மத்திய மரபு சாரா புதுப்பிக்கத்தக்க அமைச்சகம் நாட்டில் 25 சூரிய மின்னுற்பத்தி நிலையங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காக இதுவரை 12 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சகத்தின் இணைச் செயலர் தருண் கபூர் தெரிவித்தார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் 25 சூரிய பூங்காக்கள் அமைத்து அதன் மூலம் சூரிய மின்னாற்றல் உற்பத்தி 20 ஆயிரம் மெகாவாட்டாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சூரிய மின்னுற்பத்தி பூங்காக்கள் மூலம் 550 மெகாவாட் முதல் 1,000 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இப்போது சூரிய மின் னாற்றல் மூலம் 3,000 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யப்படு கிறது. 2022-ம் ஆண்டில் இதை ஒரு லட்சம் மெகாவாட்டாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு மாநிலங்களில் சூரிய பூங்காக்கள் அமைப்பதற்கான பணிகள் இறுதிக்கட்ட நிலையை எட்டியுள்ளதாக அவர் கூறினார். அமைச்சரவை ஒப்புதலுக்குப் பிறகு சூரிய மின்னுற்பத்தி பூங்காக் கள் அமைப்பற்கான ஏலம் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆந்திரம், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், கர்நாடகம், ராஜஸ்தான், ஒடிசா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் சூரிய மின்னுற்பத்தி பூங்காக்கள் அமைக்க ஆர்வம் தெரிவி்த்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.
ஆந்திரத்தில் 2,500 மெகாவாட், தெலங்கானாவில் 1,000 மெகாவாட் மத்தியப்பிரதேச மாநிலம் ஒவ்வொன்றும் 750 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு மின்னுற் பத்தி பூங்காக்கள் அமைக்க முன்வந்துள்ளாகவும், கர்நாடகம் 750 மெகாவாட் மின்னுற்பத்தி பூங்கா அமைக்க உள்ளதாகவும் அவர் கூறினார். ராஜஸ்தானில் 4 ஆயிரம் மெகாவாட் முதல் 5 ஆயிரம் மெகாவாட் மின்னுற்பத்தி பூங்கா அமைக்க இடத்தைத் தேர்வு செய்துள்ளாக அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment