சென்ற நிதி ஆண்டின் முதல் காலாண்டு நிலவரத்துடன் நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல்-ஜூலை காலாண்டு நிலவரத்தை ஒப்பிட்டு பார்க்கும்போது, சென்னை குடியிருப்பின் விலை 17% அதிகரித்திருப்பதாக நேஷனல் ஹவுஸிங் பேங்க் ரெஸிடெக்ஸ் இண்டெக்ஸ் தெரிவிக்கிறது. சென்னைக்கு அடுத்த இடத்தில் இருக்கும் அகமதாபாத்தில் இதே காலாண்டு அடைப்படையில் 14.5% குடியிருப்புகளின் விலை அதிகரித்திருக்கிறது. அதே போல சூரத் (13.38%), ஹைதரபாத் (13%), கொல்கத்தா (11.54%), புனே (10%) மற்றும் மும்பை (5%) ஆகிய நகரங்களில் குடியிருப்புகளின் விலை அதிகரித்துள்ளது.
சென்னை மற்றும் ஹைதராபாத் நகரங்களின் குடியிருப்புகள் இரண்டு இலக்க சதவிகிதத்தில் விலை உயர்வை சந்தித்த போதிலும், பெங்களூரு, கொச்சி, கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் ஒரு சதவிகிதம் விலை குறைவை சந்தித்துள்ளன. அதே போல விஜயவாடாவின் குடியிருப்பு விலை ஆறு சதவிகிதம் குறைந்துள்ளது.
மீரட் (15.8%), சண்டிகர் (8.3%), ஜெய்பூர் (7%) மற்றும் லூதியானா (6%) ஆகிய நகரங்களில் குடியிருப்பு விலை இறக்கம் அதிகமாக காணப்படுகிறது. தலைநகர் டெல்லியில் மூன்று சதவிகிதம் விலை குறைந்துள்ளது.
No comments:
Post a Comment