201502251501514666_NASA-rover-clicks-stunning-selfie-on-Mars_SECVPFசெவ்வாய் கிரகம், நமது பூமி கிரகத்தைப் போன்று நுண்ணுயிரிகள் வாழ ஏற்ற கிரகமாக பார்க்கப்படுகிறது. இந்த செவ்வாய் கிரகத்தைப் பற்றிய ஆராய்ச்சியை பல நாடுகள் மேற்கொண்டுள்ளன. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘நாசா’, செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை இறக்கி உள்ளது. இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தின் படங்களையும், தகவல்களையும் ‘நாசா’வுக்கு அனுப்பி வருகிறது.அவற்றை இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விஞ்ஞானி அஸ்வின் வாசவதா தலைமையிலான விஞ்ஞானிகள் குழு ஆராய்ந்து வருகிறது.

செவ்வாய் கிரகத்தில் உள்ள ‘மவுண்ட் ஷார்ப்’ பள்ளத்தில்  மோஜோவி பகுதியில், இருந்து விண்கலம் செவ்வாய்கிரகத்துடன் சேர்த்து தனது செல்பி படத்தை எடுத்து அனுப்பி உள்ளது.இந்த பகுதியில் கியூரியாசிட்டி விண்கலம் 5 மாதம் வேலையில் ஈடுபடும். ‘மவுண்ட் ஷார்ப்’ 3 மைல் உயரமானது. இதன் கீழ் பக்கவாட்டுப்பகுதி பல நூறு பாறை அடுக்குகளைக் கொண்டதாகும்.201502251501514666_NASA-rover-clicks-stunning-selfie-on-Mars_SECVPF
பல செல்பி படங்களை கியூரியாசிட்டி எடுத்து அனுப்பி உள்ளது. இது குறித்து கலிபோர்னியாவை சேர்ந்த ரோவர் குழு உறுப்பினர்  ஜெட் புரபல்சன் ஆய்வகத்தை சேர்நத் காத்ரின் ஸ்டேக் கூறும் போது ”முந்தைய படங்களுடன் தற்போதைய செல்பி படங்களை ஒப்பிட்டோம். இந்த படங்கலீன்  பல பிரேம்களை நாங்கள் இணைத்தோம். இப்போது மலைகளின் பின்னணியில் விண்கலத்தை பார்க்க முடிந்தது என கூறினார்.”
இப்போது  மோஜோவ் 2 என்ற இடத்தில் விண்கலம் 2-வது துளைபோடும் பணியை தொடங்கி உள்ளது. இந்த மண் மாதிரி எடுத்து பூமியில் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.