எகிப்தின் ஃபாரோஸ் தீவின் அலெக்சாண்ட்ரியா நகரில் கட்டப்பட்ட கலங்கரை விளக்கம்தான் உலகின் முதல் கலங்கரை விளக்கம். பிரமிடுகள் மற்றும் பெரிய மாடக்கல்லறைகளுக்கு அடுத்தபடியாக, எகிப்தின் மிக உயரமான கட்டடமாக இந்த கலங்கரை விளக்கம் விளங்கியது.
ஏறக்குறைய 115 மீட்டரிலிருந்து 136 மீட்டர் வரை இதன் உயரம் இருந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த கலங்கரை விளக்கத்தின் அடிப்பகுதி சதுரமாகவும், நடுப்பகுதி எண்கோண வடிவத்திலும், உச்சிப்பகுதி உருண்டை வடிவத்திலும் இருந்தது. கலங்கரை விளக்கத்தின் அடித்தளம் சிவப்பு வர்ண க்ரானைட் கற்களால் அழகுற உருவாக்கப்பட்டிருந்தது. அது கடல் காற்றாலும், அலையின் சீற்றத்தாலும் சிதைவுறா வண்ணம் கிரேக்க கட்டடக்கலை நேர்த்தியுடன் வடிவமைக்கப்பட்டிருந்தது. மேல் பகுதியில் மிகப் பிரம்மாண்டமான கண்ணாடிகள் பதிக்கப்பட்டிருந்தன. பகல் நேரத்தில் சூரியனின் ஒளி பட்டு அவை ஒளிரும். அதன் மூலம் கலங்கள் கடற்கரையை அடையாளம் காண முடியும். இரவில் அங்கு அமைக்கப்படும் நெருப்பு உலையில் தீப்பந்தங்கள் கொளுத்தப்பட்டு எல்லாத்திசைகளிலும் தெரியும்படி வைக்கப்பட்டன. ஏறக்குறைய ஐந்நூறு ஆண்டுகள் கடல் பயணிகளுக்கு உறுதுணையாய் விளங்கிய அலெக்சாண்ட்ரியா கலங்கரை விளக்கத்தின் உச்சிப்பகுதி மட்டும் கி.பி. 796ல் திடீரென இடிந்து விழுந்தது. யுனெஸ்கோவின் தொல்லியல் துறை அலெக்சாண்ட்ரியாவை பழங்கால நகராக அறிவித்தது. அதன் கடல் பகுதியையும், கலங்கரை விளக்கம் இருந்த நிலப்பகுதியையும் சேதமடையாமல் கவனமாகக் கையாளும்படியும் யுனெஸ்கோ எகிப்து அரசை கேட்டுக்கொண்டுள்ளது.
No comments:
Post a Comment