Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, October 20, 2013

மாதுளை

வேறுபெயர்: தாடிமம், பீசபுரம், மாதுளங்கம், மாதுளம், மாதுளுங்கம்
தாவரவியற் பெயர்: Punica granatum

ஆங்கிலப் பெயர்: Pomegranate
இது மரகுவப்பைச் சேர்ந்தது, முக்கியமாக ஆப்கானிஸ்தான், பாரசீகம் முதலிய   இடங்களில் அளவு கடந்து வளர்கின்றது. இலங்கை இந்தியாவில் எல்லா இடங்களிலும் பயிரிடப்பட்டு வருகிறது. இதில் இனிப்பு மாதுளை, புளிப்பு மாதுளை, பூமாதுளை என்று 3 வகுப்புகளுண்டு. இதன் பூ, பிஞ்சு, பழம், விதை, பட்டை, வேர் என்பன மருத்துவத்தில் பயன்படுகின்றன. பொதுவாக குருதி வாந்தி, வயிற்றுக்கடுப்பு, வெப்பம், குருதி மூலம் இவை போம் . இது குருதியைப் பெருக்கும் வன்மையைத் தரும். பிஞ்சினால் கழிச்சல் வகைகள் யாவும் போம். பழத்தினால் சுரத்தில் காணுகின்ற வாந்தி நீர்வேட்கை, வாய்நீர் ஊறல் என்பன தீரும். இதன் மருத்துவப் பயன்பாடுகளாவன;


சீதக் கழிச்சல் குணமாக

*பூவை உலர்த்திச் சூரணத்து அதில் 4 கி. எடுத்து வேலம் பிசின் தூள் 4 கி. அபின் 195 மி.கி. சேர்த்து வேளைக்கு 260390 மி.கி. வீதம் கொடுத்துவரலாம்.
*மாதுளம் பிஞ்சு, அதிவிடயம், முத்தக்காசு, பெரு மரத்தோல், சுக்கு, விளாங்காய்த் தசை இவை ஒவ்வொன்றிலும் 10 கிராம் எடுத்து ஒன்று சேர்த்து 1.3 லீற் நீர் விட்டு 150 மில்லிக்கு வற்றவைத்து பருகலாம்.
*மாதுளம் பழத்தோல் சுக்கு இவை வகைக்கு 15 கி. தண்ணீர் 2 படி விட்டுக் காய்ச்சி 1/8 ஆக வற்ற வைத்து வடிகட்டி 75 மி.லீ. குடிநீரில் சிறிது தேனும் கூட்டி காலை மாலை கொடுக்க பெருங்கழிச்சல் நிற்கும்.
* மாதுளம் பிஞ்சு, மாதுளம் துளிர், மாதுளம்பூ, இவைகளைத் தனித்தனியாக ஆவது (எலுமிச்சங் காய்ப் பிரமாணம்)  அல்லது ஒன்று சேர்த்தாவது அரைத்துத் தயிரில் கலக்கிக் கொடுக்க இரத்த பேதி சீதபேதி குணமாகும்.
மூல நோய்க்கு

மாதுளம் பூக்களை சுத்தம் செய்து 50 கிராம் எடுத்து அதே அளவு வேலம் பிசினையும் எடுத்து வெய்யிலில் காயவைத்து இரண்டையும் உரலில் போட்டு இடித்து சலித்து வைத்துக்கொண்டு வேளைக்கு 1 தே.க. சூரணத்துடன் 1 தே.கரண்டி தேனுடன் கலந்து தினம் காலை மாலை உட்கொண்டு வரலாம்.

குடற் புழுக்கள் அகல

மாதுளை மரத்து வேர்ப்பட்டையைக் கழுவி சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக்கி 1 கைப்பிடி அளவு எடுத்து ஒரு பாத்திரத்தில் இட்டு 200 மி.லீ. நீர் விட்டு நன்றாகக் காய்ச்சி கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி  காலை ஒருவேளை அருந்தினால் போதும்.
வாந்திக்கு

ஒரு லீற் மாதுளம் பழச்சாற்றுடன் 1 கிலோ கற்கண்டு, ஒரு லீற் பன்னீர், 1 கிலோ தேன் ஆகியவற்றைச் சேர்த்துக் காய்ச்சி பாகுபதமாக்கிக் கொண்டு வேளைக்கு 2 தே.க. வீதம் 2 வேளை நாள் தோறும் சாப்பிட நல்ல குணம் கிடைக்கும்.

இருமல் தணிய

*மாதுளை மொக்கு 25 கிராம் அளவு எடுத்து நைத்து  அத்துடன் 200 மி.லீ நீர் விட்டு நன்றாக காய்ச்சி கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி இரு பாகமாக்கி அத்துடன் 1 தே.க. தேன் கலந்து 3 வேளை அருந்தினால் போதும் இருமல் குணமாகும்.
பல்வலிக்கு

பழத்தோல் பொடி 17 கி., வெள்ளைப் போனம் 17 கிராம் சீமைச் சுண்ணாம்புத்தூள் (Prepared Chalk) 34 கிராம் சேர்த்துக் கலந்து பல் துலக்க பல்வலி தீரும்.

No comments:

Post a Comment