இன்று நாம் சற்று வித்தியாசமான கலவை சாதத்தைப் பார்க்க போகிறோம். இந்த கலவை சாதம் காலை வேளையில் செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதுடன், பேச்சுலர்கள் அனைவரும் செய்வதற்கு ஏற்றவாறு இருக்கும்.
அதுமட்டுமல்லாமல், இதில் நறுமணமிக்க மசாலா பொருட்கள் சேர்த்திருப்பதால், இது இன்னும் சுவையுடன் இருக்கும். சரி, இப்போது அந்த வெண்ணெய் மற்றும் குடைமிளகாய் சாதத்தை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்: சாதம் - 2 கப் குடைமிளகாய் - 1 (நறுக்கியது) பச்சை மிளகாய் பேஸ்ட் - 1 டீஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் முந்திரி - 1 டேபிள் ஸ்பூன் (நெய்யில் வறுத்தது) மிளகு தூள் - 1/2 டீஸ்பூன் பட்டை - 1 துண்டு துருவிய தேங்காய் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் நெய் - 1/2 டீஸ்பூன்
செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் மற்றும் வெண்ணெய் போட்டு உருகியதும், சீரகம், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் பட்டை மற்றும் பச்சை மிளகாய் பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்கி விட்டு, பின் நறுக்கி வைத்துள்ள குடைமிளகாயை போட்டு, தீயை குறைவில் வைத்து 4 நிமிடம் வதக்க வேண்டும். பின்பு அதில் உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து கிளறி, பின் சாதம் மற்றும் முந்திரியைப் போட்டு, நன்கு 2 நிமிடம் வதக்கி விட்டு, இறுதியில் தேங்காயை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான வெண்ணெய் மற்றும் குடைமிளகாய் சாதம் ரெடி!!!

No comments:
Post a Comment