மேட்டூர் அணை சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் என்னும் ஊரில் கட்டப்பட்டுள்ளதால் இந்த பெயரில் அழைக்கப்படுகிறது. ஆரம்பத்தில், மேட்டூரில் அணை கட்டுவதற்கு பிரிட்டீஷ் அரசு முயன்றது. ஆனால், அதற்கு அப்போதைய மைசூர் சமஸ்தானம் ஆட்சேபனை தெரிவித்ததால், பிரிட்டீஷ் அரசாங்கம் தனது முயற்சியை கைவிட்டது.
அணையை கட்ட தொடர்ந்து மைசூர் சமஸ்தானம் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், தஞ்சை மாவட்ட விவசாயிகள். புயல் மற்றும் வெள்ளத்தால் ஏற்படும் சேதங்களுக்கு இழப்பீடாக ஆண்டுதோறும் 30 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என மைசூர் சமஸ்தானத்திற்கு நோட்டீஸ் அனுப்பினர்.
ஒருசவரம் நகை 30 ரூபாய் என விற்பனையாகி வந்த அந்தக்காலக்கட்டத்தில் ஆண்டுக்கு 30 லட்சம் என்பது மிகப்பெரியத் தொகை என்பதால் மேட்டூரில் அணைக்கட்ட மைசூர் சமஸ்தானம் ஒப்புதல் அளித்தது. மைசூர் சமஸ்தானத்தின் ஒப்புதல் கடிதம் கிடைக்கப்பெற்றவுடன், 1924ஆம் ஆண்டு பொறியாளர் ஸ்டேன்லி என்பவர் மூலம், 10ஆயிரத்திற்கும் அதிகமான பணியாளர்களுடன் அணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கின.
ஏறக்குறைய 10ஆண்டுகளில் கட்டிமுடிக்கப்பட்ட இந்த அணை, அதன் பொறியாளரின் நினைவாக ஸ்டேன்லி நீர்த்தேக்கம் என்றும் அழைக்கப்படுகிறது. 1934 ஆம் ஆண்டு இது கட்டிமுடிக்கப்பட்ட போது ஆசியாவின் மிக உயரமான அணையாக மேட்டூர் அணை விளங்கியது. இந்த அணையின் மொத்த நீளம் ஆயிரத்து 700 மீட்டர். உயரம் 120 அடி. கொள்ளளவு 93.4 டி.எம்.சி.
No comments:
Post a Comment