Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, January 9, 2015

30 நொடிகளில் பேட்டரியை சார்ஜ் செய்யும் புதிய சார்ஜர் கண்டுபிடிப்பு

T
லண்டன்,

இஸ்ரேல் நாட்டை சேர்ந்த 'ஸ்டோர் டாட்' நிறுவனம் நானோ டெக்னாலஜி மூலம் புதிய கருவிகளை கண்டுபிடித்து வருகிறது. இதுவரை பல புதிய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை வாங்கி வைத்திருக்கும் இந்த நிறுவனம் தற்போது 30 நொடிகளில் செல்போன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யும் புதிய வகை சார்ஜரை கண்டுபிடித்திருக்கிறது.


இந்த சார்ஜர் தற்போதுள்ள சார்ஜரை விட 100 மடங்கு வேகமாக சார்ஜை பூஸ்ட் செய்யும் சக்தி கொண்டது. 8 மாதங்களுக்கு முன்னதாகவே இதே போன்ற ஒரு கருவியை ஸ்டோர் டாட் நிறுவனம் சோதனை செய்து காட்டியது. ஆனால், அந்த கருவி நடைமுறையில் எளிதாக பயன்படுத்த முடியாத வகையில் தடிமனாகவும், அளவில் பெரியதாகவும் இருந்தது. எனினும், அதனை மறுஆய்வு செய்து மீண்டும் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய கருவி சிறியதாகவும் தற்போதுள்ள ஸ்மார்ட்போன்களுக்கு ஏற்றதாகவும் உள்ளது.

செல்போன் வரலாற்றிலேயே புதிய புரட்சியை ஏற்படுத்த காத்திருக்கும் இந்த சார்ஜரை சோதனை செய்து காட்டியுள்ளது ஸ்டோர் டாட் நிறுவனம். இந்த சோதனையை பி.பி.சி. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. செல்போன்கள் மட்டுமல்ல, டேப்லட்டுகள், லேப்டாப்கள், கைகளில் அணியும் ஸ்மார்ட் வாட்ச் போன்றவற்றின் பேட்டரியையும் நொடிகளில் நிரப்புகிறது இந்த சார்ஜர். இந்த சார்ஜரின் சோதனையை ஸ்டோர் டாட் கம்பெனியின் தலைவர் டோரோன் மையர்ஸ்டாப் பிபிசிக்கு செய்து காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment