கள் உணவு தினமும் ஒரே வகையானதாகவோ, ஒரு வேளையில் ஒரே உணவு மட்டுமோ இருக்கக்கூடாது. தினசரி உணவுடன் கூடுதலாக பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள் மற்றும் இறைச்சி, கோழி, மீன் மற்றும் பிற தானிய உணவுகள் இவைகளில் ஏதாவது ஒன்றிரண்டை கூடுதலாக சேர்த்து சாப்பிடுங்கள்.

தோல் நோய்களைப் போக்கும் கஸ்தூரி மஞ்சள்


கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது. அடிபட்ட வலிகளுக்கும், மூக்கில் வரும் நோய்களுக்கும், குன்ம வயிற்று வலிக்கும், கட்டிகள் உடையவும், தேமலைப் போக்கவும் கஸ்தூரி மஞ்சள் பயன்படுகிறது. மேலும், இது மணம் தரும் வாசனைப் பொடிகள் தயாரிக்கவும், குளிக்க உதவும் தைலங்களில் சேர்க்கவும் பயன்படுகிறது.  இளம் பெண்களில் சிலருக்கு முகத்தில் ஆண்களைப் போல மேலுதட்டின் மீது முடி வளர்வதுண்டு. இதைப் போக்க கஸ்தூரி மஞ்சளைப் பொடித்து அல்லது குழைத்து முகத்தில் பூசிக் கழுவி வந்தால் முடி வளர்வது தடைப்படும். முகத்தில் பொலிவு ஏற்படும்.

ஆரோக்கியமான முறையில் அழகாக ஜொலிக்க சில சூப்பர் டிப்ஸ்!!!


என்றென்றைக்கும் அழகாக காட்சியளிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு ஆண் மற்றும் பெண்ணின் மனதில் குடிக்கொண்டிருக்கும் கனவாகும். சருமத்தையும், தலை முடியையும் உடலுடன் சேர்த்து முறையாக பராமரித்தால், அழகும் தோற்றமும் பலமடங்கு கூடும். அழகு மேம்பட பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் கூட அதற்கு பாடுபடுவது இயல்பாக நடப்பது தான். இன்றைய காலகட்டத்தில் சந்தையில் பல அழகு சாதனங்கள் குவிந்துவிட்டன. ஆனால் அவைகளை பல பொருட்களில் இரசாயனங்கள் கலந்துள்ளதால், அவை ஆரோக்கியத்தை பாதித்துவிடும். அப்படி ஆரோக்கியம் கெட்டுப் போகாமல் இருக்க இயற்கை முறையை தேர்ந்தெடுங்கள். அழகான சருமத்தை பெறுவதற்கு பணத்தையும், நேரத்தையும் தண்ணீரை போல் செலவளிப்பவர்கள் பலர் உண்டு.