நரந்தம்பழம் எனப்படுவது செம்மஞ்சள் கோள வடிவ, சாறுள்ளப் பழ வகையாகும்.
நரந்தம்பழம் எனப்படுவது செம்மஞ்சள் கோள வடிவ, சாறுள்ளப் பழ வகையாகும். இது "தோடம்பழம்" எனவும் அழைக்கப்படுகிறது. நரந்தம்பழ மரங்கள் 10 மீட்டர் உயரம் வரை வளரும். இப்பழங்களில் C ஊட்டச்சத்து செறிவுடன் கிடைக்கும். நரந்தம்பழங்களில் B ஊட்டச்சத்தும், சாம்பரம் (potassium) உள்ளன. நரந்தம்பழம் வகைகளில் கமலாப்பழம் (Citrus reticulata/loose jacket orange), சாத்துக்குடி (Citrus sinensis/sweet orange/portugal orange), பம்பளிமாசு (Citrus maxima/pomelo/grapefruit), கிச்சிலிப்பழம் (Citrus aurantium/bitter orange) ஆகியவை பிரபலமானவை.
நரந்தம்பழங்களில் பல மருத்துவ ரீதியான நன்மைகள் உள்ளன. இப்பழங்கள் புண்களின் விரைவு ஆறல், இதய நலம், புற்றுநோய்த் தடுப்பு, முதுமை மந்தல் (de-aging) ஆகிய பண்புகளைக் கொடுண்டுள்ளன. இப்பழங்களில் B ஊட்டச்சத்து உடையதால் பிறவிக்குறைபாடுகள், இதயநோய்களை எதிர்க்கும் குணங்கள் கொண்டுள்ளன.
No comments:
Post a Comment